நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 28
செவ்வாய்க்கிழமை
எண்ணெய்..
எண்ணெய் என்பது இயற்கையின் கொடை..
கொழுப்புச் சத்து மிக்கது.. இதற்குள் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கின்றன..
கொழுப்பு உடலுக்கு ஏன் தேவை?..
உடலுக்கான சக்தி கிடைப்பதற்கு..
செல்களின் வளர்ச்சிக்கான அமினோ அமிலங்களைக் கொடுப்பதற்கு..
உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதற்கு..
புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல இரு மடங்கு ஆற்றல் கொழுப்பில் இருந்து கிடைக்கின்றது...
நெய் பருப்புடன் கூடிய முதற்கவளம் தான் நம்முடைய பாரம்பரிய உணவு..
நெய்யில்லா உண்டி பாழ்!.. - என்பது ஔவையாரின் அமுத வாக்கு..
இங்கே நெய் என்பதை இயற்கையான எண்ணெய் என்றும் கொள்ளலாம்..
ஒரு கிராம் புரதத்தில் கிடைக்கும் கலோரிகளை விட அதே அளவு கொழுப்பில் அதிக கலோரிகள் என்கின்றனர்..
கண்ணுக்குத் தெரிந்தது, தெரியாதது என கொழுப்பில் இருவகை..
நெய், வெண்ணெய், எண்ணெய் - என்பன கண்ணறிந்து நாம் எடுத்துக் கொள்கின்றவை..
இதர உணவு வகைகளின் மூலமாக நமது உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு..
இதற்கு மேலாக -
அதற்குள் இது இதற்குள் அது.. என்று ஆளைக் குழப்புகின்ற விஞ்ஞான மேற்கோள்கள்..
அவையெல்லாம் தற்போது தேவையில்லை..
அறையின் வெப்ப நிலையில் இறுகக் கூடிய எந்த எண்ணெயும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல..
உடலில் மூட்டுகளின் அசைவுக்காக வழவழப்பைச் சுரக்கும் சுரப்பிகள் சரிவர இயங்குவதற்கு கொழுப்பு மிகவும் முக்கியம்..
தாவர எண்ணெய்களில் நேரடி கொலஸ்ட்ரால் கிடையாது..
இன்றைக்கு - இப்படியான
இயற்கை எண்ணெய் தான் உடலுக்கு நல்லது இல்லை - என்று கற்பிக்கப்பட்டுள்ளது..
மருத்துவ உலகம் சொல்வதைப் போலவே ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு - என்று எல்லாவற்றிற்கும் எண்ணெயே காரணமாகின்றது..
ஏன் இப்படி?..
இன்று நமது சமையலறைக்கு வரும் எண்ணெய்கள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயின் உருமாற்றங்களே.. உடல் நலத்திற்கு எவ்விதத்திலும் உதவாதவையே..
எண்ணெயின் இயற்கையான நிறத்தையும், அதன் வழவழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் வேறுபல நச்சு இரசாயனங்களைக் கொண்டு அடியோடு நீக்குவதையே இன்றைக்கு சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள்..
சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் சில ரசாயனங்களுடன் சேர்ந்து - கவர்ச்சியான ஆடல் பாடல் விளம்பரங்களுடன்
சந்தைக்கும் சமையல் அறைக்கும் வருகின்ற எண்ணெய் என்பது ஒரு திரவம்..
அவ்வளவு தான்..
சுத்திகரிக்கப்பட்ட இந்த எண்ணெய்யை - அதிக பட்ச உஷ்ணத்துடன் - முதல் முறை பயன்படுத்தப்படும் போதே உருமாறிப் போகின்றது..
இதுவே மறுமுறையும் சூடு படுத்தப்படும் போது ஆபத்தானதாகி விடுகின்றது..
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று தற்போது சொல்லப்படுவது இதனால் தான்..
உடல் நலத்திற்கு ஊறுதுணையாக இருந்த எண்ணெயை உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்றாக மாற்றியதே நவீன தொழில் நுட்பத்தின் அரும் சாதனை..
உடலுக்கு ஒவ்வாத ஒன்றாக இன்றைய எண்ணெய் விளங்குகின்றது என்பதில் ஐயம் இல்லை..
சாலையோரத்தில் விற்கப்படும் விலை மலிவான சிறு தீனிகளும் சுட்டெடுக்கப்பட்ட எண்ணெயில் இருந்து தான் என்றறியும் போது நாம் எங்கே சென்று முட்டிக் கொள்வது?..
சரி.. இதற்கு என்ன தான் தீர்வு?..
தீர்வா?..
அப்படி ஒன்றும் இல்லை!..
இருந்தாலும் யாரும் சொல்ல மாட்டார்கள்!..
நமக்கு நல்லதான எண்ணெயை -
நாமே தேடிக் கொள்வது தான் ஒரே தீர்வு!..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***
கஷ்டம்தான். செக்கு எண்ணெய் என்பார்கள். ஆரோக்கிய எண்ணெய் என்பார்கள். பசுமை எண்ணெய் என்பார்கள்.எதுவுமே முன்னர் கிடைத்தது போல இல்லை.
