வியாழன், மே 12, 2022

திருப்பூந்துருத்தி 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

திருப்பூந்துருத்தியைப் பற்றிய
பதிவின் இரண்டாம் பகுதி..




கோயிலில் அப்பர் பெருமான் அமர்ந்த கோலத்தில் விளங்குவது சிறப்பு..


மே
லும் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் விளங்குவதும் அழகு..


அப்பர் திருமடம் அமைத்து உழவாரத் தொண்டு செய்த திருத்தலம் திருப்பூந்துருத்தி.. ஆகையால் இதனைக், காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞான சம்பந்தப் பெருமானுக்கு நந்தியை விலகச் செய்து இறைவன் காட்சி தந்தருளியதாகத் தலபுராணம்..


ஞானசம்பந்தப் பெருமானுக்காக
நந்தி விலகிய தலங்களுள் இதுவும் ஒன்று..

எனினும் இத்தலத்திற்கென சம்பந்தப்பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை.. தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஐக்கியமாகி விட்டது..


ஆனை கொண்ட அரவு
திருக்கோயில் வாசலின் தென்புறமாக -
பெரும் பாம்பு ஒன்று யானையை விழுங்கியபடி கதையில் சுற்றிக்
கொண்டிருக்க - அந்தக் கதையைக் கையில் தாங்கியவாறு விளங்கும் துவார பாலகர் சிற்பம் சோழநாட்டு சிற்பிகளின் திறனுக்குக் கட்டியம் கூறுவது..








கோயிலுக்கு அருகாமையில் அப்பர் திருமடம்.. இத்திரு மடத்தில் ஞான சம்பந்தப் பெருமானும் சில காலம் தங்கி இருந்திருக்கின்றார்..

திருமடத்தை அடுத்து குடமுருட்டி ஆறு..

சித்திரை 22 (5/5) அன்று திரு ஐயாறு ஸ்ரீ ஐயாறப்பர் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் வைகாசி 2 (16/5) திங்கள் அன்று காலையில் ஐயாறப்பர் திருக்கோயிலில் இருந்து சப்த ஸ்தான பல்லக்குப் புறப்பாடு நிகழும்...

மேலும் தகவல்கள் அடுத்த பதிவில் தொடரும்..
**

மின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர்
பால்மகிழ்ந்தான்
என்னிறம் என்றமரர் பெரியார் இன்னந்
தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும்
என்னிற எந்தைபி ரான்தனை யான்
போற்றுவதே..4/88/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. படங்களும், விவரங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் நன்று ஜி வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. பூந்துருத்தி என்றதும் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற திருத்திருத்தி எனப்படும் குத்தாலம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் கோயில் பற்றிய விவரங்களும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. என் கருத்து எங்கே போச்சு? மீண்டும் மீண்டும் இட்டு ...

    படங்களும் தகவல்களும் சிறப்பு.

    திருக்கோயிலின் வாசலின் தென்புறம் துவாரபாலகர் - பாம்பு சிற்பம் மிக அழகு.

    அடுத்து சுவர்களில் ஓவியங்கள் ரொம்பவே அழகாக த் தீட்டப்பட்டிருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அழகான சிற்பங்கள்/ இவற்றை எல்லாம் கணக்குத் தெரியாமலா அந்த அந்த முறைப்படி வடித்திருப்பார்கள்? இத்தகைய அற்புதமான கலைக்கு ஈடும் இணையும் இல்லை. என்றாலும் வெள்ளைக்காரன் தான் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான் என்பது எத்தகைய அறியாமை!

    பதிலளிநீக்கு
  7. திருப்பூந்துருத்தி பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பாக வந்துள்ளன.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் அருமை. தலவரலாறு மற்றும் பல செய்திகள் அருமை. சப்த ஸ்தான பல்லக்ககு காட்சிகளை முன்பு ஒரு பதிவில் நீங்கள் பகிர்ந்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. திருப்பூந்துருத்தி குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் நன்று. சப்த ஸ்தான பல்லக்கு புறப்பாடு - முடிந்தால் பார்க்க ஆசை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..