சனி, பிப்ரவரி 01, 2020

குடமுழுக்கு வைபவம் 1

வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருவிழாவாக
நிகழும் ஸ்ரீ விகாரி வருடம் தைத் திங்கள் இருபத்திரண்டாம் நாள்
புதன் கிழமை காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்

தக்ஷிணமேரு என்று போற்றப்படுவதாகிய
தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரத்தின் ஸ்ரீ விமானத்திற்கு
திருக்குடமுழுக்கு வைபவம் சீரும் சிறப்புமாக நிகழ இருக்கின்றது..

அப் பெருவிழாவிற்கான அழைப்பிதழ்
விழாக்குழுவினராலும் சிவநேயச் செல்வர்களாலும்
இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது..

அந்த அழைப்பிதழை இன்று நமது தளத்தில் பதிவு செய்து
அனைவரையும் அழைப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்..







முன்னதாக குடமுழுக்குப் பெருவிழாவிற்காக
நாடெங்குமுள்ள நதி தீரங்களிலிருந்து புண்ணிய தீர்த்தங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளன...

திருஐயாறு பூசப்படித்துறையில் காவிரி நதியிலிருந்து
நன்னீர் எடுக்கப்பட்டதி இங்கே காணலாம்..




யானையின் மீது எடுத்துவரப்படும் தீர்த்தம் 


தங்க முலாம் பூசுவதற்காக 
ஸ்ரீ விமான சிகரத்திலிருந்து கழற்றப்பட்ட கலசம் மீண்டும்
30/1 அன்று நிலைநிறுத்தப்பட்டது...






யாகசாலைக் காட்சிகள்...







திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
அவரது தளத்தில் விரிவான செய்திகளுடன் 
படங்களையும் வழங்கியிருக்கின்றார்கள்.. கண்டு மகிழ்க...

நிகழ்வின் படங்களை இணையத்தில் வைத்த நண்பர்கள் 
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

கிடைத்தற்கரிய பேறு கிடைத்திருக்கின்றது..
வாய்ப்புள்ள அனைவரும் தவறாது கும்பாபிஷேக தரிசனம் கண்டு மகிழ்க...




பன்னெடுங் காலம் பணி செய்து பழையோர்
தாம் பலர் ஏம்பலித்து இருக்க 
என்னெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்
விலங்கல் செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே..
-: கருவூரார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. முனைவர் அவர்களின் தளத்திலும் கண்டு இருந்தேன் இங்கும் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அனைத்து படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. அன்பு துரை,
    இனிய காலை வணக்கம்.
    பெரிய கோயில் பெரிய பெருமான்,பெரிய அன்னை.
    தஞ்சையின் மகிமையைத்தான் எத்தனை உரைத்தாலும் போதுமா.
    அனைத்துப் படங்களும் ஆகச் சிறப்பு வாய்ந்தவை.
    முனைவர் பதிவிலும் ,இதோ இப்போது உங்கள் பதிவிலும் ஐய்யனையும்,
    அருள்மிகு கருவூர்ச் சித்தரையும், மன்னன் ராஜராஜச்
    சோழனையும் கண்டு அளவில்லா மகிழ்ச்சி.

    தமிழ் என்றும் பெருகி வளரட்டும். ஈசன் அருள் எங்கும் பொலியட்டும்.
    மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈசன் அருள் எங்கெங்கிலும் பொலியட்டும்...

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான பதிவு.   தஞ்சைப்பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே...   

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் படங்களும் அருமை என்றாலும் நிலவுக்கும் வீனஸ்(?)க்கும் இடையே காண முடிகிற கோபுரக்காட்சி அதி அற்புதம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் கும்பாபிஷேஹப் பத்திரிகை எனக்கும் வாட்சப்பில் வந்தது. இங்கேயும் பார்த்தேன். முனைவர் அவர்களின் தளத்துக்கும் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான படங்கள். உங்கள் மூலம் அழைப்பிதழும் காணக் கிடைத்தது - மகிழ்ச்சி.

    வாய்ப்பிருக்கும் அனைவரும் கலந்து கொண்டு தகவல்களைத் தரட்டும்.

    அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..