நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 20
திங்கட்கிழமை
இணையத்தில்
இருந்து செய்தித் தொகுப்பு.
(சத்துகள் மற்றும்
சில விவரக்குறிப்புகள்
மட்டும் - விக்கி)
பாகல்..
பாகற்காய் நம் நாட்டிற்கே உரிய அற்புதம்..
பச்சை வண்ணமும் சொர சொரப்பான தோற்றமும் - இதன் அழகே தனி!..
வீட்டில் பாகற்காய் சாம்பார் எனில் ஒருபிடி கூடுதலாக சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன..
இன்று சித்த மருந்துகள் சில எடுத்துக் கொள்வதால் பாகற்காய் சாப்பிட முடியாத நிலை..
மாறாத கசப்புச் சுவையுடன் மகத்தான மருத்துவ குணங்களையும் உடையது..
இன்றைய நாட்களில் சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களின் தேடலில் முதன்மைப் பொருள் இதுவே..
இது பந்தலில் படரும் கொடித் தாவரம் ஆகும்..
அந்தக் காலத்தில் பாரம்பரிய மிதிபாகல் வீட்டுக்கு வீட்டு தோட்டத்தில் காய்த்துக் கிடக்கும். நகரங்களுக்கு என்று குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்காக செல்லும்..
அப்போதெல்லாம்
முள் குத்தியது.. முருங்கை மரத்தில் இருந்து விழுந்தது.. மாடு முட்டித் தள்ளியது.. நாய் கடித் தது.. பேய் அடித்தது - போன்றவை தான் பிரச்னைகளே..
இன்றைக்கு மாதிரி வீடுகள் தோறும் நோயாளிகள் இருந்ததில்லை..
கிராமங்களில் அடுத்தவர்களுக்கு
கசப்பைக் கொடுப்பதா என்று எவருக்கும் பறித்துக் கூட கொடுக்க மாட்டார்கள்..
தேவையுள்ளவர்கள் அவர்களாகவே வந்து தான் காய்களைப் பறித்துக் கொள்ள வேண்டும்..
செவ்வாய் வெள்ளிகளில் சமைப்பதும் இல்லை.. வாங்குவதும் இல்லை..
விதம் விதமாக சமைப்பவர்கள் கூட
தங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு பாகற்காய் சமைத்து
பரிமாற மாட்டார்கள்..
விருந்தாளி வந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனாலும் கொல்லைப் பாகல் எல்லை கடந்து வீட்டுக்குள் வராது..
அவரவர் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே பாகல்..
இதன் கொழுந்துகளும் விதை பிடிக்காத பிஞ்சுகளும் குடற்புழு நீக்கத்துக்கு அருமருந்து.. பாகற்காயின் முற்றிய விதைகளும் அப்படியே..
பாகல் இலைகளை வேகவைத்த நீரை - சித்த மருத்துவர் ஆலோசனைப்படி - அருந்தி வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களும் அழியும்...
பாகற்காயின் குணம் மகத்தானது..
புற்றுநோய் செல்களை அழிப்பதில் பாகற்காய் சாறு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து மீட்டெடுக்கின்றது..
இதில் - புரதம், பீட்டா கரோட்டீன், தயாமின் (B1) ரிபோ ஃபிளவின் (B2) நியாசின் (B3) வைட்டமின்கள் A, B6, C, K , கால்சியம், இரும்பு, மக்னீஷியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம்,சோடியம், துத்தநாகம் - என, அனைத்தும் நிறைந்துள்ளன..
இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளவர்களுக்கு நல்லதே தவிர சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக் கூடாது. விபரீத விளைவுகள் ஏற்படக் கூடும்..
அளவிற்கு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு ஒவ்வாமையாகி வாந்தி வயிற்றுப் போக்கும் ஏற்படலாம்
கருவுற்றிருக்கும் காலத்தில்
பாகற்காயத் தவிர்க்க வேண்டும் என்பதும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாகற்காய் நல்லதல்ல என்பதும் குறிப்பிடத் தக்கவை..
வழக்கம் போல கவனம் தேவை..
அமிர்தமே ஆயினும் அளவுக்கு மேல் ஆபத்து - என்பதை மனதில் இருத்துவோம்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***
இனிய காலை வணக்கம்....... பாகற்காய் பலன்கள் குறித்த பதிவு நன்று. என் மகளுக்கு மிகவும் பிடித்த காய்!
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்குநலம் வாழ்க..
எனக்கும் பிடித்ததொரு காய் பாகற்காய். இதன் விதைகள் முற்றி இருந்தால் பித்தம் செய்யும் என்பார்கள். மிதிபாகல் மிகச்சிறியதாக இருக்கும். பிஞ்சாக எடுத்து எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு பச்சையாகவே சாப்பிடலாம்.
