ஞாயிறு, நவம்பர் 11, 2018

கந்தன் கருணை 4

என்ன சார்!... நேத்து உங்களை எங்க தெரு பக்கம் பார்த்தேன்!...

ஆமா!.. இப்போ கந்த சஷ்டி விழா இல்லையா!..
அதான் முருகன் கோயிலுக்கு வந்தேன்...
சாமி தரிசனம்... திருப்புகழ் விரிவுரை...
கண்ணுக்கும் காதுக்கும் விருந்து...
சொன்ன மாதிரி கோயிலுக்குப் பக்கத்தில தானே உங்க வீடு!...

இருந்தாலும் நமக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை!..
அது சரி!.. முருகனப் பத்தி என்ன சொன்னார் உங்க பாகவதர்!...

பாகவதரா!?.. சின்ன வயசு தான்.. தமிழ் வாத்தியாராம்!...

இப்போ சின்ன வயசு பசங்களும்
கிளம்பிட்டானுங்களா பஜனை பாட்டு..ன்னு!...

இந்த காலகட்டத்துல
இவ்வளவு ஆர்வமா இருக்கிறது அபூர்வமாச்சே!...


அது இருக்கட்டும்.. முருகனப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?...
அந்தப் பையன் சொல்லித் தான் தெரிஞ்சுக்கணுமா?...
புதுசா என்ன சொன்னான் அந்தப் பையன்?...

சரி... நீங்க தான் தமிழ்ப் பிரியர் ஆச்சே!?...
உங்களுக்கு என்ன தெரியும் தமிழ் முருகனைப் பற்றி...

அது... வந்து.. முருகனுக்கு ஆறு தலை...
ரெண்டு பொண்டாட்டி.. அதுல ஒன்னு லவ்வு!...
அப்புறம் பதினெட்டுக் கை... ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்!..

பதினெட்டுக் கை இல்லை.. பன்னிரண்டு!...

ஏதோ ஒன்னு!... நார்மலுக்கு மேல இருக்கா இல்லையா!..
ஏன்.. சார் நீங்க வேற!... பக்தி.... பஜனை....ன்னுக்கிட்டு!..
இன்னைக்கு தேவையான விஷயம் உங்க முருக பக்தியில என்ன இருக்கு?...

என்ன இல்லை... ங்கிறீங்க!...
இன்றைய தேவை நல்ல ஒழுக்கம்...
அது வேண்டுமா.. வேண்டாமா!...

வேணுந்தான்!... ஆனா எவன் ஒழுங்கா இருக்கான்?...
காலையில மேலுக்கு பட்டை அடிக்கிறான்...
சாயங்காலம் ஆனா உள்ளுக்குப் பட்டை அடிக்கிறான்!...

நிஜந்தான்... எங்கேயோ ஒரு சில பேர் அப்படி இருக்கலாம்!..
அதுக்காக எல்லாரையும் குறை சொல்லக் கூடாது!...

நம்ம கை விரல் எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு?...

உங்க அண்ணன் நல்லா படிச்சிட்டு உத்யோகத்துல இருக்கார்!..
ஆனா - நீங்க!... உங்கப்பா ரெண்டு பேரையும் தானே படிக்க வெச்சார்!...

சரி.. சரி... அதை விடுங்க...
முருகனப் பத்தி என்ன சொன்னார் - 
அந்த வாத்தியார்.. அதச் சொல்லுங்க!...

ஸ்ரீ வள்ளி ஸ்ரீதேவயானை உடனுறை ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி -.,
பெரியகோயில் - தஞ்சை.. 
அஞ்சன வேல்விழி - மடமாதர்
அங்கவர் மாயையில் - அலைவேனோ

விஞ்சுறு மாவுன - தடிசேர
விம்பம தாயருள் - அருளாதோ

நஞ்சமு தாவுணும் - அரனார்தம்
நல்கும ராவுமை - அருள்பாலா

தஞ்சென வாம் - அடியவர்வாழத்
தஞ்சையில் மேவிய - பெருமாளே!...

தஞ்சையில் மேவிய பெருமாளே... அந்த வரி மட்டும் புரியுது!...
மத்ததெல்லாம் ஒன்னும் விளங்கலையே!...

இந்தத் திருப்புகழ் -
தஞ்சை பெரிய கோயில் முருகனைப் பற்றியது....ன்னு சொல்வாங்க!...

இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம்...ன்னா -

மை பூசிய கண்ணால அழகு காட்டி மனசைக் கெடுத்து 
மாயவலை விரிக்கிற பெண்களும் இருக்காங்க...
அவங்க பின்னால என்னோட மனசு அலைஞ்சி திரிஞ்சி 
அடையாளம் இல்லாம அழிஞ்சி போகாதபடிக்கு
என்னை நீ காப்பாத்தக் கூடாதா!...

