புதன், மார்ச் 08, 2023

இறைவன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 24
புதன்கிழமை
-::-

நேற்று எபி யில்
வெளியிடப்பட்ட
ஜீவி அண்ணா எழுதிய 
கதையின் தலைப்பினைக் 
கண்டு மனதில் எழுந்தவை
இன்றைய பதிவில்..
**

இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்..

ஏதென்று
புகன்றாலும் 
இல்லையென்று
உழன்றாலும்
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்..

இதயத்தில்
வாழுகின்ற உயிராக
உதயத்தில்
சூழுகின்ற ஒளியாக
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்..

உடலுக்குள்
ஒளிதரும் உயிராக
உண்மைக்குள்
நிலைதரும் சுடராக
அற்றார்க்கு
அருள்தரும் நிதியாக
இற்றார்க்கு
நலந்தரும் கதியாக
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்..


இளைப்போர்க்கு
நிழல்நின்ற மரமாக
தவிப்போர்க்கு
தளிர்மணிக் கரமாக
உற்றார்க்கு
வரந்தரும் அறமாக
மற்றார்க்கு
மறம் தரும் திறமாக
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்..

நெஞ்சோடு
நிறைவோர்க்கு மறையவன்
நிலையின்றி
அலைவார்க்கு சிறையவன்
கரைதேடிக்
கசிவார்க்குத் துறையவன்
கண்பார்த்துக்
கனிந்தார்க்கு இறையவன்
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்!..


கல்லுக்குள்
கண்மலரும்
இனியன் என
கடுவெளியில்
நின்றிருக்கும்
தனியன் என
இருக்கின்றான்
இறைவன்
இருக்கின்றான்!..
***
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே..5/90/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. அருமை. அருமை. பொருத்தமான நாவுக்கரசர் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு மிகவும் சிறப்பு. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பதிவும் சிறப்பு. பாடலும் சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் வாய லாக இன்று இறை தரிசனம் பெற்றுக் கொண்டேன். தாங்கள் இயற்றிய பாடல் மிக் அருமை.

    சத்தியமாக
    என்றும்
    நித்தியமாக
    இருக்கின்றான்
    இறைவன்
    இருக்கின்றான்.

    உண்மை. அழகான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. 'இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் ' அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    நம்புவோம் அவனருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  7. பதிவும் பாடலும் சிறப்பு. பொருத்தமான அப்பர் பதிகமும்.

    பதிலளிநீக்கு
  8. இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான்- அழகான வரிகள்! சிறப்பாக இருக்கிறது துரை அண்ணா.

    ஆமாம் சக்தியாய் நம்முள்ளும் வெளியிலும் நமக்கு அரணாய்!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இறைவன் இருக்கிறான் கவிதை பாமாலை அருமை.
    அப்பர் பதிகமும் பொருத்தமாக இருக்கிறது.

    கரை தேடிக் கசிவார்க்குத் துறையவன்,//
    உண்மை.

    அன்பெனும் பிடியில் அகப்படும் மலை அல்லவா இறைவன்! அவரும் அப்பர் பெருமானும் உள்ள படம் அதை சொல்கிறதே! அருமையான பதிவு, அழகான படத்தேர்வு.
    என்றும் துணையாக இறைவன் வந்தால் போதும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..