புதன், ஏப்ரல் 24, 2019

ஏழூர் பல்லக்கு 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக
இன்றும் ஏழூர்களைச் சுற்றி வந்த பல்லக்குகளின் தரிசனம்...

நிகழ்வின் படங்கள் திருவையாறு சிவ சேவா சங்கம் மற்றும் உழவாரம் ,
சிவனடியார் திருக்கூட்டத்தினர் வழங்கியவை .....

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...











திருநெய்த்தானம் ஸ்ரீ நெய்யாடியப்பர் 
திருக்கோயிலின் வாசலில் பல்லக்குகள்..










கீழுள்ள காணொளிகளையும் கண்டு மகிழ்க...




ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே..
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே..
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ!..(6/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா

    தரிசனம் அருமை!

    படங்கள் மிக மிக அழகு. அவர்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அப்போது நீங்கள் இந்த ஏழூர் பல்லக்குகள் குறித்து பதிவு எழுதியதன் முழு படங்களும் காணொளியுமோ இப்போது?

    காணொளி கண்டேன் மக்கள் கூட்டம் பிரமிப்பாக இருக்கிறது. அருமையான நிகழ்வு இல்லையா!

    காணொளிகள் சிறப்பாக இருக்கின்றன. பல்லக்குகளை எப்படி தாங்கி வருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். படங்களில் காண முடிந்தது. அலங்காரம் வெகு சிறப்பு.

    எங்கள் ஊரில் ஏழாம் திருநாள் அன்று பல்லக்குகள் தாங்கி வீதி சுற்றி வருவார்கள்.

    பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் - சென்ற வருடம் நான் கண்ட திருவிழாக் காட்சிகள்...

      இப்போதைய படங்களும் காணொளிகளும் இந்த ஆண்டின் விழா நிகழ்வுகள்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்களும், காணொளிகளும் மிக அருமை.
    கூத்தும் ஆடி என்பது தேவராத்தில் வருவது போல் பல்லக்கின் முன் இளைஞர்கள் தாளவாத்தியங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள்.
    பூஜையும் பார்த்தேன்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.
    உங்களுக்கு அனுபி வைத்த சிவனடியார் திருக்கூட்டத்தினர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      பல்லக்குடன் வருபவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெருந்திரளாக மக்கள் கோயிலுக்குள்ளேயே பல மணி நேரமாக காத்திருக்கின்றனர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழகான தரிசனம்...
    அருமையான படங்கள்...
    அருமை அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கண்ணைக் கவரும் படங்கள்.
    காணொளிகளும் கண்டேன் ஜி
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான தரிசனம். தஞ்சையின் பாரம்பரியக் கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய பல்லக்குகள் மனதைக் கவர்ந்தன. இறை தரிசனத்துக்கு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தஞ்சை பெரிய கோயிலில் முழுதுமாக கண்ணாடி வேலை செய்யப்பட்ட கோ ரதங்கள் இருந்தன...

      பழுதாகி விட்ட அவை இப்போது என்ன ஆயினவோ தெரியவில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மெய்ம்மறந்து ஆடும் பக்தர் கூட்டம் கண்டு மெய் சிலிர்க்கிறது. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வட்டாரத்தில் பலதரப்பட்ட மக்களையும் ஒன்றாக இணைக்கும் மாபெரும் விழாக்கள் - நந்தி கல்யாணமும் சப்த ஸ்தானமும்...

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஏழுர் உலா பல முறை சென்றுள்ளேன். தற்போது உங்கள் பதிவுகள் மூலமாகச் செல்லும் வாய்ப்பு. வாழ்வில் ஒருமுறையேனும் இவ்வுலாவினைக் காணவோ, உலாவில் கலந்துகொள்வதோ நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் சொல்வதைப் போல வாழ்வில்
      ஒரு முறையேனும் கண்டுகளிக்க வேண்டிய திருவிழா...

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..