வியாழன், மார்ச் 10, 2022

குருவே சரணம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று (9/3) புதன் கிழமை.. சுக்ல பட்ச சப்தமி..

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் திரு அவதார தினம்..

பிருந்தாவன குறிப்புகளின்படி ஸ்வாமிகளின் அவதார தினம் சாலிவாகன சகாப்தம் 1523 (1621) சுபக்ருது வருஷம் பங்குனி சுக்ல பட்ச சப்தமி மிருகசீர்ஷ நட்சத்திரம்..

நேற்று -
ஸ்வாமிகளின் சந்நியாச ஸ்தலமாகிய தஞ்சை பிருந்தாவனத்தில் நூற்றெட்டு பால்  கலசங்களுடன்  இதர மங்கல திரவிய அபிஷேகங்களும் மலர் அலங்காரமும்  மகா தீப ஆராதனையும் நிகழ்ந்தன..

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
மதியம்  ஒரு மணியளவில் மகா அன்னதானமும் நடைபெற்றது..
வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்!..






ஸ்வாமிகள் சந்நியாசம் ஏற்றுக் கொண்ட பின்னர் எவ்விதம் பன்னிரண்டு ஆண்டுகள் -  வெயில், மழை, பனி, காற்று - என்று எல்லா பருவங்களுடனும் ஒன்றி இருந்து நம்பொருட்டு தவம் இருந்தார்களோ,

ஸ்ரீ பிருந்தாவனம்
(Flex ல் இருந்து)

அவ்விதமே இன்றும் ஸ்வாமிகளின் பிருந்தானம் வெயிலுக்கும் மழைக்கும் மேல் விதானம் இன்றி விளங்கிக் கொண்டிருக்கின்றது..






ஸ்வாமிகள்  தமது இளம் வயதில் வறுமையில் வாடி உழன்றதாக வரலாறு.

ஆனால்,
இன்று ஸ்வாமிகளின் நல்லருளால் லட்சோப லட்சம் இல்லங்கள் நிறைவுடன் விளங்கிக் கொண்டிருக்கின்றன..


குருவே சரணம்..
சரணம்.. சரணம்..

பூஜ்யாய ராகவேந்த்ராய
ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய
நமதாம் காமதேனவே..
ஓம் ஹரி ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஓ..   நேற்று ஸ்வாமிகளின் அவதார தினமா?  அவரை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி..

      குருவே சரணம்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      வருக.. வருக..
      மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி..

      குருவே சரணம்..

      நீக்கு
  4. குருவே சரணம். பதிவும் படங்களும் நேரில் பார்த்த நிறைவை தந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி..

      குருவே சரணம்..

      நீக்கு
  5. ஓ நேற்று சுவாமிகளின் அவதார தினமோ. திருவனந்தபுரத்தில் இருந்திருந்தால் அங்கும் கோலாகலமாக இருந்திருக்கும். புத்தன் தெருவில் சுவாமிகளின் அழனாக கோயில் உண்டு.

    நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் மேல்விதானம் இன்றி இருப்பதும் அதற்கான காரணமும் அறிய முடிகிறது.

    படங்கள் சிறப்பு, துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி..

      மேலதிக செய்திகளுக்கு
      நன்றி..

      குருவே சரணம்..

      நீக்கு
  6. படங்கள் நன்றாக இருக்கின்றன. குருவிற்கு வந்தனங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      குருவே சரணம்..

      நீக்கு
  7. மேல் விதானம் இல்லாமல் இருப்பதை இன்றே அறிந்தேன். இங்கே வெக்காளி அம்மனும் மேல் கூரை இல்லாமல் இருக்கிறாள். இது போல் இன்னும் சில ஊர்களிலும் உண்டு. நேற்று ஶ்ரீராகவேந்திரர் பற்றிய பல செய்திகள் வாட்சப்பிலும், முகநூலிலும் பலரும் பகிர்ந்து கொண்டனர். இங்கேயும் காணக் கிடைத்தமைக்கு நன்றி. எல்லாப்படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி..

      உறையூர் ஸ்ரீ வெக்காளி அம்மனை தரிசித்து இருக்கின்றேன்..

      கருத்துரைக்கு நன்றியக்கா..

      குருவே சரணம்..

      நீக்கு
  8. ஸ்வாமிகளின் திருஅவதார தினம் குறித்த பதிவும் படங்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..