பதிலளிநீக்கு
நீக்குஇதற்கான நல்ல தீர்வு நம் கையில் தான் இருக்கின்றது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க
எண்ணெய் பற்றிய விவரங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குநலம் வாழ்க
அறை வெப்ப நிலையில் இறுக்க்கூடிய - குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறையும். அது இந்தக் கணக்கில் வராது
பதிலளிநீக்குபெங்களூரில் பாமாயில் பயன்பாடு மிக அதிகம். வெளி உணவுப் பொருள்களை இதனால்தான் விரும்புவதில்லை (பொரித்தவற்றை).
பெங்களூரில் மட்டுமல்ல.. எங்குமே பாமாயில் பயன்பாடு தான் மிக அதிகம். வெளி உணவுப் பொருள்களின் மீது விருப்பம் வருவதேயில்லை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
பல வருடங்களுக்கும் மேலாக நான் நல்லெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தி வருகிறேன். கடலை எண்ணெய் தான் பொரிக்கவெல்லாம் எடுத்துப்பேன். அதையும் ஒரு முறை பொரித்துவிட்டால் பின்னால் பயன்படுத்தலாமோ கூடாதோ என்பதால் கொஞ்சமாகவே வைத்துப்பயன்படுத்திட்டு மிச்சத்தை மறுநாளே செலவிடும்படி சமையல் திட்டத்தை வைச்சுப்பேன். ரிஃபைன்ட் எண்ணெயெல்லாம் வாங்கியதே இல்லை. கொப்பரைகளைப் போட்டு நேரிலே ஆட்டித் தேங்காய் எண்ணெய் இங்கே ஒரு மாமி மில்லில் தயார் செய்து கொடுப்பாங்க. அந்தத் தேங்காய் எண்ணெய் தான். நெய்யெல்லாம் வீட்டுத் தயாரிப்பு. வாங்கும் பாலில் இருந்து வெண்ணெய் எடுத்துக் காய்ச்சுவது தான் இன்று வரை. கடையில் வெண்ணெய்/நெய் எப்போவானும் அதிகப்படித்க் தேவைக்கு வாங்குவோம். அதுவும் சிராத்தம் போன்ற சமயங்களில் தான்.
பதிலளிநீக்குஇங்கேயும் நெய்யெல்லாம் வீட்டுத் தயாரிப்பு தான்..
நீக்குகீழவாசல் கடையில் ஊத்துக்குளி வெண்ணெய் வாங்கி உருக்கிக் கொள்கின்றோம்..
நல்லெண்ணெய் நேரிடையாக செக்கில் ஆட்டப்பட்டதுதான்...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
நான் வெண்ணெய் எடுப்பதும் வீட்டில் உறை ஊற்றிய சுத்தமான பசும்பாலில் இருந்தே! பல வருடங்களாக, அவ்வளவு ஏன்? கல்யாணம் ஆனதிலிருந்தே இம்முறையில் தான் வெண்ணெய் எடுப்பது எல்லாம். மாற்றும்படியான சந்தர்ப்பம் இப்படி எப்போவானும் ஒரு மாசம், பத்து நாளுக்கு வரும். பின்னர் சரியாகிடும் தானாகவே.
நீக்குஅன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
அதே போல் வெளியே வாங்கிச்சாப்பிடுவதில் எல்லாக்கடை பக்ஷணங்களோ, உணவு வகைகளோ எனக்கு ஒத்துக்கறதில்லை. ஆகவே சில கடைகளில் வாங்குவதைத் தொடவே மாட்டேன். இதில் எனக்கும் அவருக்கும் முரண்பாடுகள் நிறைய என்றாலும் எனக்கு வயிற்றுக்கோளாறு வந்துவிடுவதால் பேசாமல் இருப்பார்.
பதிலளிநீக்கு
நீக்குஒரு சிலர் நடத்தும் கடைகளில் நுழைவதே இல்லை..
அதிலும் பொதுப் பெயர்களில் உள்ள கடைகள் என்றாலே..
திரும்பிப் பார்ப்பதும் இல்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
முடிவில் நல்ல தீர்வு...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குநலம் வாழ்க..
குருவாயூர் போயிருந்தபோது தே.எண்ணெய் லிட்டர் 170க்கு வாங்கினேன். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடலை எண்ணெய் 200க்கும், நல்லெண்ணெய் 320க்கும் வாங்கினேன். பெங்களூர் மார்க்கெட்டில் சில நாட்கள் முன்பு செக்கிலிட்டாட்டிய தே எண்ணெய் 200 ரூக்கும், கடலை எண்ணெய் 200 ரூக்கும் வாங்கினேன். இதைவிட எங்கயாவது குறைவாகக் கிடைத்தால் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குஇங்கே தாங்கள் சொல்லியிருக்கும் விலை விவரங்கள் நியாயமாகத் தெரிகின்றது..
நீக்குஅன்பின் வருகையும் விவரங்களும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
எண்ணெய் விவரம் அருமை.
பதிலளிநீக்குமுன்பு வீட்டு பெரியவர்கள் "வைத்தியருக்கு கொடுக்கும் காசை, எண்ணெய் வணிகருக்கு கொடு" என்பார்கள்.
இப்போது எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, எண்ணெய் சேர்க்க கூடாது என்று மருத்துவர்கள் சொல்லும் காலம்.
// இப்போது எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, எண்ணெய் சேர்க்க கூடாது என்று மருத்துவர்கள் சொல்லும் காலம்..//
நீக்குஎன் பேத்திகள் இருவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்ததில்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு