அன்பின் ஜி அவர்கள் -
தனது தளத்தில், வெளிநாட்டில் -
குறிப்பாக அரபு நாடுகளில்
வேலை தேடி வருவோர் தம் வேதனைகளைப்
பதிவு செய்து அனைவரையும் கலங்கடித்து விட்டார்...
அரபு நாடுகள் எல்லாவற்றிலும்
ஒன்று போலவே எல்லாமும் நிகழ்கின்றன...
இடுப்பொடிய வேலை செய்து விட்டு,
நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால் -
அஹமத்!.. தால்!... (தால் என்றால் வா.. என்பதாகும்)
வீடுகளிலோ கடைகளிலோ அல்லது
நிறுவனங்களிலோ வேலை செய்வோரை
பொதுவாக - அஹமத்.. - என்றே அழைப்பார்கள்..
பெயர் தெரிந்தாலும் அஹமத் என்று அழைப்பதில்
அலாதியான மகிழ்ச்சி - அவர்களுக்கு..
ஆனால் -
குளிக்கும் போது சாப்பிடும் போது அல்லது
வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போது
உடனே வா!.. - என்று விடாப்பிடியாக நச்சரித்தால் எப்படியிருக்கும்!?..
அழைப்பை ஏற்று உடனடியாகச் செல்லாவிட்டால் -
சடார்.. சடார்.. - என, அடி விழும் அவலமும் உண்டு எனில் -
தலைவிதியை என்ன என்று சொல்வது?...
அரசு அலுவலகங்கள் பிற நிறுவனங்கள் தவிர
வீடுகளில் வேலை செய்வோர் தினமும் சந்திக்கும்
இன்னல்கள் சொல்லி மாளாதவை...
பணிப்பெண்கள் என்றால் - கேட்கவே வேண்டாம்..
எல்லாவற்றையும் மீறி
நல்ல வீடு நல்ல ஆட்கள் அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
இப்படியான துன்பங்கள் எல்லாம் நமக்கு வாய்த்ததில்லை...
ஆனால், மனதிற்கு உளைச்சலைத் தரும்
வேறு விதமான தொல்லைகள்... பிரச்னைகள்...
அதனை பிறிதொரு சமயம் சொல்கிறேன்..
இங்கே பெருஞ்சமையற்கூடத்தில் வேலை....
அதனால், தங்குமிடத்திலும் சரி.. வேலைத் தளத்திலும் சரி..
உண்ணும் உணவிற்கு பிரச்னை இல்லை...
குறிப்பிடத்தக்க ஒருவிஷயம் என்னவெனில் -
வாரத்தில் வெள்ளியும் மற்றொரு நாளும் புலால் உணவு..
இடையில் ஒருநாள் காய்கறிகளுடன் சாம்பார்..
மற்ற நாட்களில் முரட்டு அரிசி சோற்றுடன் பருப்பும் கடலையும் தான்!..
மற்றபடி - சீருடைகளை வெளுத்துத் தரும் வசதியும் உண்டு...
வேலைத் தளத்திலோ -
எல்லா நாளும் எல்லா வேளையும் இறைச்சி, கோழி, மீன் வகைகள் தான்..
ஆனால் -
நான் இந்த களேபரங்களில் கலந்து கொள்வதில்லை....
சொந்த சமையல் தான் எப்போதும்.. அதுவும் சைவ உணவு தான்...
லாண்டிரியில் துணிகளைப் போடுவதில்லை...
நானே துவைத்து மடிப்பு ஏற்றிக் கொள்வேன்...
சாப்பாட்டிற்காக குறிப்பிட்ட தொகையை
மாதந்தோறும் கொடுத்து விடும் நிறுவனங்களும் உள்ளன...
எங்கள் நிறுவனத்தில் அந்த நடைமுறை இல்லை....
நான் செலவுகளைக் கணிப்பதில்லை..
எனவே -
எனது உணவு!.. எனது ஆரோக்கியம்!...
இது குறித்து நிறைய பதிவுகளைப் போடலாம்...
ஆயினும், இப்போதைக்கு இது!..
இந்தப் பதிவில் உள்ள படங்கள்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை...
உங்களுக்காக தொகுத்துள்ளேன்...
தனது தளத்தில், வெளிநாட்டில் -
குறிப்பாக அரபு நாடுகளில்
வேலை தேடி வருவோர் தம் வேதனைகளைப்
பதிவு செய்து அனைவரையும் கலங்கடித்து விட்டார்...
அரபு நாடுகள் எல்லாவற்றிலும்
ஒன்று போலவே எல்லாமும் நிகழ்கின்றன...
இடுப்பொடிய வேலை செய்து விட்டு,
நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால் -
அஹமத்!.. தால்!... (தால் என்றால் வா.. என்பதாகும்)
வீடுகளிலோ கடைகளிலோ அல்லது
நிறுவனங்களிலோ வேலை செய்வோரை
பொதுவாக - அஹமத்.. - என்றே அழைப்பார்கள்..
பெயர் தெரிந்தாலும் அஹமத் என்று அழைப்பதில்
அலாதியான மகிழ்ச்சி - அவர்களுக்கு..
ஆனால் -
குளிக்கும் போது சாப்பிடும் போது அல்லது
வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போது
உடனே வா!.. - என்று விடாப்பிடியாக நச்சரித்தால் எப்படியிருக்கும்!?..
அழைப்பை ஏற்று உடனடியாகச் செல்லாவிட்டால் -
சடார்.. சடார்.. - என, அடி விழும் அவலமும் உண்டு எனில் -
தலைவிதியை என்ன என்று சொல்வது?...
அரசு அலுவலகங்கள் பிற நிறுவனங்கள் தவிர
வீடுகளில் வேலை செய்வோர் தினமும் சந்திக்கும்
இன்னல்கள் சொல்லி மாளாதவை...
பணிப்பெண்கள் என்றால் - கேட்கவே வேண்டாம்..
எல்லாவற்றையும் மீறி
நல்ல வீடு நல்ல ஆட்கள் அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
இப்படியான துன்பங்கள் எல்லாம் நமக்கு வாய்த்ததில்லை...
ஆனால், மனதிற்கு உளைச்சலைத் தரும்
வேறு விதமான தொல்லைகள்... பிரச்னைகள்...
அதனை பிறிதொரு சமயம் சொல்கிறேன்..
இங்கே பெருஞ்சமையற்கூடத்தில் வேலை....
அது அரசுத் துறையுடன் பணி ஒப்பந்தம் செய்திருப்பதால்
ஓரளவுக்கு நல்ல தங்குமிடங்கள்.. தினசரி போக்குவரத்து...
உண்ணும் உணவிற்கு பிரச்னை இல்லை...
குறிப்பிடத்தக்க ஒருவிஷயம் என்னவெனில் -
வாரத்தில் வெள்ளியும் மற்றொரு நாளும் புலால் உணவு..
இடையில் ஒருநாள் காய்கறிகளுடன் சாம்பார்..
மற்ற நாட்களில் முரட்டு அரிசி சோற்றுடன் பருப்பும் கடலையும் தான்!..
மற்றபடி - சீருடைகளை வெளுத்துத் தரும் வசதியும் உண்டு...
வேலைத் தளத்திலோ -
எல்லா நாளும் எல்லா வேளையும் இறைச்சி, கோழி, மீன் வகைகள் தான்..
ஆனால் -
நான் இந்த களேபரங்களில் கலந்து கொள்வதில்லை....
சொந்த சமையல் தான் எப்போதும்.. அதுவும் சைவ உணவு தான்...
லாண்டிரியில் துணிகளைப் போடுவதில்லை...
நானே துவைத்து மடிப்பு ஏற்றிக் கொள்வேன்...
சாப்பாட்டிற்காக குறிப்பிட்ட தொகையை
மாதந்தோறும் கொடுத்து விடும் நிறுவனங்களும் உள்ளன...
எங்கள் நிறுவனத்தில் அந்த நடைமுறை இல்லை....
நான் செலவுகளைக் கணிப்பதில்லை..
எனவே -
எனது உணவு!.. எனது ஆரோக்கியம்!...
இது குறித்து நிறைய பதிவுகளைப் போடலாம்...
ஆயினும், இப்போதைக்கு இது!..
இந்தப் பதிவில் உள்ள படங்கள்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை...
உங்களுக்காக தொகுத்துள்ளேன்...
ஒரு இனிய உதயம் |
விடியலை வரவேற்கும் பாலைப் புறா |
விரிந்து எங்கும் படர்ந்திருக்கும் காகிதப் பூக்கள் |
சென்ற ஆண்டில் தங்கியிருந்த இடம்..
வலமிருந்து நான்காவது குடியிருப்பு..
சமையலறை ஜன்னலில்.. |
அடிக்கடி ஜன்னலுக்கு வரும் ஜோடிகள்...
அடிதடியும் அரவணைப்பும்
காணக் கிடைப்பவை...
எனது சமையலறையில்..
ஒரு வருடத்துக்கும் மேலாக Re find Oil வாங்குவதில்லை..
கடலை எண்ணெய் இப்போது இங்கே கிடைக்கின்றது..
இன்றைய சமையல் |
முருங்கைக் கீரை சாம்பார் - பாகற்காய் வறுவல் |
புதினா டீ |
குவைத் சிட்டிக்குச் செல்லும் போது - அங்கே,
வணிக வளாகங்களின் வெளியே சுற்றித் திரியும்
புறாக்களுக்கு தானியங்களை வாங்கி இறைப்பது சந்தோஷம்...
