வெள்ளி, செப்டம்பர் 09, 2022

அகரமுமாகி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் 
அருளிச்செய்த
அதியற்புதமான
திருப்புகழ் பாடல்..

திருத்தலம் பழமுதிர்ச்சோலை

கல்யாணத் திருக்கோலத்தில்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன்
இங்கே முருகப்பெருமான்
திருக்காட்சி நல்குகின்றான்..

இதுவே
ஆறாம் படை வீடாகிய
குன்றுதோராடல்..


தனதன தான தனதன தான 
தனதன தான ... தனதான

அகரமு மாகி அதிபனு மாகி 
அதிகமு மாகி ... அகமாகி

அயன் எனவாகி அரி எனவாகி 
அரன் எனவாகி ... அவர்மேலாய்

இகரமு மாகி எவைகளு மாகி 
இனிமையு மாகி ... வருவோனே

இருநில மீதில் எளியனும் வாழ 
எனதுமுன் ஓடி ... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி 
மகிழ்களி கூரும் ... வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை 
மகிழ்கதிர் காமம் ... உடையோனே

செககண சேகு தகுதிமி தோதி 
திமியென ஆடும் ... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை 
மலைமிசை மேவு ... பெருமாளே!..
***
( நன்றி: கௌமாரம்)

அகரம் -  எல்லா எழுத்துக்களுக்கும் முதன்மையாகி
நிற்பது போல -

எல்லாவற்றிற்கும் தலைவனாகி,

எல்லாருக்கும் மேம்பட்டவன் ஆகி
யாவர்க்கும் ஆகிய உட்பொருளாகி -

உயிர்களைப் படைக்கின்ற பிரம்மன் என்றாகி
உயிர்களைக் காக்கின்ற ஹரி  என்றாகி
உயிர்களைச் சங்காரம் செய்கின்ற சங்கரன் என்றாகி,

அம்மூவருக்கும் மேலான பரம்பொருளும் ஆகி,

இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையைத் தருகின்ற பொருளும் ஆகி வருபவனே..

இந்தப் பூமியில் 
எளியவனாகிய அடியேனும் நன்முறையில் வாழ்வதற்கு ஏதுவாக
எனது முன்பாக ஓடி வந்து என்னைக் காத்தருள வேணும்..

யாகங்களுக்குத் தலைவனும்
வலாசுரனை வெற்றி கொண்டதனால் வலாரி எனப்பெயர் கொண்டவனும் ஆகிய தேவேந்திரன்,

மகிழ்ச்சியும் களிப்பும் அடையும் படிக்கு
அழகிய வடிவினை உடையவனே..
(ஏனெனில் இந்திரனது மருகன் ஆனவன் நீ!..)

காட்டில் வசிக்கின்ற வேடன் செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவனே,

கதிர்காமம் எனும் திருத்தலத்தை
உடையவனே..

செககண சேகு தகுதிமி தோதி திமி - எனும் ஜதிகளில் ஆடுகின்ற மயிலை உடையவனே..

மங்கலங்கள் நிறைந்த
பழமுதிர்ச்சோலை எனும் மலையின் மீது
வீற்றிருக்கும் பெருமாளே..


 திருப்புகழ் பாடலைப்
பாடியவர் :
பெங்களூர்
ஸ்ரீமதி A.R. ரமணியம்மாள்
இசை : கல்யாணம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. சிறப்பான பாடல் இன்றுதான் முதன் முறையாக கேட்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. முருகன் மூவுலகையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. பிடித்த திருப்புகழ் அடிக்கடி பாடும் பாடல்.
    பெங்களூர் ரமணியம்மாள் பாடியது அருமை.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழமுதிர் சோலை என் கணவருடன் போகும் போது இந்த பாடல் உற்சவ முருகன் முன் அமர்ந்து பாடி வருவேன். நினைவுகள் வந்தது , பாடலை கேட்டதும்.
    இன்று என் கணவருக்கு பிறந்த நாள் அவர்களுக்கு இஷ்ட தெய்வம் முருகன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கணவர் முருகன் அடிகளில் இருந்து உங்களையும் நினைத்துக் கொண்டிருப்பார்.

      நீக்கு
    2. //Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      உங்கள் கணவர் முருகன் அடிகளில் இருந்து உங்களையும் நினைத்துக் கொண்டிருப்பார்... மெயில் பாக்சில் இருந்து கடத்திக் கொண்டு வந்து போட்டிருக்கேன். எத்தனை நிமிஷங்கள் இருக்குமோ தெரியலை! :( அது என்னமோ என்னோட கருத்துக்கள் மட்டும் ப்ளாகர் களவாடி விடுகிறது.

      நீக்கு
  4. // இன்று என் கணவருக்கு பிறந்த நாள்..//

    தங்கள் மீதும் ஐயா அவர்கள் மீதும் நான் மனதார வைத்திருக்கும் அன்பினாலும் மரியாதையினாலும் தான் ஐயா அவர்களது பிறந்த நாளான இன்று அவர்களுக்குப் பிடித்த பாடல் பதிவில் அமைந்திருக்கின்றதாகக் கருதுகின்றேன்..

    எல்லாம் நம்மை வழி நடத்துகின்ற வடிவேல் முருகனின் திருவருள்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.முருகனின் அழகு படங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியான நிறைவை தந்தது. காணொளி கண்டேன். திருப்புகழ் அருமை. பாடி மகிழ்ந்தேன். முருகன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முருகன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன்.//

      இதுவே நமது வேண்டுதலும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இதுவரை கேட்டிராதது. அதாவது இப்படிப் பாடலாகி பங்களூர் ரமணி அம்மாள் குரலில்.

    கேட்டு ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல் வந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. பங்களூர் ரமணி அம்மாளின் தேன் குரலில் இனிமையான திருப்புகழைக் கேட்கும் பாக்கியம் இந்தக் காலை வேளையில் கிடைத்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. //Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    பங்களூர் ரமணி அம்மாளின் தேன் குரலில் இனிமையான திருப்புகழைக் கேட்கும் பாக்கியம் இந்தக் காலை வேளையில் கிடைத்தது. மிக்க நன்றி./// இதையும் மெயில் பாக்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருக்கேன். காலம்பர இதுக்கே நேரம் சரியாகி விடுகிறதே! :(

    பதிலளிநீக்கு
  9. நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சிலும் பாருங்கள் தம்பி துரை! என் கருத்துரைகள் அங்கே கிடைக்கும். :(((( அல்லது ஸ்பாமில் பாருங்கள். நேரம் கிடைக்கணும்! அதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டிக்கள் கிடக்கின்றன..

      இனி தினமும் பார்ப்பேன்..

      மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  10. முருகன் தலங்களில் ஒலிக்கும் பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..