திங்கள், ஜூன் 19, 2023

நாகத்தி 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4 
திங்கட்கிழமை

திருவையாற்றுக்கு  (சனிக்கிழமை 17/6)  வந்த காவிரி நீரை, இறையன்பர்கள் மலர்கள் தூவி வணங்கி வரவேற்றனர்..

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 

தொடர்ந்து, 16/6 அன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது..

கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் நுங்கும் நுரையுமாக
திருவையாற்றை வந்தடைந்தபோது, புஷ்ய மண்டபப் படித்துறையில், காவிரிக்கு பால் அபிஷேகித்து தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தியுடன்  பூஜைகள் செய்து, மலர் தூவி திருவையாற்று தேவாரப் பதிகங்களைப் பாடி வரவேற்றனர்..

இயற்கையும் வேளாண்மையும் செழித்து அனைத்து உயிர்களும் நல்லபடியாக வாழ்வதற்கு நாமும் 
வேண்டிக் கொள்வோம்..
***

அழகிய வேம்புடைய ஐயனார் கோயிலின் கிழக்கில்
தொன்மையான  நிலை வாசல்.. 

ராஜகோபுரம் அமையப் பெறவில்லை.. 

திருவாசலுக்கு அருகிலேயே ஸ்ரீ மகா கணபதி, பூரண புஷ்கலா சமேத ஹரிஹர புத்திர ஸ்வாமி, நாகர் திருமேனிகள்..

நாமே வழிபட்டுக் கொள்ளலாம். எவ்விதத் தடையும் இல்லை.. இங்கு வந்த பிறகே இதெல்லாம் தெரிந்தன..

கோயிலுக்கு மறுமுறை  வரும்போது கவனத்தில் கொள்வோம்..  

கோயிலின் தலைவாசல் கிழக்கு நோக்கி இருந்தாலும் ஐயனாரின் சந்நிதி ( மூலஸ்தானம்) மேற்கு நோக்கியதாகும்.. 


வாசலில் நந்தி வாகனம் அமைந்திருக்கின்றது..

ஐயனார் கோயிலுக்கு அருகே சோழர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது. 


அந்த சிவாலயம் இன்று இல்லை என்றாலும் , அந்தக் கோயிலில் இருந்த கணபதி, முருகன், மூல லிங்கம், அம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர்  திருமேனிகள் தான் - வேம்புடைய ஐயனார் கோயிலின் முகமண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளன..


ஐயனார் - பூதநாதன் என்று விளங்குபவர்.. 

அற வழியில் நிற்போர்க்கும் அண்டி வந்து அடைந்தோர்க்கும் பிரபஞ்ச மூர்த்தியாகிய அவரே எல்லாமும்..

ஊரின் காவல் நாயகனும் அவரே ஆனதால் அவருடன் யானை, குதிரை , வேட்டை நாய் - ஆகியனவும் காணப் பெறும். 

நன்றி - அகில்
அந்த வகையில் மூலத்தானத்தினுள் ஐயனின் பீடத்தில் வலப்புறத்தில் நாயும் இடம் பெற்றுள்ளது..

வேம்புடைய ஐயனார் இடக்கையை பீடத்தில் ஊன்றி இடக்காலைத் தொங்க விட்டு குத்திட்ட முழங்காலின் மேல் வலக் கையை வைத்து பக்கவாட்டில் நீட்டிய வண்ணம் அருள் பாலிக்கின்றார்...

நன்றி - அகில்
ஐயனின் இடப்புறத்தில் ஸ்ரீ பூர்ணகலா தேவி  வலக் கரத்தில் தாமரை மலருடன் நின்ற திருக்கோலத்தில்  விளங்குகின்றாள்..

ஹரிஹரபுத்திரனைக் கைதொழுது வணங்குகின்றோம்.. கசிந்து உருகுகின்றது மனம்..

அஞ்சேல்.. அஞ்சேல்!.. - எனும் அருட்குரல் காதுகளில் கேட்கின்றது..

அதற்கு மேல் வேறென்ன வேண்டும்?..

திருக்கோயிலில் நாளும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.. பௌர்ணமி நாட்களில் திதியை அனுசரித்து ஐயனாருக்கு சிறப்பு அபிஷேகம்..  அன்ன தானமும் நடைபெறுகின்றது..

மதியத்திற்குப் பிறகு மூன்று மணி வரையிலும் கோயில் திறந்திருக்கின்றது..

வேம்பு..

சமய நம்பிக்கை உடைய நாமெல்லாம் அறிந்திருக்கும் அற்புத விருட்சம்.. 