எனக்கு நல்ல புத்தியக் கொடுக்கக் கூடாதா!..
நான் நல்லவன் ஆகறதுக்கு ஒரு வாய்ப்பு தரக்கூடாதா!..

இப்படியான ஆசையோட உன்னைய
தஞ்சம் அடையறவங்களைக்
காப்பாற்றிக் கரை சேர்க்கிற பெருமானே!...

அரனும் அம்பிகையும் பெற்றெடுத்த அழகா!...
தஞ்சையம்பதியில குடி கொண்டிருக்கிற முருகா!...

சரி.. இதுக்கும் நல்லொழுக்கத்துக்கும் என்ன சம்பந்தம்!...

நல்லொழுக்கத்துனால தான் 
நம்மைப் பெத்தவங்களுக்கு நல்ல பேரு வாங்கித் தரமுடியும்!..
அண்ணன் தம்பி கூடப் பொறந்தவங்களுக்கும் மரியாதை!..

..... ..... ..... ..... .....!....

நீங்க இந்த எண்ணத்தோட கோயிலுக்குப் போறீங்க!...
ஒரு மாசம்... ரெண்டு மாசம்... ஒரு வருசம்!...
உங்களுக்கு....ன்னு ஒரு தோற்றம் வந்துடும்!...

பக்தியை ஆற்று இன்ப வெள்ளம்... ன்னு சொல்றார் மாணிக்கவாசக ஸ்வாமி...

ஆற்றுத் தண்ணியில குளிக்க குளிக்க கரையேற மனசு வராது...

அது மாதிரி உண்மையான பக்தி வந்துடுச்சி... ன்னா
தப்பு செய்யிற எண்ணம் மனசுல வரவே வராது!...

நீங்க சிவ பக்தனா!.. கிருஷ்ண பக்தனா!.. யாரா வேணாலும் இருக்கலாம்!...

அப்போ பக்தனா இருந்துக்கிட்டு தப்பு செய்றவங்க!?...

அவங்க எல்லாம்... பக்தர்கள் இல்லை... பதர்கள்... போலிகள்!...

பதர்... ன்னா நெல்லுத் தூசி.. காத்துல பறக்கும்!..
கருங்கல் துண்டு காத்துல பறக்குமா?...

பலகீனமான உடம்பு தானே நோய்க்கிருமிக்கு இஷ்டம்!...
அதுபோல உறுதி இல்லாத மனசு தான் மாயைக்கு இஷ்டம்!...

அப்போ பக்தி இல்லாதவங்க நல்லவங்களா இருக்க முடியாதா!...

ஏன் முடியாது!... இருக்கலாமே அவங்க வீட்டுக்கு மட்டும்!..
சாமியாவது... பூதமாவது.. ந்னு சலங்க கட்டி ஆடுறான்...
ஊரைக் கொள்ளை அடிச்சி மாட்டிக்கிறப்ப மானங்கெட்டு ஓடுறான்!...

மனசு..ங்கறது முல்லைக் கொடி மாதிரி...
பக்தி அதுக்கு பந்தல் மாதிரி...

பந்தலுக்கு முல்லைக் கொடி தேவை இல்லைதான்...
ஆனா, அந்த முல்லைக் கொடி பந்தல்...ல படர்ந்தது...ன்னா
அது பொறந்த நோக்கத்தை அடையுது...
இல்லேன்னா.. சின்ன பின்னமாகி சீரழிஞ்சு போகுது!...

..... ..... ..... ..... .....!....

என்ன தம்பி!.... ஒன்னும் பேச்சைக் காணோம்!...

நீங்க சொல்றது மனசை என்னவோ பண்ணுதுங்க!...

இந்த மாதிரி ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட திருப்புகழ்...
இருந்தாலும் இன்னொரு திருப்புகழையும் கேளுங்க!...

சொல்லுங்க அண்ணா.. எனக்கு கண்ணு தெறந்த மாதிரி இருக்கு!..

ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி..
நிறைமதி முகமெனும் - ஒளியாலே
     நெறிவிழி கணையெனு - நிகராலே

உறவுகொள் மடவர்கள் - உறவாமோ
     உனதிரு வடியினி - அருள்வாயே

மறைபயி லரிதிரு - மருகோனே
     மருவல ரசுரர்கள் - குலகாலா

குறமகள் தனைமணம் - அருள்வோனே
     குருமலை மருவிய - பெருமாளே...

ஆகா... தஞ்சாவூர் திருப்புகழ் மாதிரியே இருக்கு...

நடத்தை தவறியவர்கள் 
எல்லாம் எனக்கு உற்றார் ஆவாரா!...
உனது திருப்பெயரும் திருவடிகளும்
உற்ற துணையாகும்படி அருளமாட்டாயா?...