பதிலளிநீக்குஎன் பசங்க, பாகல் துண்டு எலுமி சாறு உப்பு கலந்து ஒரு நாள் வைத்தபின் அதைத் தொட்டுக்கொண்டு மோர் சாதம் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது இது. எனக்கென்னவோ அது பிடிக்காது
நீக்கு
நீக்குதாங்கள் சொல்லியிருப்பது புதிதாக இருக்கின்றது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
அன்பின் நெல்லை அவர்களும் இதையே சொல்லி இருக்கின்றார்.. நான் இப்படிச் சாப்பிட்டதில்லை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..
நலம் வாழ்க..
சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் இதனைச் சாப்பிடக்கூடாது எனும் தகவல் எனக்கு புதிது.
பதிலளிநீக்குபாகல் கசப்பு. சர்க்கரையைக் குறைக்கும். ஏற்கனவே சர்க்கரை குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டா இன்னும் குறைந்துவிடும். ஆபத்து
நீக்குஉண்மை தான்..
நீக்குபதிவில் சொல்லி இருக்கின்றேன்..
கவனம் தேவை ஸ்ரீராம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
அன்பின் நெல்லை அவர்களுக்கு..
நீக்குசர்க்கரை குறைவாக இருப்பவர்கள் பாகற்காயிடம் கவனமாக இருக்க வேண்டும்.. பதிவிலும் சொல்லி இருக்கின்றேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
எனக்குப் பிடித்தது. மருந்து என நினைத்துச் சாப்பிடுவேன்.
பதிலளிநீக்குபந்தலிலே பாவக்காய் தொங்குதடி டோலாக்கு. என்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வருகிறது
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
பாகற்காய் படங்களுடன் அருமை.
பதிலளிநீக்குஎனக்கு மிதில் பாவை என்று சொல்லும் குட்டி குட்டி பாகாற்காய் பிடிக்கும். மகனுக்கு பெரிய பாகற்காய் பிடிக்கும்.
இப்போது கசப்பு ஒத்துக் கொள்வது இல்லை.
படங்களும், செய்திகளும் அருமை.
சிலருக்கு கசப்பு ஒத்துக் கொள்ளாது தான்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
எனக்கு மிகவும் பிடித்தமானது பாகற்காய். ஆனால் உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் செய்ய மாட்டார்கள்.
பதிலளிநீக்குநான் சாப்பிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது.
உணவகங்களிலும் பெரும்பாலும் செய்ய மாட்டார்கள்.
நீக்குஉறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் விருந்தினர்க்கு பாகல் செய்ய மாட்டார்கள்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க..
சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
நல்ல பயனுள்ள பகிர்வு. எங்கள் வீட்டில் பிடிக்கும்..
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
ரொம்பப் பிடித்த காய். தகவல்கள் அருமை. நம் வீட்டில் வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குமுன்பு இருந்த வீட்டில் பாகற்காய் செடி போட்டு குண்டு பாகல் விளைந்து காய் செய்து பிட்லை செய்து என்று....
கீதா
என்னுடைய இஷ்டமும் குண்டு பாகல் தான்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க..
சின்ன வயசில் அம்மா பாகல்காய் பிட்லை பண்ணினாலே அன்னிக்கு ரசம் மட்டும் தான் சாப்பிடுவேன். என்னோட டாக்டர் சித்தப்பா இதைப் பார்த்துட்டு ஒரு நாள் என்னை அவர் சாப்பிடும்போது கூடவே உட்கார்த்தி வைத்துப் பாகற்காய்ப் பிட்லையில் பாகற்காய்களை மட்டும் அரித்துப் போடச் சொல்லிச் சாப்பிடச் செய்தார். அதன் பிறகு பாகற்காய் பிடித்தமானதாகி விட்டது. எங்க குழந்தைகளுக்குச் சின்ன வயசிலேயே பழக்கிட்டோம். இப்போதும் காலை வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் பாகற்காய்ச் சாறும் சேர்ந்து தான் சாப்பிட்டு வருகிறோம். இதைக் குறித்து நானும் பதிவு எழுதினேன்.
பதிலளிநீக்கு
நீக்கு/// காலை வெறும் வயிற்றில் நெல்லிச் சாறுடன் பாகற்காய்ச் சாறும் சேர்ந்து தான் சாப்பிட்டு வருகிறோம்//
இது மிகவும் நல்லது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
நான் இட்ட கருத்து வரலையா, துரை அண்ணா?
பதிலளிநீக்குகீதா
கிடங்கில் வேறு ஒன்றும் இல்லையே!...
நீக்குதாமதமாக ஏதும் வருமோ?..