திங்கள், பிப்ரவரி 03, 2020

குடமுழுக்கு வைபவம் 2

தஞ்சை பெரியகோயிலின் திருக்குடமுழுக்கு விழாவின் படங்கள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...


ஸ்ரீதட்க்ஷிண மேருவின் உச்சியில் வளர்பிறையும் வெள்ளி கிரகமும் 
திருக்கோயில் வைபவங்களில் கலந்து கொள்வதற்கு
தருமபுர ஆதீனகர்த்தரும் ஏனைய மடாதிபதிகளும் எழுந்தருளினர்.. 










யாக சாலையின் எழில் தோற்றங்கள்..




யாகசாலை வேள்விக்கான சமித்துகள் 
திருக்குடமுழுக்கிற்காக கங்கை முதலாக நர்மதை யமுனை - என
புண்ணிய நதி தீரங்கள் பலவற்றிலிருந்தும்
எடுக்கப்பட்ட தீர்த்தக் குடங்கள்
தஞ்சை மாநகரின் வடக்கே மேற்கு நோக்கி விளங்குவதாகிய
ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன் உடனாகிய தஞ்சபுரீஸ்வரர்
திருக்கோயிலில் பூஜிக்கப்பட்டு அங்கிருந்து
யானை மீது வெகு கோலாகலமாக
பெரிய கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது...













உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே..
-: திருமூலர் :- 

மனம் மகிழ வைக்கும் காணொளி
மற்றும் படங்களை
வலையேற்றியவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


தஞ்சை விடங்கர் ஸ்ரீதியாகராசப்பெருமானும் அல்லியங்கோதையும் 
சிறப்பு மிகும் வைபவமாக யாக சாலை பூஜைகள்
சனிக்கிழமையன்று (1/2) தொடங்கியுள்ளன...

இவ்வேளையில்
எல்லாம் நலமாக நடந்தேற வேண்டி
பிரார்த்தித்துக் கொள்வோம்..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.(3/54)
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்...

    நேற்றிரவு குடமுழுக்கு வைபவத்தின் மூன்றாவது பதிவை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது இணையத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் பற்பல போலி பதிவுகள் உருவாகி விட்டன..

    அவற்றை ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்து நீக்கும் போது இரண்டாவது பதிவு எதிர்பாராத விதமாக அழிந்து விட்டது...

    அதன் பிறகு ஒரு வழியாக மீண்டும் பதிவை உருவாக்கி வெளியிட்டுள்ளேன்.

    அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா, கில்லர்ஜி. கோமதி அரசு, தனபாலன், ஜம்பு லிங்கம் ஐயா, வல்லியம்மா என பலரும் பதிவுக்குக் கருத்துரை செய்திருந்தார்கள்...

    அவர்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றி...

    வழக்கம் போல மூன்றாவது பதிவு வெளியாகும்....

    அன்பின் வணக்கங்களுடன்
    துரை செல்வராஜூ...

    பதிலளிநீக்கு
  2. போலி பதிவுகளா?  அதென்ன?  நியூ ஃபோல்டர் வைரஸ் போலவா?  எப்படி ஆயிற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்....

      பதிவை எழுதி சேமித்து மூடினால் - அதைப் போல பத்து பதினைந்து பதிவுகள் புன்னகைக்கும்....

      ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தால்
      ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சேமிப்பு விஷயங்கள் இருக்கும்...

      ஏற்கனவே சிறுகதை ஒன்று இப்படியாகி இருக்கிறது...

      இது இரண்டாவது தடவை...

      நீக்கு
  3. தஞ்சை கோலாகலமாக இருக்கும். படங்கள் குதூகலத்தைத் தருகின்றன.

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள். தஞ்சையில் இருந்து பார்க்க முடியாத குறையை உங்கள் பதிவு நீக்குகிறது - சிறிதளவேனும்!

    தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..