தமிழமுதம்
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை..(036)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 19
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனைப் போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..
***
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திருந்துதேவன்குடி
(தற்காலத்தில் நண்டாங்கோயில்)
இத்தலத்தில் நண்டு வழிபட்டு உய்ந்ததாக ஐதீகம்.
இன்று இவ்வூர் இல்லை..
திருக்கோயில் மட்டுமே உள்ளது..
கடக ராசியினருக்கு உகந்த கோயில் என்றறியப்படுகின்றது..
கண்நோய் தீர்க்கும் திருத்தலம்..
ஸ்வாமியை தாமரை மலர்கொண்டு வழிபடுவது சிறப்பு..
கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் இருந்து
இரண்டு கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு
நடுவிலுள்ளது இத்திருக்கோயில்..
ஸ்ரீ கற்கடகேஸ்வரர் |
கண்நோய் தீர்க்கும் திருத்தலம்..
ஸ்வாமியை தாமரை மலர்கொண்டு வழிபடுவது சிறப்பு..
கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் இருந்து
இரண்டு கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு
நடுவிலுள்ளது இத்திருக்கோயில்..
ஸ்ரீ கற்கடகேஸ்வரர் திருந்துதேவன்குடி |
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன் குடித்தேவர் தேவெய்திய
அருந்தவத்தவர் தொழும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-
செவிகள் ஆர்விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள் பாடுவ்வன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயுந் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-
***
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன் குடித்தேவர் தேவெய்திய
அருந்தவத்தவர் தொழும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-
திருக்கரத்தில் அமிர்த கலசத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணு திருந்துதேவன்குடி |
கவிகள் பாடுவ்வன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயுந் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே..(3/25)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னமும் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!.. 7
கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8
***
-: அபிராமிபட்டர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அரியலூர் கலிவரதரை இரு ஆண்டுகள் முன்னர் தான் தரிசிக்கும் பேறு கிட்டியது. நண்டாங்கோயில் பற்றித் தெரியாது. கேட்டதில்லை. அடியக்கமங்கலம் பக்கம் ஓர் தேவங்குடி உள்ளது. அது வேறே, இது வேறே தானே!
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு நல்வரவு...
நீக்குகும்பகோணத்துக்குப் பக்கத்தில் திருவிசநல்லூருக்கு அருகில் உள்ளது
ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருக்கோயில்...
மகிழ்ச்சி.. நன்றி...
தரிசித்தேன். குறிப்பிட்டிருக்கும் எந்தக்கோவிலும் தெரியாது. போனதில்லை.(ரொம்பப் பெருமைதான் என்று முகவாயையும், தோள்பட்டையையும் இணைக்க வேண்டாம்!)
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்களுக்கு விரைவில் இத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுவதாக...
மகிழ்ச்சி.. நன்றி...
தரிசித்தேன்....
பதிலளிநீக்குஅன்பு துரை,
பதிலளிநீக்குஅதிசயமான திருத்தலங்கள்.
நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும்
ஈசனார் கோவில்.
கூடவே அருமையான ஈஸ்வரி.
பேரனுக்குக் கடக ராசி. சளித்தொல்லையால் அவதிப் படுகிறான்.
அவனுக்காக தெய்வத்திரு கற்கடேஸ்வரரையிம் அன்னை
அருமருந்து நாயகியையும் பிரார்த்திக்கிறேன்.
கலியுக வரதன் மிகப் புதுமை.
எல்லாத் தெய்வங்களும் எல்லொரையும் காக்க வேண்டும்.
மிக மிக நன்றி மா துரை.
தரிசனம் அருமை...
பதிலளிநீக்குஇன்றைய தரிசனமும் நாங்கள் அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்லும் கோவில்.
பதிலளிநீக்குகலியபெருமாள் கோவில் தரிசனம் திருந்துதேவன் குடி எல்லாம் போய் இருக்கிறோம். பிரசித்தி பேறமல் பாழ் அடைந்து கிடந்த போதும் கும்பாபிஷேகம் ஆகி கூட்டம் நிறைய வரும் போது போய் இருக்கிறோம். மாயவரத்திலேயே இருந்து இருக்கலாம் என்று தினம் நினைக்க வைக்கிறீர்கள்.
முதல் படம் ரொம்பவே அழகு....
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. தொடரட்டும் பக்தி உலா.
அருமை
பதிலளிநீக்கு