நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13
சனிக்கிழமை
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!.. 873
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை
இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா
கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்கண்
இணை களிக்கு மாறே.. 888
கங்கையிற் புனிதமாய காவிரி
நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில்
அரங்கம் தன்னுள் எங்கள்
மால் இறைவன்
ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன்
ஏழையேனே.. 894
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே.. 895
போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேன்
அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
என் செய்வான் தோன்றி னேனே!. 897
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-
ரங்கா.. ரங்கா
ஓம் ஹரி ஓம்
***
வணங்கி கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் வணக்கமும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குநலம் வாழ்க..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
கங்கையிற் புனிதமாய.... நடுவு பாட்டு - நடுவுப் இல்லை
பதிலளிநீக்குவெள்ளநீர்..... கள்வனார் கிடந்தவாறும் - கள்ளனார் இல்லை
போதெல்லாம்... - என் செய்வான் தோன்றினேனே - ஞ் வராது
திருத்தம் செய்து விட்டேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அரங்கன் பெருமை சொல்லும் பதிவு..... அனைவருக்கும் அரங்கன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்கு
நீக்குஅனைவருக்கும் அரங்கன் அருள் புரியட்டும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட் ..
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பாடல்கள் அருமை. ஸ்ரீரங்கநாதனை துதித்துப் போற்றி தரிசனம் செய்து கொண்டேன். அனைவரையும் ஸ்ரீரங்கநாதன் நலமாக வைத்திருக்க பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவரையும் ஸ்ரீரங்கநாதன் நலமாக வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க..
திரு அரங்கனை பிரபந்த பாடலை பாடி வணங்கி கொன்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலம் வாழ்க..
பச்சைமால் மலைபோல் மேனி துதித்து வணங்கினோம்.
பதிலளிநீக்குஅரங்கன் பற்றிய பதிவு அருமை. நேற்றே வாசித்துவிட்டேன். கருத்து போடும் போது வெளியிடுவதில் பிழை பிழை என்றே சொன்னது...அதன்பின் வர முடியவில்லை
பதிலளிநீக்குகீதா