வியாழன், செப்டம்பர் 08, 2022

திரு ஓணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆவணி 23
ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்குரிய
திரு ஓண நட்சத்திரம்

அனைவருக்கும்
அன்பின் இனிய
திரு ஓண நல்வாழ்த்துகள்..


மத்தக் களிற்று  வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே..
-: பெரியாழ்வார் :-
*

ஓண பிரான் என்று
ஸ்ரீ ஹரி பரந்தாமனை 
திருப்புகலூர் பதிகத்தில் 
அப்பர் ஸ்வாமிகள் 
குறிப்பிடுகின்றார்..

ஐப்பசி ஓண விழா.. என்று
மயிலாப்பூர் திருப்பதிகத்தில்
ஞானசம்பந்தப் பெருமான் 
குறிப்பிடுகின்றார்..


பழந்தமிழகத்தில்
சிறப்புடன் கொண்டாடப்பட்ட 
திரு ஓணப் பெருவிழா
இன்றைக்கு கேரள தேசத்துக்கு 
மட்டுமே உரியது என்றாகி விட்டது..

வசதி வாய்ப்புள்ள 
திவ்யதேசங்கள் சிலவற்றில்
மாதாந்திர திருவோணம் 
அனுசரிக்கப்படுகின்றது..

ஸ்ரீ ஒப்பிலியப்பன்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் 
ஒவ்வொரு திருவோண 
நட்சத்திரத்தன்றும் 
அகண்ட தீப தரிசனம் 
நிகழ்கின்றது..

இக்கோயிலில் 
ஆவணி மாதத்தின் 
திருவோணத்தன்று 
உதய கருட சேவை 
நடைபெறுகின்றது..


செண்டை வாத்திய முழக்கத்துடன்
படத் தொகுப்பு
காணொளி
தஞ்சையம்பதியின் வடிவமைப்பு


இந்நாளில் எல்லா நன்மைகளும் 
விளைவதற்கு 
வேண்டிக் கொள்வோம்..

ஓம் ஹரி ஓம்
***

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கும் திருவோணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஒணப்பண்டிகை படங்கள் அருமை. ஒப்பிலியப்பனை மனதாற தரிசித்து கொண்டேன். அவனருள் இந்த நன்னாளில் அனைவருக்கும் கிட்டட்டும்.பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் தொகுத்த காணொளி அருமையாக உள்ளது செண்டை மேளத்துடன் தொகுப்பை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மலையாள நடிகர் திரு. ஜெயராம் அவர்களும் இந்த செண்டை மேளத்தை முறைப்படி வாசித்து எங்கோ பார்த்த நினைவு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...

      திரு ஜெயராம் அவர்கள் மலையாளப் படம் ஒன்றில் செண்டை வாசிப்பவராகவே நடித்திருப்பார்..
      அவர் யானையும் வளர்ப்பதாக கேள்வி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. செண்டை வாத்தியம் அநேகமா தினம் தினம் இங்கே பின்னால் உள்ள சத்திரத்தில் வாசிக்கின்றனர். இப்போல்லாம் தமிழக மக்களின் திருமணங்களில் செண்டை மேளம் தான் முழங்குகிறது. நாதஸ்வரமும்/தவிலும் எங்கே போனதே என்றே தெரியாமல் போய்விட்டது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...

      மிக சமீபத்தில் கிராமத்தின் கல்யாணம் ஒன்றில் இந்த செண்டை நிகழ்ச்சி தான் நடந்தது..

      என்னவென்று சொல்வது?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. நாச்சியார் கோவில் கருடசேவை அன்று (கல்கருடன். வருடத்துக்கு இரு முறை வீதியில் எழுந்தருள்வார்), கோவில் மண்டபத்தில் 7 நாதஸ்வரம் 7 தவில்களோடு இசை மழை நடத்திவிடுவார்கள். சமீபத்தில் விழுப்புரம் அருகே இருந்த கோவிலில் பத்து நாட்களும் ஒரு நாதஸ்வர கோஷ்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் அருமையாக நாகஸ்வரம் வாசித்தவரிடம் சில கீர்த்தனைகளைச் சொல்லி வாசிக்கச்சொன்னபோது, எம்.எஸ் அம்மா, அபூர்வ ராகங்களைத்தான் பாடுவார்கள். அதனை வாசிப்பது மிகக் கடினம். அந்த அளவு எனக்கு அனுபவமில்லை என்றார். நாம் ஆதரிக்க ஆதரிக்கத்தான் கலைஞர்கள் வளர்வார்கள். இப்போதெல்லாம் பல கோவில்களில் (சொல்லவே தயக்கமா இருக்கு. திருப்பதி உட்பட) நாகஸ்வரத்திற்குப் பதிலாக வாசிக்கும் வாத்தியங்கள் கொடுமை.

      நீக்கு
    3. தவில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை நாம் ஆதரிக்கணும்.

      நீக்கு
    4. தங்களுடைய கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்று கொள்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. அனைவருக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துகள். சங்கப்பாடல்களில் கூட ஓணத்திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பின்னால் எப்போது எனத்தெரியாத காலகட்டத்தில் இது தமிழகத்திலிருந்து மறைந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. // சங்கப் பாடல்களில் கூட ஓணத் திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன. .. //

    ஆமாம்..மதுரைக் காஞ்சியில்..

    தங்களுக்கும்
    ஓணத்திருநாள் .
    வாழ்த்துகள்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  6. அத்தத்தின் பத்தாம் நாள் - ஹஸ்த நட்சத்திரம். அதிலிருந்து பத்தாம் நட்சத்திரம் - அந்தப் பக்கம் ரோகிணி. இந்தப் பக்கம் திருவோணம். அவ்வளவு அழகாக அமைக்கப்பட்ட பாசுரம் இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தகைய நட்சத்திர கணிப்புகள் சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றன..

      ஆனால் வெள்ளையன் வந்து தான் பாடம் சொல்லிக் கொடுத்ததாக சில பேருடைய கூச்சல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை அவ்ர்களே..

      நீக்கு
  7. சமீபத்தில் சுன்னத் கல்யாணத்திற்கு சென்று வந்தேன் அங்கும் செண்டை மேளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே தான் மேள தாளம் ஹராம் ஆயற்றே!..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  8. காணொளி அருமை.
    ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓணம் நல்வாழ்த்துக்களுடன்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஓணம் வாழ்த்துகள். நம் பக்கங்களில் தவிலும் நாதஸ்வரமும் கோவில் விழாக்களில் உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..