செவ்வாய், மே 08, 2018

அந்த நாளில் 1

நமது வலைத்தள நண்பர்களுள் பலரும் 
ஐம்பது அல்லது அறுபது வயதினைக் கடந்தவர்களாக இருப்போம்..

ஒருவர் மட்டும் இளமை!...

யாரென்று கேட்கின்றீர்களா?...

அது மட்டும் ரகசியம்.. பரம ரகசியம்!...

சரி.. விஷயம் என்ன?...

இன்றைக்கு நாம் காணும் சில ஊர்கள் - கோயில்கள்
ஐம்பது - அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்!?...

இதோ இப்படித்தான்!...

இந்தப் படங்கள் Fb வழியாகக் கிடைத்தவை...
பதிவு செய்த நண்பர்கள் யார் என்றெல்லாம் தெரியவில்லை..

எனினும், அவர் தமக்கு மனமார்ந்த நன்றிகள்..

இவற்றை மூன்று ஆண்டுகளாக சேர்த்து வைத்திருக்கின்றேன்...

இன்றைய பதிவில் ஒரு சில மட்டும் - தங்களுடன்...

திருக்கேதாரம்
ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோயில் 1890


130 ஆண்டுகளுக்கு முன்
மேலே உள்ள படத்தில் ஒரு கிணறு இருக்கின்றதே...
அந்தக் கிணறு இன்றைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

கோயிலுக்குள் இருந்த தீர்த்தக் கிணற்றுக்குள் 
மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள்...


யானைகள் புடைசூழ திருவிழா - தஞ்சாவூர்
மகாமகக் குளத்தில் தெப்பத் திருவிழா
திருக்குற்றாலம்
திரு அரங்கம்
உச்சிப் பிள்ளையார் கோயில் மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை நுழைவாயில்
இன்றைய பதிவு
தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்..

வாழ்க நலம்..
ஃஃஃ

43 கருத்துகள்:

  1. கடைசிப் படம் இடுகையின் கருத்துக்கு ஒத்துவரவில்லை.

    மற்றபடி படங்கள் மிக அருமை (சிலவற்றைப் பார்த்திருந்தபோதிலும்).

    ஜனங்கள் பல்கிப் பெருகிவிட்டனர். ஆலய தரிசனம் மிகவும் கமர்ஷியலாகிவிட்டது. விற்பனைக் கடைகள் பல்கிப் பெருகிவிட்டன. மொத்தத்தில் எக்சிபிஷன்போல் நாம் ஆக்கிவிட்டோம்.

    அதேசமயம், தஞ்சைக் கோவில் இப்போது, அப்போதிருந்ததைவிட நன்றாக வைத்துக்கொள்கிறோம் (அரசுத்துறை). மக்கள் கோவில், நம் பண்பாட்டுக் களம் என்று எண்ணாமல், அதை மாசுபடுத்துவதையும் சொல்லவேணும்.

    இடுகை பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.. அவர்களுக்கு நல்வரவு..

      தாங்கள் சொல்லிய பிறகுதான்
      கடைசிப் படம் பதிவுக்கு ஒத்து வராததை உணர்ந்தேன்...

      அன்றைய தண்டனை முறை என்பதாகப் பதிவு செய்ததை நீக்கி விட்டேன்.. இதைப் போல இன்னும் இருக்கின்றன..

      அவற்றைப் பின்னொரு சமயம் பார்க்கலாம்...

      மற்றபடிக்கு - தஞ்சை பெரிய கோயில் முன்பை விட இப்போது நன்றாகத்தான் பராமரிக்கப்படுவதைச் சொல்லித் தான் ஆகவேண்டும்..

      இந்த விடுமுறையில் நிறைய கோயில்களைத் தரிசனம் செய்து விட்டு படங்கள் மற்றும் தகவல்களுடன் வந்திருக்கின்றேன்...

