ஞாயிறு, நவம்பர் 20, 2022

சோழ வம்சம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 4
ஞாயிற்றுக்கிழமை

சதய விழாவின் போது
வெளியிடுவதற்காக இணையத்தில் 
இருந்து தொகுக்கப்பட்ட பதிவு.
தாமதம் ஆகி விட்டது.
(நன்றி : விக்கி)

திருக்கயிலையில் முசுகுந்தர்

சோழர் குல முதல்வன் சூரியன் - வழி தொட்டு 

மைந்தனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்

ஆடும், புலியும் சேர்ந்து நீர் பருகச் செய்த மாந்தாதா

புரந்தன் ஊர் புரந்த வேந்தன் உம்பர் விமானம் உகைத்த முசுகுந்த சக்கரவர்த்தி

புறாவுக்காக நிறை புக்கோன் ஆகிய சிபி

காவிரிக் கரை செய்தோன் கரிகாலன்

களவழிப் பாட்டுக்குச் சேரன் தளை களைந்தான் கோச்செங்கணான்

தொண்ணூறும் ஆறும் பூணாகப் புண் சுமந்தோன் விஜயாலயன்

திருமன்றம் ஆடகத்தால் வேய்ந்த அபயன் பராந்தகன்

கேரளநாடு சிந்தின ராஜராஜன்

கடாரமும், கொப்பமும் கொண்ட ராஜேந்திரன் 

என்றெல்லாம் உலா நூல்கள் சோழ வம்சத்தினரைப் புகழ்கின்றன.. 

அந்த வழியில் சோழ வம்சத்தில் பிற்காலத்தில் புகழுற்று விளங்கிய
மா மன்னர்களை இன்றைக்கு சிந்திப்போம்..
**

01. விஜயாலய சோழர் (848 - 871) பிற்காலச் சோழ அரசை நிறுவியவர் இவரே.. 

திருப்புறம்பியத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து முத்தரையர்களையும் வென்று தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை நிர்மாணித்தவர்.. இவரது தந்தையின் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. 

விஜயாலய சோழர் அரியணை ஏறியதில் இருந்து - நூற்று எழுபத்தைந்து ஆண்டு காலம் மும்முடிச் சோழ மண்டலத்தின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது - தஞ்சாவூர்..

02.  ஆதித்த சோழன் (871 - 907 ) விஜயாலய சோழரின் மகன்..

03. (முதலாம்) பராந்தக சோழர் (907 - 955)
ஆதித்த சோழரின் மகன். 



இவரே தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
பொன் தகடு  பதித்து திருப்பணி செய்தவர்.. எனவே பொன் வேய்ந்த சோழர் என்று சிறப்புப் பெயர்..  பராந்தக சோழர் காலத்தில்  உருவாக்கப்பட்டது தான் வீரநாராயண ஏரி (இன்றைக்கு வீராணம் ஏரி).

இந்த ஏரி பராந்தக சோழர் மூத்த மகனான ராஜாதித்தனால் வெட்டப்பட்டது. ராஜாதித்த சோழன் இந்த ஏரிக்கு தனது தந்தையின் இயற்பெயரைச் சூட்டினான். பராந்தக சோழரின் இயற் பெயர் வீர நாரயணன் என்பதாகும்..

ராஜாதித்த சோழன் தக்கோலத்தில் நடைபெற்ற போரில் வீர மரணம் எய்தினான். பராந்தக 
சோழருக்கு - ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் -  என மூன்று மகன்களும்
உத்தமசீலி, வீரமாதேவி, அனுபமா என மூன்று மகள்களும்..

04. கண்டராதித்த சோழர் (950 - 957) முதலாம் பராந்தக சோழரின் இரண்டாவது மகன்.  ராஜாதித்த சோழனின் தம்பி. 

இவரது பட்டத்தரசியே செம்பியன் மாதேவியார். சோழர் வரலாற்றில் பெரிய பிராட்டி என்று
அழைக்கப்பட்ட மாதரசி. 