வேலைத் தளத்தில் வளர்ப்பு |
இரண்டு ஆண்டுகளாக
எங்களுடன் சுற்றித் திரிந்த செல்லம்...
மிகவும் புத்திசாலி..
சிலமாதங்களுக்கு முன் காணாமல் போய் விட்டாள்..
பார்வையை மறைக்கும் புழுதிக் காற்று |
மீண்டும் இரவு வேலை...
அருகில் உள்ள பள்ளி வாசலின்
தொழுகை மாடத்தின் பின்னால் நிலவு...
***
இன்னும் நிறைய விஷயங்கள்..
பின்னொரு சமயம் பார்க்கலாம்..
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் மதிப்பது சுலபம்...
-: வாலி :-
வேலை தேடி வந்த நாட்டில்
எல்லாருக்கும் பொழுதுகள்
இனிமையாக அமையட்டும்..
வாழ்க நலம்..
***
இங்கே வந்தேன் இனிய காலை வணக்கம்
பதிலளிநீக்குஅன்பின் வணக்கங்களுடன் மிக்க மகிழ்ச்சி..
நீக்குஆஜர் துரை அண்ணா.. படங்கள் அழகு....புறா வாவ்...அந்த செல்லம் வெகு அழகு...காணாமல் போனது வருத்தம்....
பதிலளிநீக்குகீதா
வருக.. வருக...
நீக்குஅந்தச் செல்லம் எல்லாருடனும் பழகாது..
அதைப் பற்றிச் சொல்ல வேணும் எனில் ஒரு குறுங்கதை..
சொல்கிறேன்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
உங்கள் சமையலறை ரொம்ப நல்லாருக்கு அண்ணா...இன்றைய மெனு...நா ஊருது....கடைசி படம் அட்டகாசம்....
பதிலளிநீக்குமீண்டும் வரேன்.. .என் கன்னழகி வெளியில் போகும் நேரம்....
கீதா
அந்தச் சமையலறை முந்தைய குடியிருப்பினுடையது..
நீக்குஇப்போது - சமையலறையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை..
மீண்டும் வருக.. மகிழ்ச்சியுடன்..
சைவ சமையல் நாமே செய்து கொள்வது மிக நல்லது மனதுக்கும் உடல் நலனுக்கும் .
பதிலளிநீக்குமுருங்கைக்கீரை பாகல் முளைக்கீரை கோவைக்காய்லாம் பிரெஷா இருக்கு இங்கே குளிருக்கு சட்டுனு வாடிடும்
மனதுக்கும் உடலுக்கும் நல்லது.. அதே தான்!..
நீக்குஇப்போதெல்லாம் தினசரி புத்தம் புதிய காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன..
மகிழ்ச்சியுடன்..
ஓ இவ்ளோ நேரமும் மிகப் பொறுமையாகப் படித்தேன்.. படித்து முடித்ததும் என் மனதில் ஒரு வெறுமைபோல ஓடியது... அதாவது மேற்கத்தைய வெளிநாடுகளில் வாழும் நாம்.. இந்நாட்டோடு ஒட்டி விட்டோம்ம்..
பதிலளிநீக்குஆனா அங்கு மிடில் ஈஸ்ட் பக்கம் வாழ்வோர் எதனோடும் ஒட்ட முடியவில்லை.. ஒரு தனிமையான ... தானும் தன்பாடுமான வாழ்க்கையே வாழ்கின்றனர்... என்றே படுது.. அவர்களோடு ஒட்டவும் முடியாதுதானே..
இங்கே ஐரோப்பியர் 90 சதவீதம் மனிதாபிமானி மிக்கவர்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளனும் அதனால்தான் இங்கே சகஜமாகிட்டோம்
நீக்குஉண்மைதான்..
நீக்குஒரு வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்று
அதுவே நாளாடைவில் பழக்கமாகி
அதிலிருந்து விடுபடமுடியாமல் போகின்றது...
கடைசி காலத்தில் வேண்டியது அமைதியும் அரவணைப்பும் தான்..
ஆனால் அது மட்டும் கிடைப்பதில்லை...
அது உண்மைதான் அஞ்சு.. நாம் ஒட்டப் பயந்தாலும் இங்கு நம்மை அணைத்து ஒட்டப்பண்ணி விடுகிறார்கள் வெள்ளையர்கள்.
நீக்குஅஹமத் என்றால் பெயர் இல்லையோ? இப்படி ஒரு அர்த்தமா!
பதிலளிநீக்குயூ.ஏ.ஈ.யில் முஹம்மத் என்றே அழைப்பர்.
நீக்குஸ்ரீராம்....