      அவற்றையெல்லாம் பதிவில் ஏற்றும் போது
      ஆங்காங்கே நேரில் கண்ட குறைபாடுகளைச் சொல்லலாம் என்றிருந்தேன்...

      அதனால் தான் இந்தப் பதிவில் வேறெதுவும் சொல்லவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    இதில் திருச்சி மலைக்கோட்டை புகைப்படம் மட்டுமே முன்பு பார்த்து இருக்கிறேன் மற்றவை எமக்கு அரிய படங்களே பகிர்வுக்கு நன்றி.

    நண்பர். திரு. நெ.த. அவர்கள் சொன்னது போல் கடைசி படம் மனதை வருத்தியது இருப்பினும் ஏதும் காரணமில்லாமல் தாங்கள் இடமாட்டீர்கள் ஆகவே காத்திருக்கின்றேன்.

    அந்த இளமையின் ரகசியமும் அறிய அவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      எவர் மனமும் வருந்தும்படிக்கு எதுவும் செய்ய மாட்டேன்..
      கதைகளில் கூட எதுவும் சொல்ல மாட்டேன்...

      அந்த தண்டனை முறை கடைசிப் பட்சமானது..
      ஆனால் - குற்றவாளி திருந்துவதற்கு முதல்படி..

      எனினும்
      பதிவுக்குப் பொருந்தவில்லை என்பதால் நீக்கி விட்டேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஐம்பது வருஷங்களுக்கு முன் பார்த்தவரும் ஒருவர் கூட வந்து வித்தியாஸங்களைச் சொல்லி வந்தால் இன்னும் இன்ரஸ்டாக இருக்கும். எனக்கு அப்படித்தோன்றக் காரணம் நான் ஒரு வயதானவள். கருப்பு,வெள்ளைப்படங்கள், சுற்றுச் சூழ்நிரல் எல்லாம் பின்னோக்கிப் போக வைக்கிறது. பக்கத்திலேயே இந்தக்காலப் படங்களும் போடுங்கள். மாற்றங்கள் பார்க்காதவர்களுக்கும் கண் முன் வந்து நிற்கும். கோயில்களின் படங்கள் கருத்து எழுது என்கிறது.ரஸித்தேன். திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் வினாயகர் ஸன்னிதியை ஒட்டி ஒரு கிணறு உண்டு. அந்தக்கிணற்றிலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவோம். இப்போது கிரில் போட்டு மூடி இருந்தாலும் மோட்டர் வைத்து தண்ணீர் எடுத்து உபயோகிக்கிரார்கள். எப்போது அவ்விடம் போனாலும் கிணற்றை எட்டிப்பார்க்காமல் வருவதில்லை. எட்டாவது வயது அனுபவம் எண்பத்தைந்தில் கூட எட்டிப் பார்த்து கதை சொல்ல வைத்து கூட நின்று படமும் எடுத்தக்கொண்டேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு. பழயகால போட்டோ கிடையாது. உங்கள் பதிவு கவர்ந்திழுக்கும் பதிவுதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்மா.. தங்களுக்கு நல்வரவு...

      எட்டாவது வயது நினைவுகளுடன் எண்பத்தைந்தில் அந்தக் கிணற்றின் அருகில் நின்று படம் எடுத்துக் கொண்ட தங்களது மகிழ்ச்சியைப் படித்ததும் அழுது விட்டேன்...

      எத்தனை எத்தனை வாஞ்சை அங்கேயிருந்தால்
      இப்படி கிண்ற்றினருகில் படம் எடுத்துக் கொள்ளத் தோன்றியிருக்கும்..

      25 வயதில் சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்ற பிறகுதான் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன் ..

      இன்றுவரை தொடர்கின்றது...

      ஒருவேளை மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால்
      பழைய நினைவுகளுடன் சில படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. காமாட்சி அம்மா...

