நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
ஞாயிற்றுக்கிழமை
நான் கவிஞனாம்!.. அன்பின் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் தமது பதிவில் சொல்லியிருக்கின்றார்.. இதற்குமேல் சும்மா இருந்து விட்டால் எப்படி,?..
அதைப் படித்ததும்
கவிதை ஒன்று பிறந்தது..
இன்றைக்காக இங்கிருந்த பதிவை
மாற்றி விட்டு இதோ அந்தக் கவிதை!..
சாலைகள் விரிவடைந்தன
விரிவடைந்த அதனால்
அவனுக்கும் இவனுக்கும்
கோடிகள் கிடைத்தன
வறட்சி நீங்கியதாக
நெஞ்சுக்குள் மகிழ்ச்சி
அடிதடி தொடங்கி
தடியடி வரைக்கும்
தரை எல்லாம் தங்கம்
பெட்ரோல் தொடங்கி
பெருங்கார் வரைக்கும்
பேழையெலாம் வைரம்
நிழலாய் இருந்த அடர் மரங்கள்
அழிந்தன அதனை யார் அறிந்தார்?..
கூடுகள் கலைந்தன
குருவிகள் ஒழிந்தன..
கூடவே - மரங்களில்
மஞ்சள் வண்ணம்
எழுதிய பெயிண்டர் பிச்சைமுத்துவும்..
அன்ன முத்துக்கு
வழியின்றி அவனும்
அவன் குடும்பமும்..
அதோ பிச்சைமுத்து!..
*
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
***
வறட்சி யாருக்கு நீங்கியதோ!
பதிலளிநீக்குஅமைதியான அழகான சாலைக்கு
மரங்களின்
பூர்ணகும்ப மரியாதை!
கவிதைக்கு மரியாதை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க
அனைத்திலும் காசு.. காசு.. காசு..
பதிலளிநீக்குபேழையெல்லாம் வைரம்
ஆனாலும்
பேராசை அடங்கவில்லை
போகவேண்டும் இன்னும்
நெடுந்தூரம்.
கவிதைக்கு மரியாதை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க
மரங்களை வெட்டி இயற்கையைக் கெடுத்தார்
பதிலளிநீக்குமழைதனை நிறுத்தி வறட்சியைக் கொடுத்தார்
ஆள்வோரின் ஆண்டாண்டு சாதனைகள்.
கவிதைக்கு மரியாதை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க
இரண்டு நாட்களாக யானைகள் பற்றிய தொடர் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காடுகள் குறுகி விளை நிலங்கள், வணிகப் பயன்பாடுகள் அதிகரிப்பதையும், யானைகளின் கஷ்டங்களையும் மிக அழகாக்க் காண்பித்தார்கள்.
பதிலளிநீக்குநம் நன்மைக்காக நாம் செய்துகொள்ளும் மாறுதல்கள் பல உயிரினங்களைப் பாதிக்கின்றன
நன்றாகச் சொன்னீர்கள்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க
நீங்கள் கவிஞரேதான் துரை அண்ணா! அதில் என்ன சந்தேகம்?!!!
பதிலளிநீக்குடக் டக்குனு எழுதிடறீங்களே!
கீதா
தங்கள் அன்பினுக்கு நன்றி சகோ..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க
அண்ணா, ஒவ்வொரு முறை இந்தச் சாலையில் பயணிக்கும் போதும் என்னதான் நமக்கு இவை நமக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும், துரித வேகத்தில் பயணிப்பதாக இருந்தாலும் என் மனதில் கூடவே அத்தனை உயிர்களும் மரங்களும் வந்து வேதனைப்படுத்தும். இந்த எண்ணங்கள்தான் ஓங்கி நிற்கும். பாவம் யானைகள். புலிகள் ஊருக்குள் வருகின்றன என்று அவற்றைக் குற்றம் சொல்கிறோம். நம் சுயநலத்திற்காக எல்லாத்தையும் செஞ்சுட்டு பிற உயிர்களைப் பழி சொல்கிறோம். இயற்கையும் மனித இனமும் இயைந்து வாழ முடியுமா என்றால் ...மனிதனின், சுயநலமிகளின் எண்ணப் போக்குகளைக் காணும் போது முடியாது என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஆனால் நாம் எல்லோரும் இப்படிப் பேசினாலும் நம் உள் மனது சாலைகளைக் கண்டு "ஆஹா என்னமா சாலை போட்டிருக்காங்க அதான் எளிதாகப் பயணிக்க முடிகிறது" என்றுதான் சொல்லும். நாம் பேசுகிறோம், எழுதுகிறோம் ஆனால் நம்மால் ஏதேனும் செய்ய முடிகிறதா? நாம் பேசுவது ஒன்று விரும்புவது ஒன்று! 99% மனிதர்கள் எல்லோருமே Hypocrite!
