நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வியாழக்கிழமை..
இன்றைய பதிவில்
குருமலை எனப்படும்
சுவாமிமலைத்
திருப்புகழ்..
தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த ... தனதான
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு ... நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் ... மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து ... விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப ... தொருநாளே..
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து ... மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு ... மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி ... லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் தன் கையில் கரும்பு வில்லை எடுத்து நாணைப் பூட்டி,
நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லில் தொடுத்து எய்த, கூரிய அம்புகளைப் போன்ற கண்களை உடைய அழகிய பெண்கள் இகழும்படியாக,
(ஒரு காலத்தில்)
நறுமணத்துடன் இருந்த தலைமுடி முழுதும் வெளுத்து,
இளமை என்பதைக் கடந்து எங்கோ மறைந்து புதைந்து விடும்படி, இடை விடாமல் இதுவரை நான் எடுத்த பிறவிகளின் வேரை அறுத்து, இனிய உனது திருவடிகளை நீ தந்தருளும் அந்த நாளும் கிட்டுமோ?..
ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக படைகளை அதிரவே நடத்துகின்ற மயில் வீரனே,
அசுரர்களின் சேனைகள் கெட்டு அழிய, தேவர்களுக்கு முழுமையான வாழ்வை அளித்த இளங் குமரனே,
நிலவின் அமுத ஒளி தவழ்கின்ற ஜடா மகுடத்தினை உடையவராகிய சிவபெருமான் உனது முன்பாக நின்று கேட்க விரும்புகின்ற சுவாமிமலையில் வீற்றிருப்பவனே!..
ஞானத்தின் மூலப் பொருளை(அடியார்களுக்கு) விரைந்து அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அறிந்து கொள்ளும் படிக்கு அதனை வேண்டிக் கேட்க அப்பொருளை
அவருக்கு உபதேசித்த பெருமாளே!..
( நன்றி : கௌமாரம்)
**
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..
***
முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். ஓம் முருகா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்...
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. குருவாரத்தில் முருகப்பெருமான் தரிசனம் இனிதே பெற்றுக் கொண்டேன். முருகனின் துதிகள் அருமை. பாடி பரவசம் அடைந்தேன். அனைவரையும், ஒரு குறைகளின்றி குமரேசன் காக்க வேண்டுமாய் வணங்கிக் கொள்கிறேன்.
தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாளும் நல் ஆரோக்கியத்தோடு சிறப்பாக வாழ இறைவன் நல்லாசிகள் தந்தருள வேண்டுமாயும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குதங்கள் அன்பின் வாழ்த்துரைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.
நீக்குஅருமையான திருப்புகழும் அதற்கான பொருளுரையும். மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள். உடல் நலம் பூரணமாகக் குணமாகி மருமகள்/மகன், பேரன், பேத்திகளோடு அமைதியான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅன்பின் வாழ்த்துரைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமுருகா...
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்.
நீக்குஇன்றைய தரிசனம் கிடைத்தது
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ஜி.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவைஷ்ணவி
வைஷ்ணவி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.
முருகப் பெருமான் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க நலமுடன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
நீக்குவாழ்க நலம்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுருகன் அருளால் நலமாக வாழவேண்டும் பல்லாண்டு!
சுவாமி மலை திருப்புகழும், அர்த்தமும் அருமை.
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குஅன்பின் பிரார்த்தனைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
வாழ்க நலம்..
மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள் துரை அண்ணா. உடல் நலத்துடன் என்றும் மகிழ்வுடன் இறையருளுடன் இருக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசுவாமி மலைதான் குரு மலை என்பதற்கான காரணம்...அப்பனுக்கு உபதேசம் செய்ததால் இல்லையா? திருப்புகழை வாசித்து ரசித்தேன். வாசிக்கவே இனிமை. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்!!! மனதும்!
கீதா
ஆம்.. சுவாமிமலையைத் தான் குரு மலை என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.. திருப்புகழ் நோய் தீர்க்கவல்லது..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சகோ..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துரை செல்வராஜு சார். இறைவன் எப்போதும் உங்களுடன் இருந்து உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தந்து காத்திடட்டும்.
பதிலளிநீக்குசுவாமி மலை/குருமலை நல்ல விவரணங்கள். திருப்புகழுடன் சொல்லியிருப்பது மிக நன்று.
துளசிதரன்
தங்கள் வருகைக்கும்
நீக்குகருத்துரைக்கும்
மகிழ்ச்சி..
அன்பின் வாழ்த்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி துளசிதரன்..