      // காரணம் நான் ஒரு வயதானவள் // என்னடான்னு பார்த்தேன். அப்புறம் 85 என்று சொல்லி விட்டீர்கள்.. ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    3. காமாட்சி அம்மா... உங்கள் பின்னூட்டம் இங்கும் அங்கும் பார்த்து மிக்க மகிழ்ச்சி. நல்லா இருக்கீங்களா? உங்களை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

      நீங்கள், உங்கள் மகளுடன் (?) வளவனூர் அக்ரஹாரம், கோவில் எல்லாம் சென்றுவந்ததையும் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றுவந்ததையும் உங்கள் இடுகைகளில் படித்த ஞாபகம் வந்தது.

      அடிக்கடி உங்கள் பின்னுட்டமும், இடுகையும் படிக்க ஆசை.

      நீக்கு
    4. அப்பூடிச் சொல்லுங்கோ காமாட்ஷி அம்மா.. கறுப்பு வெள்ளையோடு அருகில் இப்போதைய படமும் போடொணும்..

      துரை அண்ணன் .. அதிராவைப் பார்த்துப் போஸ்ட் போடப் பழகுங்கோ:).. இதைப் பாருங்கோ என் ஒரு வருட உழைப்பூஊஊஊ ஹையோ ஏன் இப்போ கலைக்கிறார் துரை அண்ணன்.. ஓவரா ஓடாதீங்கோ உடம்புக்கு ஆபத்து.. மீ ஓடித் தப்பிடுவேன்..

      http://gokisha.blogspot.com/2011/06/blog-post.html

      நீக்கு
    5. காமாட்சி அம்மா ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. நலமா?

      கீதா

      நீக்கு
  4. என்னாதூஊஊஊஊஉ பதிவர்கள் பெரும்பாலும் எல்லோரும் 50 ஐக் கடந்து விட்டவர்களோ... ஹையோ இதைக் கேட்க ஆருமே இங்கில்லையாஆஆஆஆஆஆ??:).. ஊருக்குப் போய் வந்ததிலிருந்து துரை அண்ணனுக்கு என்னமோ ஆச்சூஊஊஊ.. இதோ இப்பவே உண்ணாவிரதம் ஆரம்பம் தேம்ஸ் கரையில்ல்ல்ல்ல்ல்ல் நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா அவர்களுக்கு நல்வரவு...

      சலங்கைச் சத்தம் ஜாஸ்தியா இருக்கிறப்பவே நெனைச்சேன்...

      நீங்க அம்பது வயசைக் நெருங்கணும் அல்லது கடந்திருக்கோணும்!...

      தேம்ஸ் கரையில உண்ணாவிரதமா!..

      பக்கத்தில நல்ல ஓட்டல் இருக்குற எடமாப் பார்த்து உட்கார வேண்டும் என, மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறேன்...

      நீக்கு
    2. ஹாஹாஹா, அதிரடிக்கு வயசாகலையா? யாரு சொன்னது? அதிரடிக்கு ஐம்பது என்ன அதுக்கு மேலேயே இருக்கும்!

      நீக்கு
    3. //பதிவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேலே..//

      ஒரு பூஜ்ஜியம் தேவை இல்லாமல் விழுந்து விட்டது. 5 க்கு மேலே என்று சொன்னால் எல்லோருமே ஒப்புக் கொள்ளுவார்கள்.

      நீக்கு
    4. துரை அண்ணன் பாருங்கோ.. நீங்க தெளிவில்லாமல் எழுதியமையால் எல்லோருமே குழம்பிட்டினம்:)).. ஸ்ரீராம் நேசறிக்கே போயிட்டார் கர்ர்ர்ர்:)).. கீசாக்கா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா:).. நீங்க தெளிவாச் சொல்லியிருக்கோணும்.. சென்னை.. ஸ்ரீரங்கப் பதிவர்கள் எல்லாம் 50 ஐத் தாண்டியவர்கள் என:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. மறுபடியும் சொல்றேன்... அஞ்சு வயசுக்கு மேலன்னு சொன்னா எல்லோருமே ஒத்துகிட்டு சைலண்ட்டா போயிடுவாங்க.. இல்லன்னா கலாட்டாதான்... துரை ஸார்.. பாருங்க அதிரா பிரச்னை பண்றங்க... நான் இல்லப்பா....