கண்டராதித்த சோழர் சிவ வழிபாடு செய்யும் போது ஈசனின் நாட்டியஒலி கேட்கும் என்றொரு செய்தி. இவர் இயற்றிய கோயில் திருப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது.. 

இவரது ஆட்சிக் காலத்தில் தில்லையில் திருஆதிரைத் தேர் ஓடாமல் தடைபட்டு நின்ற போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி தேர் ஓடும்படியாகச் செய்தார் என்றொரு செய்தியும் உண்டு.. 

05.  அரிஞ்சய சோழன் (956 - 957) பராந்தக சோழரின் மூன்றாவது மகன். (கண்டராதித்த சோழரின் தம்பி) 

06. (இரண்டாம்) பராந்தக சோழர் (957 - 973) அரிஞ்சய சோழரின் மகன். 

இவரே சுந்தர சோழர்.. ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி - என மூன்று மக்கள்..

07. ஆதித்த கரிகாலன் 
(957 - 969) இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழரின் மூத்த மகன்..

காஞ்சியில் இருந்தபடி ஆட்சியைக் கவனித்துக் கொண்டார்.. கடம்பூர் மாளிகையில் எதிரிகளால் கொல்லப்பட்டவர்..

08. மதுராந்தக உத்தம சோழன் (973 - 985)
கண்டராதித்த சோழரின் மகன். அருள்மொழி வர்மனின் சிற்றப்பா..

ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குப் பிறகு  - இவருக்கே மணிமுடியைக் கொடுத்தான் அருள்மொழி.. 

மதுராந்தக ஏரியை உருவாக்கியவர் இவரே..

09.  அருள்மொழி வர்மன். ராஜராஜ சோழன்.. (985 - 1014). இரண்டாம் பராந்தக சோழராகிய சுந்தர சோழரின் இரண்டாவது மகன்.. 

பெரிய பாட்டியார் ஆகிய செம்பியன் மாதேவியார் மற்றும் சகோதரி குந்தவை ஆகியோரின் பாசத்தில் வளர்ந்த அருள்மொழி - இராஜராஜன் எனும் பட்டப்பெயருடன் மணிமுடி கொண்டார்.. 



தட்சிண மேரு எனும் பெருங்கோயிலை எழுப்பி ராஜராஜேஸ்வரம் எனும் பெயரைச் சூட்டினார். வடக்கே நர்மதைக் கரையிலிருந்து முழு தென்னகமும் ஈழமும் முந்நீர் தீவுகள் பன்னீராயிரமும் கைவசமாகின.. 

இவரது காலத்தில் தான் வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டன..

ராஜேந்திரன், குந்தவை, மாதேவடிகள்..

10. ராஜேந்திர சோழன் (1012 - 1044) ராஜராஜ சோழரின் மகன்.


1019 ல் கங்கைக் கரைக்கு படை நடத்தி வெற்றி கொண்டு 1023 ல் புதிய தலை நகராக கங்கை கொண்ட சோழ புரத்தையும் கோயிலையும் உருவாக்கினார்..

தஞ்சையை விட்டு விலகி தனக்கான நகர் என்று ராஜேந்திர சோழன் புதிதாக உருவாக்கிக் கொண்டதில் இருந்து சோழப்பேரரசு சரிந்து விழும் வரை கங்கை கொண்ட சோழபுரம் தான் - சோழ மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.. 

இருப்பினும் தனது வெற்றிகளையும் தன் தந்தையுடைய வெற்றிச் சாசனங்களையும் தஞ்சைக் கோயிலில் தான் ராஜேந்திர சோழர் பொறித்து வைத்திருக்கின்றார்.. 

ஸ்ரீ காளஹஸ்தி கோயில் ராஜேந்திர சோழரின் திருப்பணி..

பாரத நாட்டின் முக்கால் பங்கு ஆளுமை இவரிடம் இருந்தது..