அதுக்கு அப்புறம் கொஞ்சம் புரியலை...


ஸ்ரீஹரி பரந்தாமனோட மருகனே!...
அடங்காத அரக்கருக்கு யமன் போன்றவனே!...

குறமகள் தனக்கு மணவாளனே!..
குருமலையாகிய சுவாமிமலையில் 
கோயில் கொண்டு இருப்பவனே!...
ஈசனுக்கு உபதேசித்த ஸ்வாமி நாதனே!...

அண்ணா... இன்னைக்கும் கோயிலுக்கு வருவீங்களா!..

ம்... வருவேனே!...

நான் கோயில் வாசல்ல.... நிக்கிறேன்...
என்னையும் உங்களோட கோயிலுக்குள்ளே
அழைச்சிட்டுப் போங்க!..
*** *** ***


ஆன்றோர்கள் அருளிய உரை வழி நின்று
எனது சிற்றறிவுக்கு எட்டியபடி
தஞ்சையம்பதி மற்றும் சுவாமிமலை
திருப்புகழ்ப் பாடல்களை
இப்பதிவில் சொல்லியிருக்கின்றேன்...

குற்றங்குறைகளைப் பொறுத்தருள்க..

முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...

வெற்றி வேல்.. வீரவேல்.. 
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. அழகிய பதிவு. சின்னப் பிள்ளைகள் பஜனையில் இணைவது மகிழ்ச்சிதானே துரை அண்ணன்.. ஆன்மீக உணர்வு சின்ன வயதிலேயே உருவாவது நல் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீதான் இங்கின 1ஸ்ட்டூ என்பதை மிகவும் பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்:)

      நீக்கு
  2. சிறப்பான ஒரு பகிர்வு.

    கந்தனின் பூரண அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மற்ற அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

    பதிலளிநீக்கு
  3. கந்தனிடம் உரிமையுடன் ஒரு கேள்வி பார்க்க http://gmbat1649.blogspot.com/2017/10/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி எளியோருக்கும் புரியும் வண்ணம் அழகிய பதிவு.
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆ கில்லர்ஜி ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர்ர்:) அது ளி அல்ல ழி எனத்தானே வரும்:) ஹா ஹா ஹா நேக்கு டமில்ல டி ஆக்கும்:).

      நீக்கு
    2. ளி தான் வரும் ஞானியாரே. கில்லர்ஜி சரியாத்தான் சொல்லிருக்கார்...

      கீதா

      நீக்கு
    3. ஹப்பா நல்லகாலம் கில்லர்ஜிக்கு தமிழ் மறக்கலை...ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    திருப்புகழ பாடலுடன், பக்தியை வளர்த்தமைக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு...அண்ணா. வழக்கம் போல...முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைத்திடட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்... படித்தேன், மகிழ்ந்தேன்.

    காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. நேற்று தலைமை அலுவலகம் சென்றிருந்தேன். ஞாயிறு கூட வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னைத் தயக்கத்துடன் பார்த்தார்கள்...

    "உங்களுக்குமா?"

    எனக்குக் குழப்பம். தயக்கத்துடன் "ம்ம்ம்... ஆமாம்..." மனசுக்குள் 'ஏன், எனக்கு மட்டும் வாங்கித்தர என்ன தயக்கம்... நாமே வெளியில் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்..."

    அவர்களே பதிலும் சொன்னார்கள்.

    "இல்லை... மோகனும், சக்தியும் சஷ்டி விரதம்... நீங்களும் விரதத்துல இருப்பீங்களோன்னு... முருகா முருகாம்பீங்களே.."

    பதிலளிநீக்கு
  9. கந்தன் கருணை அளப்பரியது. திருப்புகழ் விளக்கங்கள் மிக அருமை! முருகன் படங்கள் அனைத்தும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. //https://sivamgss.blogspot.com/2008/11/blog-post_12.html//

    வள்ளியும், தெய்வானையும் முருகனை மணந்த கதை இங்கே பார்க்கலாம். அதே போல் இரு மனைவியர் எனச் சொல்பவருக்கான விளக்கத்தையும் காணலாம்.

    பதிலளிநீக்கு
  11. https://sivamgss.blogspot.com/2008/11/blog-post.html//

    இதிலிருந்து ஆரம்பித்துச் சில பதிவுகள் எழுதி இருக்கேன். மீள் பதிவுகள் அதிகம் போடவேண்டாம் என்பதால் பகிரவில்லை! :) என்றாலும் கந்தன் புகழைப்பாடப்பாட அலுக்காது. மனம் மகிழ்வுறும், அமைதி பெறும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..