நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 3
ஞாயிற்றுக்கிழமை
அதோ ஐயனார் கோயில்!..
ஸ்ரீ பூர்ணகலா தேவியுடன் அழகிய வேம்புடைய ஐயனார்!..
கோயிலின் வாசலில் பறவைகளின் கூச்சலோடு
பழைமையான வேப்ப மரம்..
ஒரு ஓரமாக திருமண மண்டப கட்டுமானப் பணிக்காக ஜல்லிக் கற்கள் குவிக்கப் பட்டுள்ளன..
தஞ்சையில் இருந்து திரு ஐயாறு நோக்கிப் பயணித்து அம்மன் பேட்டையைக் கடந்ததும் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு கிமீ., சென்றால் நாகத்தி..
இந்த நாகத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பு உடையது..
மாமன்னன் ராஜராஜன் சோழப் பேரரசை மண்டலங்களாகப் பிரித்தபோது அவற்றில் ஒன்றே பாண்டிய குலாசனி வளநாடு.
வளநாடு என்பது பல கூற்றங்களை உடையது.. அத்தகைய கூற்றங்களில் ஒன்றே பேரார்க்காடு கூற்றம்..
கல்வெட்டுகளை நுணுகி ஆராயும்போது மணற்கரம்பை, இராஜேந்திரம் ஆர்க்காடு, உமையவள் ஆர்க்காடு, நாகத்தி, செந்தலை இறையூர், கருப்பூர், கிளிமங்கலம், கீழ் பிரம்பில்,கீழ் வரம்பில், மாறனேரி, நடுவிற்காவிரி (நடுக் காவிரி), கண்டியூர் திரு ஆலம்பொழில் - ஆகிய ஊர்கள் ஒருங்கிணைந்திருந்த பெருநகரமே பண்டைய பேரார்க்காடு -
என்கின்றார் வரலாற்று ஆய்வாளராகிய குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்..
இப்படியான நாகத்தியின் வாசலிலேயே காவிரியின் கிளையாகிய வெட்டாறு.. பிரம்மாண்டமான ஆலமரங்கள்..
எதிரில் சின்னஞ் சிறியதாய் மூன்று கோயில்கள்.. மேற்கு நோக்கிய ஸ்ரீ பால முருகன் கோயில்..
தெற்கு முகமாக ஸ்ரீ பத்ரகாளியம்மன் சந்நிதி.. கிழக்கு நோக்கிய ஸ்ரீ மாரியம்மன் சந்நிதி..
அங்கே விசாரித்தால வழி சொல்கின்றனர்..
அதன்படி ஒன்றரை மைல் தூரம் அமைதியான சாலையில் நடந்து வந்தால் -
அதோ அழகிய வேம்புடைய ஐயனார் கோயில்!..
ஒன்றரை மைல்தூரம் வெயிலில் நடந்து வந்த களைப்பு காணாமல் போயிருந்தது..
இதோ - பெயருடைய வேம்பு..
கடும் கோடையில் வேப்ப மரத்தின் குளிர் நிழல்.. மரத்தைச் சுற்றிலும் மேடை..
ஸ்ரீ கருப்பர் |
ஸ்ரீ வீரன் |
ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ வீரன் ஆகிய மூர்த்திகளுக்கான கோயில்களும் -
கோயிலின் முன்பாக சுதையாலான யானை, குதிரை, வேட்டை நாய் - சிற்பங்கள் அமைந்துள்ளன..
யானை மீது அம்பாரியில் ஸ்ரீ பூர்ணகலா தேவியுடன் ராஜ கம்பீரமாக ஐயனார்..
ஐயனாரின் வலப் புறத்தில் யானைப் பாகராக எங்கள் குலதெய்வம்..
அருகிலேயே வெள்ளைக் குதிரையில் வீரத் திருமேனி..
தலை வணங்கிக் கும்பிட்டு விட்டு மேலே நடந்தால் தொன்மையான நிலை வாசல்..
ஸ்ரீ வேம்புடைய ஐயனார் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
கோவிலுக்குச் செல்லும் பாதை அழகாய் இருக்கிறது. வறண்ட ஆறு மனதை விண்டு போக வைக்கிறது!
பதிலளிநீக்குகாவிரியில் சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்தாயிற்று..
நீக்குஇனி மிச்சம் இருக்கும் வயல் வெளிகள் பசுமையாகக் கூடும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கோவில்,
மற்றும் கோவிலுக்கு செல்லும் வழியாய் அமைந்த படங்கள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஆல மரங்களும், அருகில் ஒடும் காவிரியின் கிளை நீருமாக, (இப்போது கோடையால் அங்கு நதி நீர் வற்றி விட்டதோ?) ஒற்றையடிப்பாதையும், ஓங்கி வளர்ந்த வேம்புமாக படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
பூர்ணகலா தேவியுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் ஐயனாரை தரிசித்து வணங்கி கொண்டேன். பிற தெய்வங்களையும் தரிசித்துக் கொண்டேன். ஐயனார் அனைவருக்கும் நல்லருள் தரட்டும். பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// ஐயனார் அனைவருக்கும் நல்லருள் தரட்டும். பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. ///
பதிலளிநீக்குநமது வேண்டுதலும் இதுவே..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
நலம் வாழ்க..
ஐயனார் அனைவருக்கும் நலம் தரட்டும்.
பதிலளிநீக்குஐயனார் அனைவருக்கும்
நீக்குநலம் தரட்டும்.
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
அருமையான கோவில்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய....
மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஓம் சிவாய நம..
காலையில் முதல் ஆளாகப் படித்துவிட்டேன். கருத்திட இயலவில்லை. உங்கள் குலதெய்வம் என்பது உங்கள் முன்னோராக இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
பதிலளிநீக்குஇது புதிய கோணம்...
நீக்குஆனால் உண்மையில் வேறு..
எங்களது குலதெய்வமாக நந்திகேஸ்வரர்.. தென் தமிழகத்தில் மாடசாமி என்று பெயர்.. இவர் ஐயப்பனின் பரிவாரங்களுள் இருவர்..
இவர் ஐயப்பன் யானையில் ஆரோஹணிக்கும் போது யானைப் பாகனாக வருவார்..
எனவே தான் அவ்வாறு குறிப்பிட்டு எழுதினேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அழகான கோவில். அதிலும் குறிப்பாக கோவிலுக்குச் செல்லும் பாதை மனதை மிகவும் கவர்ந்தது. தொடரட்டும் கோவில் உலா.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
நலம் வாழ்க..
நிழல் தரும் மரங்களை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக உள்ளது. அழகான கோவில்.
பதிலளிநீக்குஎத்தனை அழகு? கோயிலும் செல்லும் பாதையும் தண்ணென்று இருப்பதைப் பார்த்தால் அங்கேயே உட்கார்ந்து விடலாம் போல் உள்ளது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு