தமிழமுதம்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.. (398)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 18
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..
***
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திருவிடைமருதூர்
ஸ்ரீ விநாயகப்பெருமான் சிவபூஜை நிகழ்த்திய
பெருஞ்சிறப்புடைய திருக்கோயில்..
தைப்பூசத்துக்குரிய திருத்தலம்..
ஸ்ரீ விநாயகப்பெருமான் சிவபூஜை நிகழ்த்திய
பெருஞ்சிறப்புடைய திருக்கோயில்..
தைப்பூசத்துக்குரிய திருத்தலம்..
பட்டினத்தடிகளும் பத்ருஹரியாரும் சிலகாலம்
வதிந்தது இங்குதான்..
தொழிலவன் துயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்து கந்த
எழிலவன் வளநகர் இடை மருதே.. (1/110)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே.. (5/14)
-: திருநாவுக்கரசர் :-
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்... 5
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்... 5
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்... 6
***
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் தரிசனம் கிடைத்தது. அம்மையையும் வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நல்லதொரு தரிசனத்துக்கு நன்றி. அனைத்துமே அடிக்கடி போன கோயில்கள். மார்கழிப் பதிவுகள் சிறப்பான படங்களுடன் கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாக உள்ளன.
பதிலளிநீக்குஇன்றைய தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குபதிவின் முதல் குறளிலிருந்து அத்தனை
பதிலளிநீக்குபடங்களும் ,உள்ளூறை தெய்வங்களும்,
ஆழ்வார் பாசுரங்கள், திருவெம்பாவை எல்லாமே படிக்கவும் பார்க்கவும்
இந்த வெள்ளிக்கிழமை பரிசாக அமைந்தது.
அந்தாதி அபிராமி என்றும் காப்பாள்.
திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமி இன்னும் காணக் கொடுத்து வைக்கவில்லை. நன்றி அன்பு துரை,.
அருமையான தரிசனம் கோவில்கள் கண் முன்னே வருகிறது அடிக்கடி போன கோவில்கள்.
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
திருவிடைமருதூர் தரிசனம் - உங்களால் எங்களுக்கும். நன்றி ஐயா.
பதிலளிநீக்குதொடரட்டும் மார்கழிப் பதிவுகள்.