நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த
திருப்பதிகம்
இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் - 24
திருத்தலம் - திருநாகேச்சுரம்
இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர், செண்பகாரண்யர்
அம்பிகை - ஸ்ரீ பிறையணி வாள்நுதலாள், கிரிகுஜாம்பிகை
தீர்த்தம் - சூர்ய புஷ்கரணி
தலவிருட்சம் - செண்பக மரம்
மூலஸ்தானத்தின் அருகிலேயே
கிழக்கு நோக்கிய சந்நிதியில்
ஸ்ரீ பிறையணிவாள்நுதலாள் அம்பிகை..
மகா சிவராத்திரியன்று இத்தலத்தில்
நாகராஜன் இரண்டாம் கால வழிபாடு
செய்து தரிசித்ததாக ஐதீகம்..
கொடிமரத்துக்கு வடக்காக
தனிக்கோயிலாக
ஸ்ரீ சரச்வதி ஸ்ரீ லக்ஷ்மி உடனிருக்க
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
தனிக்கோயிலாக
ஸ்ரீ சரச்வதி ஸ்ரீ லக்ஷ்மி உடனிருக்க
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
எண்ணிரந்த பெருமைகளை
உடைய திருத்தலம்...
ஆயினும் இற்றை நாளில்
ராகு ஸ்தலம் என்று சொன்னால் தான்
மக்கள் புரிந்து கொள்வர்...
பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரை காவிரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே எனவல் வினை மாய்ந்தறுமே.. 1
சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினை ஆசறுமே.. 2
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினை தேய்ந் தறுமே.. 3
நகுவான் மதியோட ரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.. 4
கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினை தானறுமே.. 5
குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம்
அரைசே எனநீங் குமருந் துயரே.. 6
முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையா என வல்வினை தானறுமே.. 7
ஓயா தவரக் கன்நொடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே எனவல் வினைதா னறுமே.. 8
நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சுர நகரே
இடமா உறைவாய் எனஇன் புறுமே.. 9
மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.. 10
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந்த மிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
திருநாகேஸ்வரம் சென்றுள்ளேன். தரிசனம் செய்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசிவம் நம்மைக் காக்கட்டும்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி..
சிவமே சரணம் இன்றைய தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குஅன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம...
நீக்குநிறையப் போயாச்சு! அநேகமா வீட்டில் எல்லோருக்காகவும் போயிருக்கோம். இப்போதெல்லாம் வியாபார ஸ்தலமாகி விட்டது! எனத்தைச் சொல்ல! ஒரு காலத்தில் சாவகாசமாகப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்த ஊர்!
பதிலளிநீக்குமூலவர் சந்நிதியின் நடை அடைக்கப்பட்டு விட்டால் திருச்சுற்று வலம் வரக்கூடாது என்பது மரபு...
நீக்குஅதையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு திருச்சுற்றில் இருக்கும் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்...
நவக்கிரப் பரிகாரத் தளங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கோயில்களுள் மிகவும் கோபக்கார பணியாளர்கள் இருப்பது இங்கே தான்...
நேரிடையாக ராகுவின் அதிகாரம் பெற்றவர்களாக நடந்து கொள்வார்கள்...
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
அது என்னமோ தெரியலை, முதல்லே படங்கள் வரதே இல்லை. அப்புறமா மறுபடி மறுபடி ரீலோட் செய்தால் சில சமயம் சில படங்கள் வருகின்றன. சிலது வருவதில்லை. கொஞ்ச காலமாகவே இணையம் கொஞச்ம் பிரச்னையாகவே இருக்கு! எந்தப் பதிவும் உடனே திறக்காது.
பதிலளிநீக்குஇங்கேயும் ஆயிரக்கணக்கானவர்கள் அறைகளில் முடங்கிக் கிடப்பதால் இணையம் மிக மோசமாக இருக்கிறது...
நீக்குபடங்கள் அருமை தரிசனம் செய்து கொண்டேன் பதிகம் பாடி.
பதிலளிநீக்குநிறைய தடவை போன கோவில்.
முன்பு இருந்த நிம்மதியான் தரிசனம், இப்போது செய்யும் தரிசனம் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
நீக்குதிருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக
கடுபிடியான நெரிசல்/தரிசனம் இங்கே...
ஒன்றரை மணி நேரத்துக்குள் மூன்று குழுக்களாக காசு கொடுத்தோரை ஒழுங்கு செய்து கம்பிக் கூண்டுக்குள் அடைத்து அமுக்கி அழுத்தி...
அங்கேயே பாவம் பரிகாரம் ஆகி மீண்டும் முளைத்து விடும்...
தரிசனத்தைக் குறை சொல்வதாக இல்லை.. அங்கே கூடுவோரை நடத்தும் விதம் அலாதி...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
ஐயா வணக்கம். எப்படி இருக்கீங்க. இன்றைய சூழலில் தினமும நண்பர் ஒருவர் அனுப்ப தேவாரம் கேட்டுக்கொள்கிறேன். இன்று உங்கள் பதிவிலும் அதுவே. அருமை. நலமுடன் இருக்கவும். சந்திக்கலாம்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்றோம்... மகிழ்ச்சி...
ஊரடங்கு நடைமுறை ஆனதில் இருந்து நாளொரு தேவாரம் திருப்புகழ் திருப்பாட்டுகள் என்று பதிவில் வழங்கிக் கொண்டிருக்கிறேன்...
பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?..
தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொள்கிறேன்...
வாழ்க நலம்... மகிழ்ச்சி.. நன்றி..
தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் இதுவும் ஒன்று. பல முறை சென்றுள்ளேன். இக்காலத்தில் எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது கோயிலுக்குச் சென்றுவரும் உணர்வு ஏற்படுகிறது. உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருள் உதவட்டும். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்களது பணிச் சுமைகளுக்கு இடையேயும் இங்கு வந்து கருத்து அளிப்பது கண்டு மகிழ்ச்சி...
தங்களை போன்ற நல்லோர் தம் வேண்டுதலால் உலகம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும்...
இறைவன் துணை...
மகிழ்ச்சி.. நன்றி..
இங்கே சென்றிருக்கிறோம். நீங்கள் சூழ்வதிப் போல் ராகு பரிகாரத் தலம் என்றால் சுலபமாக புரியும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குபரிகாரத் தலங்களாகிய சிவாலயங்களை எல்லாம் அந்தந்த கிரகங்களின் பெயரால் ஊடகங்களின் உதவியுடன் மாற்றி விட்டார்கள்...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
திருநாகேஸ்வர தரிசனம் பெற்றோம். இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குபதிகமும் அறிந்து கொண்டேன்
துளசிதரன்
இக்கோயில் சென்றதில்லை. இங்கு தரிசனம் கிடைத்தது அண்ணா. பதிகமும் வாசித்தேன். இதை ராகு பரிகார ஷேத்திரம் என்பார்கள். ஆனால் எனக்கு திருநாகேஸ்வரம் என்றுதான் அறிமுகம் எனவே அதுவே மனதில்.
கீதா
அண்ணா தட்டச்சும் பொது தவறாகிவிட்டது திருநாகேச்சுரம் என்று வந்திருக்க வேண்டும் அது வீட்டில் வாய்வழக்கில் வந்துவிட்டது...
பதிலளிநீக்குகீதா