செவ்வாய், ஏப்ரல் 23, 2019

ஏழூர் பல்லக்கு 1

சித்திரை விசாகத்தன்று சீரும் சிறப்புமாக
சப்த ஸ்தானம் எனப்படும் ஏழூர் வலம் தொடங்கியது...

திருஐயாற்றில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்று

கொடியிறக்கம் ஆகிய அடுத்த நாள் - 21/4 ஞாயிறு...

அன்று அதிகாலையிலேயே திருஐயாறு விழாக்கோலம் பூண்டது...


பற்பல ஊர்களிலிருந்தும் பக்தர் வந்து குழுமினர்..


ஸ்ரீ ஐயாறப்பரும் ஸ்ரீ அறம் வளர்த்த அம்பிகையும்

விசித்ர கண்ணாடிப் பல்லக்கில் ஆரோகணிக்க

புதுமணத்தம்பதிகளாகிய நந்தீசனும் சுயம்பிரகாஷிணி தேவியும்

வெட்டிவேர்ப் பல்லக்கில் எழுந்தருளினர்...

கட்டளை மண்டகப்படி ஆராதனைகளுக்குப் பிறகு
காவிரிப் படித்துறை புஷ்ய மண்டபத்தில் எழுந்தருளினர்...

அதன் பின் அங்கிருந்து திருப்பழனம் புறப்பட

கோலாகலமாக சப்த ஸ்தான ஊர்வலம் தொடங்கிற்று..

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திரு நெய்த்தானம் - என, அனைத்து தலங்களிலும் 

தொடர்ந்த பாரம்பர்ய கொண்டாட்டங்களுடன்
நேற்று - திங்கட்கிழமை மதியத்துக்குப் பிறகு
அனைத்துப் பல்லக்குகளும் திரு ஐயாற்றை அடைந்தன..

விழா வைபவங்களை

திருவையாறு சிவகணங்கள், திருவையாறு சிவசேவா சங்கம் எனும் சிவனடியார் திருக்கூட்டத்தினர் வலையேற்றியுள்ளனர்...

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...


மற்றபடிக்கு நமது தளத்துக்கு வந்து கருத்துரையுடன் உற்சாகப்படுத்தும் தங்களால் தான் பதிவுகள் தொடர்கின்றன...

ஆயினும் -

கடந்த சில தினங்களாக இங்கு இணையம் சரிவர இயங்கவில்லை...

இதனால் - வழக்கம் போல வருகையளிக்கும்

நல்லியதயங்களுக்கு நன்றி நவில இயலவில்லை...

குறையெனக் கொள்ளாமல் -

தங்களது வருகையை என்றென்றும் நாடுகின்றேன்...

இதோ சப்த ஸ்தான தரிசனம்...

ஸ்ரீஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி  
மகாதீப ஆராதனை




திருஐயாறு சிவ சேவா சங்கத்தினர் - அன்னதானம்  
ஏழூர் நடைபயணம் தொடங்கியாயிற்று 

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
திருப்பழனம்
ஸ்ரீ பெரியநாயகி அம்பாள்
திருப்பழனம்


இந்த நிகழ்வுகளைக் காணும்போது சென்ற ஆண்டில்
ஏழு திருத்தலங்களையும் சென்று தரிசித்த நினைவுகள் நிழலாடுகின்றன...

மேலும் சில படங்கள் தொடரும் பதிவினில்...

உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் ஆனாய் நீயே..
கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே..
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே..
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    வெட்டிவேர்ப் பல்லக்கு....

    அகிலமெங்கும் அந்தக் குளுமை பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான படங்களால் மனம் நிறைந்த தரிசனம். அளித்தவர்களுக்கும், அதை எங்களுக்குக் கொடுத்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சப்தஸ்தான தரிசனம் அருமை.

    அன்னதானம் நெகிழ்ச்சி. இன்னும் கொஞ்சம் சுத்தம் பேணலாம் என்பது என் அபிப்ராயம். வாங்குபவர்களும் ஈசனின் பிரசாதம் என்று உணர்ந்து கண்ட இடங்களில் குப்பையாகிவிடாமல் பிரசாதத்தை அந்வயிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. சிறுவயதில் ஏழுர் பல்லக்கையும், வான வேடிக்கையினையும் கண்டு களித்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. இதெல்லாம் கண்டு களிக்கும் நாளெல்லாம் வருமா சந்தேகமே! இங்கே படக்காட்சிகளாக் கிடைப்பதில் மனம் மகிழ்வுறுகிறது. தொடர்ந்து அடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  6. தரிசனக்காட்சிகள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜியை இன்று காணவில்லையே ஏன் என்று எபியில் கேட்க நினைத்திருந்தேன். இங்கு இப்ப பார்த்துவிட்டேன். ஸோ கில்லர்ஜி லேட் ஆஜர்!!

      கீதா

      நீக்கு
  7. சப்தஸ்தான தரிசனம் கிடைக்கப் பெற்றோம். படங்கள் மிக மிக அருமை.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. சப்தஸ்தான தரிசனம் மிக அருமையாக உங்கள் தளத்தில் செய்து விட்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அழகு, தெய்வீகம். அப்பரின் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..