கீதா
இந்த எண்ணங்கள் தான் என் மனதிலும் கூடவே வந்து வேதனைப்படுத்தும்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க
உலகம் நமக்கானது மட்டுமே என்ற எண்ணம்.
பதிலளிநீக்குநாம் பலரும் கோயில், இறைவன் என்று சொல்கிறோம். பிற உயிர்களும் இயற்கையின், இறைவனின் படைப்புதான் அவைதான் முதலில் வந்தன...ஆனால் நாம் அவற்றை மதிக்காத போது இப்படிப் பேசுவதில் என்ன பயன் என்றும் தோன்றும். நான் உட்பட.
கீதா
உலகம் நமக்கானது மட்டுமே என்ற எண்ணம் உடையவன் தற்காலத்து மனிதன் மட்டுமே!..
நீக்குஇனிமேல் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. மீண்டும் நீங்கள் இருவரும் (பதிவில் நீங்களும், கருத்துரைகளில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களும்) கவிஞர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டீர்கள் பார்த்தீர்களா? அதைத்தான் நானும் சொன்னேன்.
நான் சொன்னதில் ஏதும் தவறில்லையே..!
கவிதை அருமை . மரங்களின் பங்களிப்பு நாம் பயணிக்கும் இந்த சொகுசான சாலைகளில் உள்ளதென நானும் இத்தகைய சாலைகளில் பயணிக்கும் போது உணர்ந்திருக்கிறேன். என்ன செய்வது? நாம்தான் சுயநலவாதிகள் ஆயிற்றே..! (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.) இந்த சுயநல குணம் பிறப்பிலிருந்து நமக்குள் தோன்றி விட்டதை அந்த இயற்கையன்னை அறிவாள். அவளின் விட்டுக் கொடுத்ததில் இப்படி நம் வாழ்க்கை செழிக்கிறது. இயற்கையன்னைக்கு நம் பாவங்களின் மன்னிப்பாக என்றும் நன்றி சொல்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிமேல் மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை..
நீக்குஇயற்கை அன்னை நமது பாவங்களை மன்னிப்பாளாக.. அவளுக்கு என்றும் நன்றி சொல்வோம்...
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க
அழகிய கவிதை வரிகள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குநலம் வாழ்க..
சாலைகள் வசதி தேவையான ஒன்று என்பதை ஒப்புக்கொண்டாலும் அதற்காக மரங்களை வெட்டி எடுத்து தான் அமைக்க வேண்டும் என்றில்லை. பல சாலைகள் அழகான நிலையில் இருந்தன - தற்போது அதே சாலைகள் அகலமாக்குகிறேன் என்ற பெயரில் பாழ்படுத்தி விட்டார்கள் என்பது வேதனையான உண்மை.
பதிலளிநீக்குஉண்மை தான் வெங்கட்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க
கவிதை வரிகள் அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
படக்கவிதைகள் மிக அருமை. தேர்வு செய்த படங்களும் சொன்ன கருத்துக்களும் மிக அருமை.
பதிலளிநீக்குபாதை அமைத்தவர்களின் வறுமை நீங்கியது,
ஆனால் பூமிக்கு வறட்சி வந்து விட்டது.
மைதாஸ் கதை போல தொட்டதெல்லாம் தங்கம்
பசிக்கு உதவுமா?
கடைசியில் சொன்னது நெகிழ்வு .
ஒன்றை அழித்து ஒன்று உயர்வு அடைய முடியுமா?
முதல் படம் போல முன்பு
இருமருங்கிலும் மரங்கள் நிழல் கூடாரங்களாக இருந்தன சாலையில் நடந்து செல்வோருக்கு களைப்பு இல்லாமல் சாமரம் வீசி கொண்டு.
இப்போது சாலையில் நடந்து செல்பவர் இல்லை, காரு, வண்டி பறக்குது, துரித பயணம், அதற்கு நாலு வழி சாலை.
// இப்போது சாலையில் நடந்து செல்பவர் இல்லை, காரு, வண்டி பறக்குது, துரித பயணம், அதற்கு நாலு வழி சாலை..//
பதிலளிநீக்குஉண்மை தான்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க..
பிச்சை முத்து! அருமையான பெயர்!காரணம் தான் மனதை வேதனைப்படுத்துகிறது. கமலா சகோதரியால் உங்கள் கவிதைத் திறன் மேன்மேலும் மேம்பட்டு உள்ளது.
பதிலளிநீக்குநாலு வழிச்சாலைகளால் வரும் கேடு பற்றி மனதை தொடும் கவிதை. நிஜமும் அதுவே.
பதிலளிநீக்கு