      அது சரி, நேசறின்னா என்ன?!!

      நீக்கு
    6. நர்சரி - தமிழ் தெரிஞ்சவங்க சொல்றது. நேசறி- தமிழ்ல 'டி' வாங்கினேன் (கனவில்) என்று சொல்றவங்க எழுதறது. ஹா ஹா ஹா.

      காமாட்சி அம்மா 85 வயசு, வயதானவர் என்று எழுதினதைப் பார்த்ததும், இது என்னடா.. 65+லாம் சுவீட்டு 16 என்று சொல்லும் காலத்தில் 85ஐ, டபால்னு 35னு சொல்லிக்கவேண்டாமா என்று தோன்றியது.

      நீக்கு
    7. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. 5 வயசுக்கு மேல என ஜொள்ளியிருந்தாலும் மீ ஒத்துக்க மாட்டேன்ன்.. அவ்ளோ விளக்கம் குறைஞ்ச பேபியாகவா நான் எழுதுறேன்:)) நான் சுவீட் 16 எண்டால் மட்டும்தேன் ஒத்துக் கொள்வேன்:))[உண்மையை மட்டும்தானே ஒத்துக்கொள்ள முடியும் ஸ்ரீராம்:))].. ஹா ஹா ஹா துரை அண்ணன் ஒளிச்சது போது வெளியே வந்து தீர்ப்பை மாத்துங்கோ:)

      நீக்கு
    8. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ.த:)..

      என் சேட்டிபிக்கேட்டை இப்போ தேடி எடுத்து ஸ்கான் பண்ணிப் போடோணும் போல இருக்கே:))...

      அதென்ன இருந்தாப்போல 65+:) ஹையோ இது ஆருடைய கணக்கோ:)) அந்த திருப்பரங்குன்றத்து முருகனுக்கே வெளிச்சம்:)..

      நீக்கு
    9. அதிரா.. அஞ்சு வயசுக்கு மேல் என்றால் (நான் ஃபீமேல் ஆச்சே என்று ஜோக்கடிப்பீர்களோ என்றும் எதிர்பார்த்தேன்!) எல்லோருமே அதில் வந்து விடுவார்கள். அஞ்சு வயசுக்குமேல என்றால் ஆறு அல்லது ஏழு வயசு என்று மட்டும்தானா அர்த்தம்?!!!! ஆ... துரை அண்ணன் பதிவில் சண்டையா? என்னடா இது... குவைத்துக்கு வந்த சோதனை!

      நீக்கு
    10. ஹா ஹா ஹா நீங்க அந்த “மேல்” ஐ எதிர்பார்த்தீங்களோ:))... இப்பூடி ஐடியா எல்லாம் அம்பதைத்:) தாண்டியோருக்குத்தான் வருமாக்கும்:)[ஹா ஹா ஹா இதைத்தான் பொல்லுக்கொடுத்தே.... என்பினமோ:))] நேக்கு இப்பூடிக் கண்டு பிடிக்கத்தெரியாதே:) சுவீட் 16 க்கு சூது வாது தெரியாதாக்கும்:)).. ஹையோ கை லேக்ஸ் ஆ...டுதே நேக்கு:))..

      ஹா ஹா ஹா திருவிளாக்களில் சண்டை வருவது சகஜம் தானே:)).. எனக்கு நீதி கிடைக்காமல் தேரிழுக்க விட மாட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:))..

      நீக்கு
    11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    12. // சுவீட் 16 க்கு//

      கண்ணாடியில் பாருங்கள். 16 ஆகத் தெரியும்!

