திங்கள், மே 27, 2019

கருட தரிசனம் 1

கடந்த சனிக்கிழமையன்று
தஞ்சை மாநகரில் 24 கருட சேவை வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது..

அதன் தொடர்ச்சியாக நேற்று
நவநீதசேவை எனும் வெண்ணெய்த் தாழி...

வம்புலாம் சோலை எனவும் யாளி நகர் எனவும்
புகழப்படும் திவ்ய தேசம் - தஞ்சை..

இப்படியான தஞ்சையம்பதியில்
தவம் இயற்றிய பராசர மகரிஷிக்கு ஸ்ரீ ஹரிபரந்தாமன் கருட வாகனனாக
வைகாசி திருஓணத்தன்று சேவை சாதித்ததாக ஐதீகம்...

நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்..

என்று, உருகி நின்ற திருமங்கை ஆழ்வாரும் இந்த திவ்ய தேசத்தில்  -
பராசர மகிரிஷி பெற்ற அதே திவ்ய தரிசனத்தைப் பெற்றதாக சொல்வழக்கு..

இந்த அடிப்படையில்
தொன்று தொட்டு நிகழ்ந்து வந்த வைபவங்கள்
அன்றைய அரசியல் சூழல்களால் தடைபட்டு நின்றன..

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த
அடியார் ஒருவர் இந்த கருட சேவையை மீண்டும் முன்னெடுத்து நடத்தினார்..

இவர் 11 கோயில்களை   ஒருங்கிணைத்து நடத்தியதால் துவாதச கருட சேவை எனப்பட்டது..

அதன்பின் தஞ்சை மாநகரிலுள்ள வேறு பல வைணவத் திருக்கோயில்களும் சேர்ந்து கொள்ள 24 கருட சேவை என, தற்போது நிகழ்ந்து வருகின்றது...

இந்த எண்ணிக்கையும் தற்போது கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெரு
ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலும் சேர்ந்து கொள்ள கடந்த இரண்டு ஆண்டுகளாக 25 கருட சேவையாக நடந்துள்ளது...

இந்த வைபவத்தின் திருக்காட்சிகள் இன்றைய பதிவில்...

படங்களை Whats'App வழி வழங்கியவர் எனது மைத்துனர் திரு. ஜெயகுமார்.. அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


அன்ன வாகனத்தில் ஆரோகணித்து
திருமங்கை ஆழ்வார் முன்னே செல்ல
அவரைத் தொடர்ந்து ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீதேவி பூதேவியருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்...

தஞ்சை ராஜவீதிகள் நான்கிலும் நிகழ்ந்த இந்த கோலாகல வைபவம் -
இதோ தங்களுக்காக...




















திவ்ய தேசங்கள் பலவற்றிலும்
கருட சேவை நிகழ்கின்றன..
ஆயினும்
25 கருட சேவை என்பது
தஞ்சையில் மட்டும் தான்...


இந்றைய பதிவின் நீளம் கருதி
நாளையும் சில படங்கள்  தொடர்கின்றன...

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வருடா வருடம் சிலர் போகின்றனர். நானெல்லாம் மனசால் பார்த்துக்கொள்வது தான். வெயில் ஒரு காரணம் எனில் கூட்டம் மற்றொரு காரணம். ஆகவே இங்கே உங்கள் பதிவில் ஆற அமர நன்றாய்த் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு நல்வரவு....

      தஞ்சை நகரப் பேருந்து நிலையத்தை அடுத்து உள்ளதால்
      தெற்கு ராஜவீதி, கீழராஜ வீதிகளில் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்கும்..

      தற்போது போக்குவரத்து ஒழுங்கு என்ற பேரில் இங்கெல்லாம் கூட்டம் கூடி நிற்க முடியாதபடிக்கு கலைத்து விட்டதாக கேள்விப்பட்டேன்....

      வேறு காரணங்களும் இருக்கலாம்..

      இறையடியார்களை எம்பெருமான் தான் காத்தருள வேண்டும்....

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. கருடசேவை தரிசனம் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. கருட சேவை தரிசனம் மிக அருமை.
    நாங்கூர் 11 திவய தேச கருட சேவை பார்த்த காலங்கள் வந்து போகிறது மனதில்.

    உங்கள் மைத்துனருக்கும், உங்களுக்கும் நன்றி.
    படங்கள் எல்லாம் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அருமையான கருட சேவை.

    'வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை' - பொருத்தமாக திருமங்கை ஆழ்வார் பாடிய பாடலைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மூங்கில் மரங்கள் நிறைந்த சோலை - இப்போ தஞ்சையில் மூங்கில் மரம் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னளவுக்கு எல்லாம் இல்லை என்றாலும் இப்போதும் சாலை ஓரங்களில் மூங்கில் கொத்துக்கள் பார்க்க முடிகிறது. முன்னெல்லாம் ஒரு பக்கமிருந்து வளைந்து வந்து மறுபக்கத்தைத் தொட்டுக் கொண்டு பந்தல் மாதிரிக் காட்சி அளித்துக் கொண்டிருக்கும். அப்படி எல்லாம் இப்போக் காண முடியலை. இருக்கேனு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். அம்பத்தூர் வீட்டில் மூங்கிலும் இருந்தது! அதைச் சொல்லாமல் முடியுமோ? :))))

      நீக்கு
    2. அன்பின் நெல்லை ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      வம்பு எனில் நறுமணம் என்பது அர்த்தம்...

      வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி... - என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்...

      வம்பு நாண் மலர் வார் மது ஒப்பது.. - ஞானசம்பந்தர் புகழ்கின்றார்..

      எனவே, வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை என்பது

      நறுமணம் மிக்க மலர்ச்சோலைகள் சூழ்ந்த தஞ்சை.. - என்று பொருள் கொள்ளலாம்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. தஞ்சை என்றாலே மனதில் ஒரு பாசம்! கருட சேவை படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. @ஸ்ரீராம் - அப்புறம் ஏன் 'அசோகா அல்வா'வுக்கு வாக்களிக்காமல் ப்ரேமவிலாஸ் முந்திரி அல்வாக்கு வாக்கு போடறீங்க?

      நீக்கு
  6. இத்தனையையும் மொபைல் மூலமா வலை ஏற்றினீர்கள்? பெரிய வேலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      நேற்று மதியம் வெளியிடலாம் என்று திட்டமிட்டு காலையில் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்தேன்..

      சட்டென்று எல்லாமும் காணாமல் போய் விட்டன...

      மறுபடியும் மடிகணினி வழியாக படங்களை ஒழுங்கு செய்து விட்டு
      மொபைல் வழியாக தமிழ் தட்டச்சு செய்து இன்று காலையில் வெளியிட்டுள்ளேன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் மிக நன்றாக இருக்கின்றன துரை அண்ணா...

    தரிசனமும் கிடைக்கப் பெற்றோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி...

      நீக்கு
  8. இங்கு ஜூலை 4 முதல் உலகத்தமிழ் மா நாடு நடக்கப் போகிறது.
    தமிழ் நன்கு அறிந்த நீங்கள், நெல்லைத் தமிழன் இன்னும் எல்லோரும்
    இங்கு இல்லையே என்று நேற்று தான் நினைத்தேன்.
    இன்று பாசுரப் பாடல்களையும் பாடிய ஆழ்வார்களையும்
    பாடப் பட்ட,பெற்ற பெருமாள்களையும் கண்டு தாரிசிக்க நீங்கள் ஏற்பாடு செய்து விட்டீர்கள். அன்பு துரை,
    வண்ணப் படங்கள் அத்தனையும் அருமை.

    கருடாழ்வார் இரண்டு இறக்கைகளையும் விரித்து மேகங்களை வரவழைக்கலாம்.
    இறைவன் கருணை இருக்கட்டும்.
    வைகாசி மழை பொழியட்டும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா..
      தங்களன்பின் வருகை மகிழ்ச்சி..

      திரு.நெல்லை அவர்களுடன் என்னையும் வைத்து நினைத்துப் பார்த்ததற்கு என்ன தவம் செய்தேனோ....

      25 கருட வாகனத்தைக் கண்டு நெகிழ்ந்த நல்லோர்களுக்காக இறைவன் நல்லருள் புரிவானாக..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..