சனி, மார்ச் 28, 2020

ஸ்ரீ வேங்கடேச சரணம் 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருமொழி
முதற் பத்து - பத்தாம் திருமொழி

ஸ்ரீ கோதண்டராமன் தில்லை விளாகம்
(திருத்துறைப்பூண்டிக்கு அருகில்)
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செலவுய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கடமா மலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.. {1038} 

இலங்கைப் பதிக்கு அன்றீறையாய அரக்கர்
குலங்கெட்டவர் மாளக் கொடிப்புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே..{1039}

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
(மன்னார்குடிக்கு அருகில்)
நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல்துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கடமா மலைமேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே..{1040}

உண்டாய் உறிமேல் நறுநெய்அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விந்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே..{1041}

ஸ்ரீ நரஸிம்ம மூர்த்தி - நாமக்கல் 
தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலை மேய
கோணா கணையாய் குறிக்கொள் எனைநீயே.. {1042}

மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி
தன்னாகித் தன்னினருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என்னெஞ்சில் உளானே.. {1043}

மானேய்மட நோக்கித் திறத்து எதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங்கடமா மலைமேய
கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே..{1044}

சேயன் அணியன் என் சிந்தையுள் நின்ற
மாயன் மணிவாள் ஒளிவெண் தரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மாமலை மேய
ஆயன் அடியல்லது மற்ற றியேனே.. {1045}


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பி
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை விடேனே.. {1046}

வில்லார்மலி வேங்கட மாமலை மேய
மல்லார்த்திர தோள் மணிவண்ணன் அம்மானை
கல்லார்த்திர தோள் கலியன் சொன்னமாலை
வல்லாரவர் வானவராகுவர் தாமே..{1047}


ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய..
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. இந்தியாவில் இன்று முதல் தொடங்கும் காலகட்டம் மிக முக்கியமானது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.  அந்த நாராயணன் அனைவரையும் காக்கட்டும்.  பத்திரமாக இருங்கள்.

    ஓம் நமோ நாராயணாய...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், வாழ்க வளமுடன்

    தரிசனம் செய்து பத்தாம் திருமொழி பாடி வேண்டிக் கொண்டேன்.வாழ்க
    வையகம் வாழ்க வளமுடன்.
    நாராயண மந்திரம் நலம் தரும் மந்திரம்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமோ நாராயணாய....

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. இதிலுள்ள பஞ்சராமர் தலங்களில் இரண்டிற்கும் (தில்லைவிளாகம், வடுவூர்), நாமக்கல் தலத்திற்கும் சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைவரையும் காக்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. தில்லைவிளாகம், வடுவூர், நாமக்கல் ஆகிய ஊர்களில் சிறப்பான தரிசனம் கிட்டியது. இங்கேயும் பார்த்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..