நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
ஞாயிற்றுக்கிழமை
நான் கவிஞனாம்!.. அன்பின் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் தமது பதிவில் சொல்லியிருக்கின்றார்.. இதற்குமேல் சும்மா இருந்து விட்டால் எப்படி,?..
அதைப் படித்ததும்
கவிதை ஒன்று பிறந்தது..
இன்றைக்காக இங்கிருந்த பதிவை
மாற்றி விட்டு இதோ அந்தக் கவிதை!..
சாலைகள் விரிவடைந்தன
விரிவடைந்த அதனால்
அவனுக்கும் இவனுக்கும்
கோடிகள் கிடைத்தன
வறட்சி நீங்கியதாக
நெஞ்சுக்குள் மகிழ்ச்சி
அடிதடி தொடங்கி
தடியடி வரைக்கும்
தரை எல்லாம் தங்கம்
பெட்ரோல் தொடங்கி
பெருங்கார் வரைக்கும்
பேழையெலாம் வைரம்
நிழலாய் இருந்த அடர் மரங்கள்
அழிந்தன அதனை யார் அறிந்தார்?..
கூடுகள் கலைந்தன
குருவிகள் ஒழிந்தன..
கூடவே - மரங்களில்
மஞ்சள் வண்ணம்
எழுதிய பெயிண்டர் பிச்சைமுத்துவும்..
அன்ன முத்துக்கு
வழியின்றி அவனும்
அவன் குடும்பமும்..
அதோ பிச்சைமுத்து!..
*
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
***