வேப்பமரம் தல விருட்சமாக விளங்கும் கோயில்கள் எண்ணற்றவை..

இங்கே தனது பெயரிலேயே வினை தீர்க்கும் வேம்பினைக் கொண்டிருக்கின்றார் ஹரிஹர புத்திரன்..

கோயிலின் தல விருட்சமாக வேம்பு தழைத்திருக்கின்றது..

ஸ்ரீ அழகிய வேம்புடைய ஐயனார் பல நூறு குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்குகின்றார்.. இதனால் அங்கே திருமண மண்டபமும் கட்டியிருக்கின்றனர்.. 

முடி இறக்குதலும் காதணி விழாக்களும் நடைபெறுகின்றன..

பரிவார மூர்த்திகளுக்கு கிடா வெட்டு பூஜையும் கோயிலுக்கு வெளியில் நடக்கின்றது.. நாளும் மக்கள் தரிசிக்க வருகின்றனர்..

ஐயனார் கோயிலின் திருச்சுற்று வெகு சுத்தமாக இருக்கின்றது..


மூலஸ்தானம்




திருச்சுற்றில் - நிழல் தரும் மரங்கள்..  அமர்ந்து இளைப்பாறுதற்கு ஏதுவாக கற்பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன..

ஆனால் தஞ்சையில் இருந்து பேருந்து வசதி மிகக் குறைவு.. காலையிலும் மாலையிலுமாக அரசுப் பேருந்து ஒன்று.. இதைத் தவிர தனியார் சிற்றுந்து ஒன்று.. அவ்வளவு தான்..  

குறுகலான கிராமப்புற சாலை என்பதால் மழைக் காலங்களில்  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

இத்திருக்கோயிலுக்கு கடந்த பௌர்ணமி அன்று (வைகாசி 20 சனிக்கிழமை  ஜூன் 3) அன்று சென்றிருந்தோம்..





நாகத்தி ஊருக்குள்ளிருந்து கோயிலுக்கு செல்லும் வழித்தடம் தான் மேலே காண்பது!..

நாம் தனிப்பட்ட முறையில் வாகனத்தில் வருவதே சாலச் சிறந்தது..

 வேம்புடைய ஐயனார்  போற்றி.. போற்றி..
வினை தீர்க்கும் ஸ்வாமியே
போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. எங்கள் குலதெய்வமும் அய்யனார்தான். பாலசாஸ்தா, சாத்தியப்பா என்றெல்லாம் அழைப்போம். கும்பகோணம்- திருவாரூர் சாலையில் குடவாசல், சேங்காலிபுரம் அருகே மழுவசேரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் குலதெய்வமும் ஐயனார்தான். பாலசாஸ்தா..

      ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. பங்காளி ஒருவர் மறைவினால் இந்த வருடம் குலதெய்வம் கோவில் சென்று வர முடியவில்லை. குறையாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. காவிரியில் நீர் வந்ததது சந்தோஷம். படங்கள் சிறப்பு. கோவில் செல்லும் பாதை மண் சாலையாய் இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..
      மழைக் காலத்தில் சிரமம் தான்..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. கோயில் தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. காவிரியில் நீர்வரத்து - ஆஹா... மகிழ்ச்சி.

    நாகத்தி குறித்த தகவல்கள் நன்று. படங்களும் சிறப்பு. தொடரட்டும் கோயில் உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரியில் நீர்வரத்து - மகிழ்ச்சி தான்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வேம்புடைய ஐயனார் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. கிராமப்புறச் சாலை பார்க்க மிக அழகாக இருக்கிறது. கோவில் வளாகம் மிகச் சுத்தமாக இருக்கிறது. அருமையான கோயில் உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. கோயில் வளாகம் சுத்தமாகப் பராமரிப்பு செய்யப் படுகின்றது

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை....

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. கிராமத்துச் சாலையும், கோயிலும் வெகு சுத்தமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இது வரையிலும் அறிந்திராத கோயில்கள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி வருவதற்கும் மிக்க நன்றி.

    கோமதி அரசு அவர்கள் எங்கே இருக்கிறார்? ஏன் வருவதில்லை? உடல் நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமத்துச் சாலையும், கோயிலும் வெகு சுத்தமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி தான்..

      கோமதி அரசு அவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக வருவதில்லை.. மேல் விவரம் எதுவும் தெரியவில்லை..

      உடல் நலமாக இருப்பார்..
      கடவுள் துணை..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிறப்பான கோவில் தரிசனம் பெற்றுக் கொண்டேன். படங்களும் விபரங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..