தந்தை உருவாக்கியிருந்த கடற்படையின் துணை கொண்டே தூரக் கிழக்கு நாடுகளைக் கைக்கொள்ள முடிந்தது..

ராஜேந்திர சோழரின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளைக் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

தனது மகள் அம்மங்கா தேவியை தனது சகோதரி குந்தவை - வேங்கி மன்னன் விமலாதித்தன் ஆகியோரின் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் செய்து கொடுத்து உறவை மேம்படுத்திக் கொண்டார்..

11.  ராஜாதி ராஜன் (1018 - 1054) ராஜேந்திர சோழரின் மூத்த மகன். 

12. (இரண்டாம்) ராஜேந்திரன் (1051 - 1063) ராஜேந்திர சோழரின் இரண்டாவது மகன். தந்தையின் பெயருடன் பட்டம் ஏற்றுக் கொண்டவர்..

13. வீரராஜேந்திரன் 
(1063 - 1070) இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகன்

14. அதிராஜேந்திரன் (1067 - 1070) வீரராஜேந்திர சோழனின் மகன். அதிராஜேந்திர சோழனுக்கு ஆண் வாரிசுகள் இல்லை..

அடுத்த 
பதிவிலும் வரலாறு தொடரும்..

வாழ்க சோழ தேசத்தின்
புகழ்..
***

24 கருத்துகள்:

  1. உறவுகள் பற்றி படிப்பது போல விவரங்களை படித்தேன். சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நாம் வெளிநாட்டு மன்னர்களைதான் வீரர்களாகவும், பேரரசர்களாகவும் கொண்டாடுகிறோம். அந்தந்த சோழ ராஜா காலத்தில் வெளிநாடுகளில் எந்த புகழ்பெற்ற பேரரசர் இருந்தார் என்றும் சொன்னால் நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து விடுவோம்!..

      கைத்தொலைபேசி.. கொஞ்சம் சிரமமாக இருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஒரு பொன்னியின் செல்வன் எத்தனை சரித்திர விவரங்களைத் தருகிறது. விவரங்கள் தேடி எடுத்து தந்ததற்கு பாராட்டுகள்.

    ஆனாலும் ஒரு முக்கிய விவரம் எப்போதும் நினைவில் நிற்கும். அது தமிழ் எழுத்து சீர்திருத்தம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயக்குமார்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கல்வெட்டில் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றது புதிய செய்தி. ஆயினும் தஞ்சைக் கோயிலின் கல்வெட்டத் தமிழ் மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வரலாற்று தகவல்கள் தந்தது சிறப்பு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. நான் பத்தாவது படிக்கும் போது விருப்ப பாடமாக வரலாறு எடுத்த போது யாருக்கு பின் யார் என்று சாட் தயார் செய்வோம்.(இன்னும் அந்த நோட் வைத்து இருக்கிறேன், ஒருநாள் பகிர வேண்டும்)
    அது போல இன்று அருமையாக மன்னர்கள் வரலாறை யாருக்கு பின் யார் என்று தொகுத்து அளித்து விட்டீர்கள்.

    வாழ்க ! வாழ்க ! சோழ மன்னர்கள் புகழ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படிக்கையில் இப்படியான பட்டியல் வைத்திருந்தேன்.. எங்கே போயிற்றோ தெரிய வில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  8. ஆதிச் சோழனிடமிருந்து என்னிடமும் வரலாற்றுத் தொகுப்பு வரிசையாக இருந்தது. அதே போல் பாண்டியர்களுடையதும். இதைப் பதிவாகக்கூடப் போட்ட நினைவு. தொகுப்பு அருமை. தொடரக் காத்திருக்கேன். இன்னொரு சிறு திருத்தம். முதல் பராந்தக சோழனுக்கு ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் தவிர்த்து இன்னொரு மகனும் உண்டு. அதைக் குறித்து விரிவாக யாரும் சொல்லவில்லை. ஆனால் சமீப காலத்தில் கூட அந்த இளவரசன் பற்றிப் படித்தேன். எதிலேனு தான் நினைவில் வரலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முதல் பராந்தக சோழனுக்கு
      ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் தவிர்த்து இன்னொரு மகனும் உண்டு..//

      அந்த மாதிரி எதையும் விக்கி சொல்ல வில்லையே..