      நீக்கு
    13. ஹா ஹா ஹா துரை அண்ணன் ஓடிக் கமோன்ன்ன்ன்ன்:) ஸ்ரீராம் ரென்ஷனாகிட்டார்ர்ர்ர்ர்ர்:)) கண்ணாடியிலும் சுவீட் 16 ஆகவே தெரியுமாம்ம்ம் ஹா ஹா ஹா .... கண்ணாடி எப்பவும் உண்மையைத்தான் சொல்லும் என கண்ணதாசன் அங்கிளே ஜொள்ளிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நீக்கு
    14. ஹையோ அதிராவின் வயசு 80 என்று என்னோடு சேர்ந்து ப்ரூஃப் கொடுக்க அவங்க செக் ஏஞ்சல் இல்லையே!! ல்லையே!!,லையே! யே!! ஏஞ்சல் எங்கிருந்தாலும் ஒடி வந்து இங்குட்டு வந்து ஃப்ரூஃப் கொடுத்துட்டுப் போங்க!!

      ஆமாம் அதிரா கண்ணாடி உண்மையைத்தான் சொல்லும் 80 என்று!!!

      ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    15. பாண்டிய மன்னன் எழுப்பிய ஐயம் போலல்லவா இப்ப துரை அண்ணன் எழுப்பிவிட்டார்!!! ஆஹா...இங்கு பதிவர் பெண்களின் வயது பற்றிய சர்ச்சையை!! ஜூப்பர்!! பெண்கள் இயற்கையிலேயே எப்போதும் இளமையானவர்களா எப்போதும் ஸ்வீட் 16 என்று சொல்லிக் கொள்கின்றனரே!! ஏன்று...

      கீதா

      நீக்கு
  5. அரிதின்முயன்று பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் புருவகங்களை உயர்த்திவிட்டன.

    பதிலளிநீக்கு
  6. நானும் அவ்வப்போது பல பழைய படங்களைப் பகிர்ந்திருக்கிறேன் குறிப்பாக இப்போது நான் வசிக்கு பெங்களூர் பற்றியவை வேறு படங்களும் உண்டுஅவை சில நொஸ்டால்ஜிக் நினைவுகளைத் தூண்டும்

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அனைத்தும் பொக்கிசங்கள்...

    பதிலளிநீக்கு
  8. எல்லாப் படங்களும் அருமை. அந்தக் கடைசிப்படம் என்னவாக இருக்கும் என மண்டை குடையுதே! இங்கே திருச்சி மலைக்கோட்டை நுழைவாயில் தான் கடைசியில் இருக்கு. அது பார்த்ததில்லை முதல் முறையாப் பார்க்கிறேன். இதிலேருந்தே தெரிஞ்சிருக்கணுமே, நான் தான் சின்னப் பொண்ணுனு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசாக்கா கடைசி வரியில என்னமோ சொல்ல வாறீங்க... நேக்குத்தான் வாசிக்க முடியல்ல:))

      நீக்கு
    2. கீதாக்கா ஆமாம் கீதாக்கா நானும் முதல் முறையா பார்க்கறேன்....!!! அதனால அந்தக் கடைசி வரிய டிட்டோ செஞ்சுக்கறேன்...

      கீதா

      நீக்கு
    3. ஹெஹெஹெஹெ அதிரடி, வயசானவங்க எப்படிப்புரிஞ்சுப்பாங்க? :)))))

      நீக்கு
  9. திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலும், மகாமக குளம் படமும் புதுசு

    பதிலளிநீக்கு
  10. பழைய படங்களைப் பார்த்து இப்போதைக்கு அப்போது எப்படி இருந்தது என்று பார்ப்பது ஒரு சுவாரஸ்யம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் தஞ்சைப் பெரிய கோவிலும் எவ்வளவு மாற்றங்கள்! திருவரங்கமும்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் - நான் 6-7 வருடங்களுக்கு முன்பு, நெல்லை கிராமத்தில் நான் சிறுவயது முதல் இருந்த பெரியப்பாவின் வீட்டைப் பார்த்தேன். இவ்வளவு சிறிய இடத்திலா அவ்வளவு மகிழ்ச்சியாக 8-9 பசங்களின் விடுமுறைக்காலம் கழிந்தது என்று மிகுந்த ஆச்சர்யம். கிராமத்தின் பிரதான தெருவும் அடையாளம் தெரியாத அளவு மாற்றம் (அப்போது இருந்தவர்களில் 90% இல்லை, அதாவது அந்தக் குடும்பங்களே இல்லை. புதிய ஆட்கள்)

