புதன், மே 11, 2022

திருப்பூந்துருத்தி 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அப்பர் ஸ்வாமிகளின் குரு பூஜை நாளில் ஸ்வாமிகள் திருமடம் அமைத்துத் திருப்பணி புரிந்த திருப்பூந்துருத்தி திருக்கோயில் சென்றிருந்தோம்..

இன்றைய பதிவில்
திருப்பூந்துருத்தி தரிசனம்..
*
திருத்தலம்
திருப்பூந்துருத்தி

நன்றி - தினமணி

இறைவன்
ஸ்ரீ புஷ்பவனநாதர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

தீர்த்தம்
காசித் தீர்த்தம் (கிணறு)
குடமுருட்டி ஆறு..
தல விருட்சம்
வில்வம், வன்னி

ராஜ கோபுரத்தைக் கடந்ததுமே
தெற்கு நோக்கியதாக அம்பிகையின் சந்நிதி..



மகிஷாசுரனை அழித்த
ஸ்ரீ துர்காம்பிகை அப்பாவத்தைப் 
போக்கிக் கொள்வதற்காக
சிவ வழிபாடு செய்த தலம்..


துர்க்கை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் கோலத்தில் இரண்டாம் திரு வாசலுக்கு முன்பாக வட புறத்தில் தனிக்கோயிலில் விளங்குகின்றாள்..





கருவறைக்கு  இருபுறமும் வட கயிலாயம் தென் கயிலாயம் என இரு சந்நிதிகள் அமைந்துள்ளன..


தெற்கு மேற்கு பிரகார மண்டபங்களில் அப்பர் பெருமானின் வரலாறு முழுதும் பழைமையான வண்ணங்கள் கொண்டு தீட்டப் பெற்றுள்ளன.. 



வடக்கு பிரகார மண்டபத்தில் ஞான சம்பந்தர், சுந்தரர் வரலாறு தீட்டப்பட்டுள்ளது..



காசியப முனிவரின் வழிபாட்டிற்காக கிணற்றில்  பொங்கி வந்தாள் கங்கை.. காசித் தீர்த்தம் என அக்கிணறு கோயிலினுள் இருக்கின்றது..
பித்ரு தோஷம் தீர்க்கும் தலங்களுள் இதுவும் ஒன்று..

அடுத்த பதிவில் மேலதிக தகவல்களும் படங்களும்..
*
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்திருச் சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே..6.043.7
-: திருநாவுக்கரசர் :-

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  அழகான படங்கள்.  கோவில் பழமையாகவும், அழகாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு.. வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. படங்களும் தகவல்களும் நன்று. தமிழகம் வந்தால் பார்க்க வேண்டிய கோயில்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டியிருக்கிறது. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என.

      நீக்கு
  2. கோவில் தரிசனம் அருமை. படங்கள் எல்லாம் அருமை.
    நாங்கள் போய் இருக்கிறோம்.
    ஓம் நம சிவாய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மிகப் பழைய கோயில் போலத் தெரிகிறது. போனதில்லை. ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். விருந்தினரை உபசரிப்பதில் கூடத் திருப்பூந்துருத்தி உபசாரம் என்பது பெயர் பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்த உபசாரத்தை சப்த ஸ்தான திருவிழாவின்போது காணலாம்.

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா

      நீக்கு
  4. பூந்துருத்தி பல முறை சென்றுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக இன்று மறுபடியும் சென்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  5. திருப்பூந்துருத்தி - பெயரே அழகாக இருக்கிறது. தரிசனம் அருமை.
    படங்களும் அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் பெரிய பழம் பெரும் கோயில் என்று படங்கள் சொல்கின்றன. இப்படியான கோயில்களும் சிற்பங்களும் அழகு. எளிமை. இப்போது புதியதாய் கட்டப்படும் கோயில்கள் எல்லாம் தங்கம் வைடூரியம் இழைத்து என்றெல்லாம் சொல்கிறார்கள் பள பளப்பாக இருக்கின்றன. ஏனோ மனதை இவை ஈர்ப்பதில்லை. அங்கு பணம் தான் முன்னில் நிற்பதாகத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முதல் படம், மூன்றாம் படம், அப்புறம் சன்னதி விமானங்கள் செம அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..