      இருப்பினும் நிறைய பாட பேதங்கள் காணப்படுகின்றன..

      சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய வரலாற்று செய்திகளைப் படிக்க வேண்டும்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. விக்கியில் எல்லாம் இல்லை. மிகச் சமீபத்தில் தான் படிச்சேன். ஒரு வேளை காலச்சக்கரம் நரசிம்மா எழுதி இருந்தாரோ நினைவில் இல்லை. பெயர் கூடக் குறிப்பிட்டிருந்தது. குறிச்சு வைச்சுக்க நினைச்சு எப்படியோ மறந்திருக்கேன். நினைவாழத்திலிருந்து கொண்டு வர முயற்சி செய்யணும். :(

      நீக்கு
    3. ஜெகசிற்பியன் நாவலிலோ? !!!!!!!!!!!!!!!

      நீக்கு
  9. ஆதிச் சோழனிடமிருந்து என்னிடமும் வரலாற்றுத் தொகுப்பு வரிசையாக இருந்தது. அதே போல் பாண்டியர்களுடையதும். இதைப் பதிவாகக்கூடப் போட்ட நினைவு. தொகுப்பு அருமை. தொடரக் காத்திருக்கேன். இன்னொரு சிறு திருத்தம். முதல் பராந்தக சோழனுக்கு ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் தவிர்த்து இன்னொரு மகனும் உண்டு. அதைக் குறித்து விரிவாக யாரும் சொல்லவில்லை. ஆனால் சமீப காலத்தில் கூட அந்த இளவரசன் பற்றிப் படித்தேன். எதிலேனு தான் நினைவில் வரலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் மேலதிக செய்தியும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  10. கல்வெட்டுக்களைப் படித்துக் கொண்டு இருந்தேன். கிரந்தம் என்றால் சமாளித்துப் படிச்சுடுவேன். மற்றது படிக்க மின் தமிழ்க்குழுமத்தில் இருக்கையில் சொல்லிக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டிருந்தோம். பாதியிலேயே நின்றூ விட்டது. இப்போது அவரே இல்லைனு நினைக்கிறேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் எதுவும் கிடைத்ததில்லை...

      (அப்படியே கிடைத்து விட்டாலும்!..)

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. பதிவும், படங்களும் மிக அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள். சோழர்களின் ஆட்சியின் வரலாற்றை வரிசையாக அவற்றின் வருடங்களின் கணக்கில் பகிர்ந்துள்ளது கண்டு மிகவும் மகிழ்வுற்றேன். முன்பு பள்ளியில் படித்தது. அப்போதெல்லாம் அவர்கள் ஆட்சி செய்த காலம். வருடங்கள் கணக்காக எழுத, எழுத மனப்பாடமாக இருந்தது. பின் நம் குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட மனக்குழப்பங்களில் சிலது மறந்தே விட்டது. நீங்கள் இப்போது கவனமாக தொகுத்து தந்திருப்பது படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. பதிவு மிகவும் பெருமைக்குரிய விஷயம். தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    நல்ல முயற்சி தங்களது இந்தப்பதிவை பள்ளி பாட திட்டங்களில் பதிவு செய்தால், மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    நேற்று எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் வெளியில் சென்றதினால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால், இன்றும் தாமதமாகியதற்கும் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // நல்ல முயற்சி தங்களது இந்தப் பதிவை பள்ளி பாட திட்டங்களில் பதிவு செய்தால், மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.//

      இந்தச் செய்திகள் இணையத்தில் இருந்தே தொகுக்கப்பட்டவை..

      கோயில்கள் பற்றிய செய்திகளில் நான் அறிந்தவற்றை ஒழுங்கு செய்திருக்கின்றேன்.. அவ்வளவு தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..