நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திங்கட்கிழமை
நிகழும் சுபஸ்ரீ சோபகிருது வருடத்தின் சித்திரைத் திருவிழா ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் சித்திரை 10
(ஏப்ரல் 23) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி,
சித்திரை 25 (மே 8)
வரை நடைபெற உள்ள நிலையில்
சித்திரை 17 (ஏப்ரல் 30)
மீனாட்சி பட்டாபிஷேகம்
நிகழ்ந்தது..
இன்று
சித்திரை 18 (மே 01)
மீனாட்சி அம்மன் திக் விஜயம் நிகழ்கின்றது.
நாளை
செவ்வாய்க் கிழமை சித்திரை 19 (மே 02)
ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண வைபவம்..
சித்திரை 20 (மே 03) திருத்தேரோட்டம்..
தொடர்ந்து
சித்திரை 21 (மே 4) அன்று வைகை ஆற்றில் தவமிருக்கும் மண்டூக மகரிஷிக்காக அழகர் மலையில் இருந்து, மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர்
சித்திரை 21 (மே 04) அன்று இரவு மதுரை மூன்று மாவடியில் எதிர் சேவை கொண்டு,
சித்திரை 22 (மே 05)
சித்ரா பெளர்ணமி நாளில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம்
அளிப்பதற்காக வைகையில் இறங்குகின்றார்..
சித்திரை 24 (மே 07) ல்
தசாவதாரம் மோகினித் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு - என, சேவை சாதித்த பின்னர், சித்திரை 25 (மே 08) அன்று கள்ளழகர் மலைக்குத் திரும்புகின்றார்..
இந்நாளில்
திருவிழாவின் காட்சிகள்..
Fb ல் வழங்கியவர்
திரு. ஸ்டாலின்..
அன்பின் நன்றி..
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-
**
பதிவின் பகுதி
இரண்டு
தஞ்சை பெரிய கோயில்
திருவிழா காணொளி
நன்றி: நம்ம தஞ்சாவூர்,
SFA Studios
ஓம் நம சிவாய சிவாய நம
***
முதலில் சில காலம் தஞ்சையில் இருந்தேன். பிறகு மதுரையில் இருந்தேன். இரண்டு ஊர்களுமே எனக்கு மிகவும் பிடித்த ஊர். தஞ்சையில் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தவிர வேறு இந்தத் திருவிழாவும் கண்டதில்லை.
பதிலளிநீக்குவாருங்கள்.. திருவிழாக்களை கண்டு களியுங்கள்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
ஓம் நம சிவாய..
மதுரையில் குடி இருந்திருந்தால் இந்நேரம் சித்திரைத் திருவிழா தூள் பறப்பதைப் பார்த்து ரசிக்கலாம். மதுரை அரசுக் குடியிருப்பான ரேஸ் கோர்ஸ் காலனியில் குடி இருந்தோம். வீட்டு வாசலில் கூட்டம் அலைமோதும். ஜே ஜே என தெரு, சாலை எல்லாம் மக்கள் வெள்ளமாய் இருக்கும். பெரும்பாலும் சௌராஷ்ட்ரா மக்கள். அழகர் எங்கள் வீட்டு வழியேதான் வைகைக்கு செல்வார். மலைக்குத் திரும்பும்போது அப்படியே. சுலப தரிசனம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் மேலதிக செய்திகளும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குஓம் நம சிவாய..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. அருள் மிகும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை மாதத்து உற்சவங்களை வரிசைப்படுத்தி தந்ததற்கு மகிழ்ச்சயுடன் நன்றி. .
அழகான படங்களில் மீனாட்சி அன்னையை தரிசித்துக் கொண்டேன். காணொளி களும் கண்டேன். பெண் குழந்தைகளுக்கு மீனாட்சி அலங்காரம் செய்து பெருமைபடுத்தியிருப்பது சிறப்பு. அத்தனை குழந்தைகளும் அழகாக உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் ல் திருவிழா படங்கள் அனைத்தும் அருமை. இறைவன், இறைவியையும் தரிசித்து கொண்டேன். காணொளியும் கண்டு மெய்சிலிர்த்துப். போனேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// பெண் குழந்தைகளுக்கு மீனாட்சி அலங்காரம் செய்து பெருமை படுத்தியிருப்பது சிறப்பு. அத்தனை குழந்தைகளும் அழகாக உள்ளனர்..//
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
ஓம் நம சிவாய..
சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஓம் நம சிவாய..
என் அண்ணன் மகன் தினம் மீனாட்சி திருவிழா படம் அனுப்புகிறான்.
பதிலளிநீக்குஉங்கள் தளத்தில் மிக அருமையான திருவிழா படங்கள், காணொளி தரிசனம் கிடைத்தது. போன வருடம் தேர்திருவிழா பார்த்தேன்.
தஞ்சை கோவில் திருவிழா படங்கள் , காணொளி நான்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு// என் அண்ணன் மகன் தினம் மீனாட்சி திருவிழா படம் அனுப்புகிறான்.//
அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு
எங்கிருந்தும் தரிசனம் கிடைக்கும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
ஓம் நம சிவாய..
தொலைக்காட்சியில் பார்க்கையில் பழைய நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்தன. அதிலும் திருக்கல்யாணத்தன்று உள்ளே சமைத்துக்கொண்டிருக்கும் அம்மா , வீட்டுக்கார மாமி போன்றோர் திருமங்கல்யமும் சீர் வரிசையும் வரும்போது ஓடோடி வந்து ஆரத்தி எடுத்துவிட்டுச் செல்வார்கள். நான்கு ஆவணி வீதிகளிலும் இவை வலம் வந்து பின்னரே திருக்கல்யாண மண்டபம் செல்லும். அப்போதிருந்த கல்யாண மண்டபம் இப்போது இடிச்சாச்சு. இப்போ வேறே மாதிரி இருக்கு/இருந்தது. மீனாக்ஷியைப் பார்த்தே நான்கைந்து ஆண்டுகள். அவள் தமையனார் ஸ்ரீரங்கத்தாரையும் பார்த்து நான்கைந்து ஆண்டுகள்.
பதிலளிநீக்குஇரு கோவில் திருவிழாக்காட்சிகளுமே நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு