செவ்வாய், மே 28, 2019

கருட தரிசனம் 2

தஞ்சையில் நடந்த கருட மகா சேவை..

இன்றைய பதிவில்
கருட சேவை படங்களுடன்
நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவத்தின் படங்கள்...
















கீழுள்ள படங்கள் - நவநீத சேவை..
வழங்கியவர் தஞ்சை ஞானசேகரன்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..









வழிநெடுக தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் , குளிர் பானங்கள் முதலானவை வழங்கப்பட்டுள்ளன...

கருட சேவையை தரிசனம் செய்வதற்கு
வெளியூர்களில் இருந்து திரளாக பக்தர்கள் வந்திருந்ததாக அறிய முடிகின்றது..

ஆயினும் , போக்கு வரத்து ஒழுங்கு என்ற பெயரில் அங்கும் இங்குமாக அல்லல் படுத்தப்பட்டிருக்கின்றனர்...

இனிவரும் நாட்களில் எல்லாம் நலமாகும்  -
என, நம்புவோம்...

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

திங்கள், மே 27, 2019

கருட தரிசனம் 1

கடந்த சனிக்கிழமையன்று
தஞ்சை மாநகரில் 24 கருட சேவை வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது..

அதன் தொடர்ச்சியாக நேற்று
நவநீதசேவை எனும் வெண்ணெய்த் தாழி...

வம்புலாம் சோலை எனவும் யாளி நகர் எனவும்
புகழப்படும் திவ்ய தேசம் - தஞ்சை..

இப்படியான தஞ்சையம்பதியில்
தவம் இயற்றிய பராசர மகரிஷிக்கு ஸ்ரீ ஹரிபரந்தாமன் கருட வாகனனாக
வைகாசி திருஓணத்தன்று சேவை சாதித்ததாக ஐதீகம்...

நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்..

என்று, உருகி நின்ற திருமங்கை ஆழ்வாரும் இந்த திவ்ய தேசத்தில்  -
பராசர மகிரிஷி பெற்ற அதே திவ்ய தரிசனத்தைப் பெற்றதாக சொல்வழக்கு..

இந்த அடிப்படையில்
தொன்று தொட்டு நிகழ்ந்து வந்த வைபவங்கள்
அன்றைய அரசியல் சூழல்களால் தடைபட்டு நின்றன..

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த
அடியார் ஒருவர் இந்த கருட சேவையை மீண்டும் முன்னெடுத்து நடத்தினார்..

இவர் 11 கோயில்களை   ஒருங்கிணைத்து நடத்தியதால் துவாதச கருட சேவை எனப்பட்டது..

அதன்பின் தஞ்சை மாநகரிலுள்ள வேறு பல வைணவத் திருக்கோயில்களும் சேர்ந்து கொள்ள 24 கருட சேவை என, தற்போது நிகழ்ந்து வருகின்றது...

இந்த எண்ணிக்கையும் தற்போது கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெரு
ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலும் சேர்ந்து கொள்ள கடந்த இரண்டு ஆண்டுகளாக 25 கருட சேவையாக நடந்துள்ளது...

இந்த வைபவத்தின் திருக்காட்சிகள் இன்றைய பதிவில்...

படங்களை Whats'App வழி வழங்கியவர் எனது மைத்துனர் திரு. ஜெயகுமார்.. அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


அன்ன வாகனத்தில் ஆரோகணித்து
திருமங்கை ஆழ்வார் முன்னே செல்ல
அவரைத் தொடர்ந்து ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீதேவி பூதேவியருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்...

தஞ்சை ராஜவீதிகள் நான்கிலும் நிகழ்ந்த இந்த கோலாகல வைபவம் -
இதோ தங்களுக்காக...




















திவ்ய தேசங்கள் பலவற்றிலும்
கருட சேவை நிகழ்கின்றன..
ஆயினும்
25 கருட சேவை என்பது
தஞ்சையில் மட்டும் தான்...


இந்றைய பதிவின் நீளம் கருதி
நாளையும் சில படங்கள்  தொடர்கின்றன...

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

வியாழன், மே 23, 2019

முத்துப் பல்லக்கு

வைகாசி மூல நட்சத்திரத்தில்
ஞானசம்பந்தப் பெருமானின்  குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது
முத்துப் பல்லக்கு வைபவம்...

பெருமான் - சிவதரிசனம் பெற்றதாக
நகரிலுள்ள அனைத்து விநாயகர் கோயில்கள் மற்றும் முருகன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருள -

மேல ராஜவீதியின் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சிறப்பான ஆராதனைகள் நிகழும்..

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஞான சம்பந்தப்பெருமானின் பழைமையான சித்திரம் திருவீதி எழுந்தருளல் நிகழும்...

அந்தவகையில் -
நேற்று மாலையில் தஞ்சை நகரின் ராஜவீதிகளில் முத்துப் பல்லக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது...

பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகளுடன். நேற்று இரவு முழுதும் நடைபெற்ற இந்த வைபவத்தின் காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி....











அடுத்ததாக - தஞ்சையில்
வைகாசி திருவோண நட்சத்திரத்தில்
திருமங்கை ஆழ்வாருக்கு - ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கருட வாகனராக காட்சியளித்த
வைபவம் 24 கருட சேவையாக நிகழ உள்ளது...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
 ஃஃஃ