வியாழன், மே 23, 2019

முத்துப் பல்லக்கு

வைகாசி மூல நட்சத்திரத்தில்
ஞானசம்பந்தப் பெருமானின்  குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது
முத்துப் பல்லக்கு வைபவம்...

பெருமான் - சிவதரிசனம் பெற்றதாக
நகரிலுள்ள அனைத்து விநாயகர் கோயில்கள் மற்றும் முருகன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருள -

மேல ராஜவீதியின் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சிறப்பான ஆராதனைகள் நிகழும்..

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஞான சம்பந்தப்பெருமானின் பழைமையான சித்திரம் திருவீதி எழுந்தருளல் நிகழும்...

அந்தவகையில் -
நேற்று மாலையில் தஞ்சை நகரின் ராஜவீதிகளில் முத்துப் பல்லக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது...

பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகளுடன். நேற்று இரவு முழுதும் நடைபெற்ற இந்த வைபவத்தின் காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி....











அடுத்ததாக - தஞ்சையில்
வைகாசி திருவோண நட்சத்திரத்தில்
திருமங்கை ஆழ்வாருக்கு - ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கருட வாகனராக காட்சியளித்த
வைபவம் 24 கருட சேவையாக நிகழ உள்ளது...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
 ஃஃஃ

22 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    தஞ்சையில் வசித்த காலங்களில் முத்துப்பல்லக்கு என்று கேள்விப்பட்ட ஞாபகம். பார்த்த நினைவு இல்லை. அந்தக்குறை இப்போது தீர்ந்தது என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. முத்துப் பல்லக்கை, முத்துப் பந்தல் எனக் கவனம் செய்து விட்டேன். மறுபடி படித்ததும் தான் புரிந்தது. படங்கள் எல்லாம் அருமை இந்தக் கடுங்கோடையிலும் அயர்வு இல்லாமல் விழா எடுக்கிறார்களே அதுக்கே அவர்களைப் பாராட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...

      இது பல காலமாக நடத்தப்படும் திருவிழா...

      இடையில் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது...

      தற்போது முன்னெடுத்து விட்டார்கள்....

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான முத்துப்பல்லக்கு தரிசனம் கிடைத்து விட்டது இன்று.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு ம்கிழ்ச்சி.

      ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்தப் பல்லக்குகள் கண்ணாடி மற்றும் ஜரிகை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்...

      இப்போது மின்னலங்காரம் பிரதானமாகி விட்டது...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை...... அதைவிட தமிழர்கள் மறந்துகொண்டிருக்கும் நாகஸ்வர பார்ட்டி படத்தைப் போட்டதை மிகவும் ரசித்தேன். பாரம்பர்யக் கலைகளைக் காப்பாற்றவில்லையானால் என்ன பயன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      பெரிய பெரிய இசைக் கலைஞர்கள் எல்லாம் இவ்விழாவில் சிறப்பித்து இருக்கின்றார்கள்...

      பத்து ஜதை பதினைந்து ஜதை என்று மேளங்கள் வாசிப்பார்கள்..

      அதை நான் சிறிய வயதில் பார்த்திருக்கிறேன்...

      மயிலாட்டம், புலி வேஷம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் தவறாது இடம் பெறும்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. தரிசனம் கிடைத்தது நன்று.
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தரிசனம் ..நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. முத்துப்பல்லக்குப் படங்கள் எல்லாம் அருமை

    தரிசனமும் கிடைத்தது

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. நல்ல பதிவு. இனிய தெய்வ தரிசனம்.
    நானும் முத்துப்பந்தல் என்று புரிந்து கொண்டேன்.
    அது நடந்த இடம் ஞானாம்பிகை சன்னிதியில் அல்லவா.

    தெய்வ தரிசனம் நன்மை கொடுக்கும். படங்களை அனுப்பியவருக்கு என் வந்தனங்கள்.

    தஞ்சை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கொண்டாடக் கொண்டாடத்தான் தெய்வம் சிறக்கும்.
    நன் மழை பெய்து மக்கள் மனம் மகிழட்டும். நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      // கொண்டாடக் கொண்டாடத்தான் தெய்வம் சிறக்கும்...//

      உண்மையான வார்த்தைகள்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. கண்கொள்ளாக்காட்சியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..