நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் நீங்கிட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த
திருப்பதிகம்..
திருத்தலம் - சாய்க்காடு
சாயாவனம்
காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள்
இதுவும் ஒன்று..
சாயாவனம்
காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள்
இதுவும் ஒன்று..
இறைவன் - சாயாவனேஸ்வரர்
அம்பிகை - குயிலினும் நன்மொழியாள்
தலவிருட்சம் - கோரைப் புல்
தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்..
இத்தலத்தில் வில்லேந்திய வேலவனின்
திருக்கோலம் சிறப்பு..
ஐராவதம் வணங்கியதுடன்
எண்ணிரந்த சிறப்புகளை உடையது...
இயற்பகை நாயனார் தோற்றமுற்ற திருவூர்..
திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள
திருத்தலம்..
திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள
திருத்தலம்..
நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 65
திருப்பதிகத்தின் திருப்பாடல்கள் ஒவ்வொன்றிலும்
ஒரு புராணத்தைச் சொல்லியிருப்பார் - ஸ்வாமிகள்..
பத்து புராணங்களை ஓதிய புண்ணியப் பயன்
அனைத்தையும் தரவல்லது இந்த ஒரு திருப்பதிகம் ..
பத்து புராணங்களை ஓதிய புண்ணியப் பயன்
அனைத்தையும் தரவல்லது இந்த ஒரு திருப்பதிகம் ..
தோடுலா மலர்கள் தூவித்தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே.. 1
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே.. 1
வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்கண்டு பஃறேவர் அஞ்சி
அடைந்துநுஞ் சரணம்என்ன அருள்பெரி துடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.. 2
அரணிலா வெளிய நாவல் அருநிழலாக ஈசன்
வரணியல் ஆகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னன் ஆக்கித்
தரணிதான் ஆளவைத்தார் சாய்க்காடு மேவினாரே.. 3
அரும்பெரும் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார் சாய்க்காடு மேவினாரே.. 4
இந்திரன் பிரமனங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறையது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே.. 5
ஆமலி பாலு நெய்யும் ஆட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாத்தன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றைமாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவினாரே.. 6
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகம் அதாகி
வையக நெளியப் பாய்வாள் வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.. 7
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கி தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.. 8
நக்குலா மலர் பன்னூறு கொண்டுநன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் என்றங் கொருகணை யிடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவினாரே.. 9
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்தும் ஆயக்கொண் டரக்கன்ஓடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க...
மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நமச்சிவாய... வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி.. நன்றி..
குயிலினும் நன்மொழியாள் - எவ்வளவு அழகான பெயர் அம்பிகைக்கு.
பதிலளிநீக்குநலமே விளையட்டும்.
அன்பின் வெங்கட்...
நீக்குவாழ்க வையகம் .. மகிழ்ச்சி.. நன்றி..
சாயாவனேஸ்வரர்,
பதிலளிநீக்குகுயிலினும் நன்மொழியாள்...
மனதை நிறைக்கும் பெயர்கள்...🙏🙏🙏🙏🙏🙏
அன்பின் வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி.. நன்றி...
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குஓம் சிவாய நம...
மகிழ்ச்சி.. நன்றி..
திருவெண்காட்டில் இருந்த போதும், மாயவரத்தில் இருந்த போதும் அடிக்கடி போன கோவில்.
பதிலளிநீக்குபட்டினத்தார் திருவிழாவில் ஒரு நாள் விழா இந்த கோவிலில் நடக்கும். பிள்ளை இடுக்கி திருவிழா நடக்கும். மருதவாணரை எடைக்கு எடை பொன் கொடுத்து வாங்கும் திருவிழா. பார்த்து இருக்கிறோம் அந்த திருவிழாவை.
வில் ஏந்திய முருகனின் அழகு சொல்லி முடியாது.
பதிகம் பாடி இன்றைய தரிசன்ம் செய்து கொண்டேன்.
நன்றி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஇத்தலத்தைத் தாங்கள் தரிசித்து இருப்பீர்கள் என்பதை நானறீவேன்...
வருகையும் மேலதிகக் கருத்துகளும் மகிழ்ச்சி.. நன்றி...
சாயாவனம் போனதில்லை. போக ஆவல். சாயாவனம் நாவல் படித்திருக்கேன். நான் படிச்சப்போ வாசகர் வட்டம் வெளியீடு புத்தகம். ஒரு காடே அழிந்த கதையைப் படிச்சப்போ மனசு கலங்கிப் போனது.
பதிலளிநீக்குசாயாவனம் என்றொரு நாவலா...
நீக்குஅறிந்ததில்லை.. யாருடையது?...
சா.கந்தசாமி என்பவர் எழுதியது. எழுதும்போது இளைஞர். முதல் நாவல். பின்னர் பல நாவல்கள் எழுதினாலும் இதுதான் குறிப்பிடத்தக்கது. அவர் ஊரே சாயாவனம் தான். 60களின் கடைசியில் வந்ததுனு நினைக்கிறேன். சித்தப்பா வீட்டில் இருக்கையில் வெளியீடு கண்டவுடனே படித்திருக்கிறேன்.
நீக்குகூகிளாரிடம் கேட்டதில் இந்த விமரிசனம் கிடைத்தது. இது கீதமஞ்சரியின் நாத்தனார் எழுதியதென நினைக்கிறேன். http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23864.html நாவல் பிடிஎஃப் வடிவிலும் இணையத்தில் கிடைப்பதாகச் சொன்னார்கள். அதான் தேடினேன். கிடைக்கலை.
நீக்குபெயரைப் பார்த்ததும் பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் எண்ணங்கள் எங்கோ போய்விட்டன. மன்னிக்கவும். கோமதி சொன்னமாதிரி மருதவாணரை வாங்கும் திருவிழா சிறப்பாக நடைபெறும் என நானும் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது இல்லை. பதிகங்கள் அனைத்தும் எப்போதும் போல் மனதை மகிழ்விக்க வைக்கின்றன. குயிலைப் பழிக்கும் அன்னையின் பெயர் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி...
நீக்குபூம்புகார் திருவெண்காடு வரை சென்றிருந்தும்
சாயாவனம் மேலப்பெரும்பள்ளம் - இத்தலங்களைத் தரிசித்ததில்லை...
இம்முறையாவது தரிசனம் செய்திடல் வேண்டும்...
மகிழ்ச்சி.. நன்றி...