      உங்களுக்கும் மதுரைக்குச் (தஞ்சைக்கு) சென்றபோது அவ்வாறு தோன்றியிருக்கா?

      நீக்கு
    2. // உங்களுக்கும் மதுரைக்குச் (தஞ்சைக்கு) சென்றபோது அவ்வாறு தோன்றியிருக்கா? //

      ஆம் நெல்லை.. நாங்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக் குடியிருப்பில் வாழ்ந்த வீட்டைப் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு சின்ன இடத்தில் ஐந்தாறு பேர்கள் இருந்தோம்.. எந்த குறையும் சொல்லாமல் என்று ஆச்சர்யம்.

      நீக்கு
    3. மதுரை, ஏன் தஞ்சையிலும் சரி, அப்போது நாங்கள் வாங்கிய பால் அளவை இப்போது நினைத்துப் பார்த்தால் அவ்வளவு பேர்களுக்கு எப்படிச் சமாளித்தார் அம்மா? என்று ஆச்சர்யமாக இருக்கும். பதினைந்து தேதிக்குமேல் அப்பாவின் காசு டப்பாவில் பத்து ரூபாய், அல்லது பதினைந்து ரூபாய்தான் இருக்கும்!

      நீக்கு
  11. ஒவ்வொன்றும் அழகு ..ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. துரை அண்ணா வண்க்கம். நேற்று உங்கள் தளம் திறக்கவே முடியலை. கணினி ஹேங்க் ஆகியது. மீண்டும் கணினி மெமரி பிரச்சனை போலும். வேறு சில தளங்களும். இன்று காலை உங்கள் தளம் மட்டும் இப்போது ஓபன் செய்தேன் திறந்துவிட்டது உடனே!! எனவே தாமதமாகிவிட்டது அண்ணா.

    படங்கள் அத்தனையும் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. என்ன அழகு. தஞ்சை பெரிய கோயிலில் என்ன மாற்றங்கள். கிணறு மூடப்பட்டது வருத்தம் இல்லையா...

    அழகு படங்கள். என்னென்னவோ மனதில் தோன்றுகிறது. அப்போதைய காலம் இப்போது வராதா என்றும் ஏங்குகிறதுதான்...அப்போதைய நிறைவு இப்போது இருக்கா என்றால் இல்லை என்று சொல்லலாம்...ஹும்...பெருமூச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பழைய படங்கள் பொக்கிஷங்கள்.

    வயது குறைவானாலும் அனுபவ அறிவு அதிகம் அதிராவிற்கு.
    வாழ்க்கைக்கு தேவையான (எல்லோருக்கும்) விஷயங்களை பக்குவமாய் சொல்வார்.
    மூர்த்தி சிறிதானலும், கீர்த்தி பெரியது என்று .
    நெல்லைத் தமிழன் சொன்னது போல் விடுமுறை வரும் விருத்தினர்கள் எவ்வளவு பேர் என்றாலும் வீட்டில் தங்கி உணவு உண்டு களித்த காலங்க்கள் திரும்பி வருமா என்று ஏங்க வைக்கிறது. இப்போது வரும் போதே ஓட்டலில் அறை போட்டு விட்டு அப்புறம் தான் வருகிறார்கள். காலம் மாறுது, கருத்து மாறுது, கோலம் மாறுது, கொள்கை மாறுது. மற்றம் மனங்களில்.

    மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்.

    பதிலளிநீக்கு
  14. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..