நீக்குநம்ம ஊர்ல மாலை போட்டிருக்கும் சாமிகள் மற்ற அனைவரையும் சாமி.. என்று அழைப்பதைப் போல -
இங்கே ஆண்களை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் அஹமத்.. என்று அழைப்பது அரபு தேசத்தவர்க்கு வழக்கம்.
இதனூடாக - வீட்டில் பணிபுரியும் பெண்களை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது...
அன்பின் ஜி.. அவர்கள் UAE யில் முஹம்மத் என்று அழைப்பார்கள் என்று கூடுதல் செய்தி வழங்கியதற்கு மகிழ்ச்சி..
அடி விழுமா? அநியாயம். கேட்பாரில்லையா? மனித உரிமை சங்கங்கள் அங்கில்லையா?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குஅடி என்பது குறைந்த பட்சம்... அதற்கு மேல் சொல்லக் கூடாது.. சொல்ல முடியாது...
ஆமா.. அதென்ன மனித உரிமை சங்கம்!..
அப்படின்னா.. பொரி பொட்டுக்கடலை கொடுக்கிற இடமா!?...
படங்கள் நன்றாய் இருக்கின்றன. நீங்கள் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? முருங்கைக்கீரை சாம்பார், பாகல் கறி... அருமையான சமையல். நாவூறுகிறது!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குகம்பெனி வழங்கியுள்ள குடியிருப்பில் தான்..
இங்கே தனியாக அறை எடுப்பதற்கெல்லாம் வருமானம் போதாது...
தனியார் நிறுவனங்கள் பலவும் உணவு - தங்குமிடத்திற்கு ஓரளவு பணத்தைக் கொடுத்து விட்டு பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றன....
விலங்குகள் கூட தங்க விரும்பாத அந்த இடங்களிலும் நம்மவர்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்...
ஆனால் புலிப்பாணிகள் கதை வேறு மாதிரி..
அது தனி ரகமானது...
நண்பரின் பதிவில் பணியாளர்கள் படும் பாடு குறித்து வாசித்து மனம் கனத்தது .
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று செல்லாவிடில் அடியா :( கொடுமை
செல்லம் அழகாய் இருக்கிறாள். அவள் புராணம் ஏதாவது இருந்தால் பதிவிடுங்களேன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பதுபோல.. வீடுகளில் வேலை செய்வோர் பாவம்தான்.. கூப்பிட்டவுடன் ஓடோணும் எனில் .. அவர்கள் என்ன மெசினா.. அடியும் விழுமோ? இதென்ன இது? எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்கிறோம் நாம்???:)) ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை... எதுக்காக அப்படி வேலை செய்கிறார்கள்... விட்டிட்டுப் போயிட்டால்தான் தெரியும்.. ஊரிலும் விளம்பரங்கள் ஒட்ட வேணும்.. இப்படி வேலைகளுக்குப் போயிடாதீங்கொ என...
பதிலளிநீக்குஊரார் மதிப்பது சுலபம்... கடல் மேல் பிறக்க வைத்தான்... கடல் கடந்து போக விட்டான்... எண்களைக் கண்ணீரில் மிதக்க விட்டான்...
பதிலளிநீக்குஎங்களை... எண்களை அல்ல!!!
நீக்குபடங்கள் எல்லாம் அழகு காலை உதயம் அப்புறம் அந்த காதல் ஜோடிகள் அழகோ அழகு
பதிலளிநீக்குபறவைகளுக்கு உணவிடுதல் நல்லது அண்ணா .முன்பு ஒருவர் சொல்வார் புறாக்கள் மிக சாந்தமானவை அவை பார்க்கும்போது அந்த காற்று நல்லதாம்
ஓ குட்டிப் பெண்ணுக்கு குட்டிப் பூஸார் ஜெல்ப்பிங் ஆ?:)) இவ்ளோ ஃபிரெஸ் ஆ உங்களுக்கு மரக்கறிகள் கிடைக்கின்றனவே... அதிலும் முருங்கை இலை.. அது உள்நாட்டில் இருக்கோ?
பதிலளிநீக்குமற்றது மணத்தக்காழி இலையோ...
சமையல் பிரமாதம்.. அது என்ன கறி என ஜொள்ளவே இல்லை:)..
படங்கள் அழகு.. உந்தப் பெண்மணி எங்கு போயிட்டாவோ? நல்ல யங்காத்தானே இருக்கிறா...
அதுதான் பாகற்காய் வறுவல் எனச் சொல்லியிருக்காரே அண்ணா..பாக்கவே என்ன அழகா இருக்கு இல்லையா அதிரா...போய்ச் சாப்பிடணும் போலத் தோணூது..
நீக்குகீதா
ஓ கீதா இப்போதான் கவனிச்சேன்ன்.. நல்ல கைப்பக்குவமான சமையல்..
நீக்குமாடப்புறா.. மணிப்புறா தெரியும்.. இது என்ன பாலைப்புறா?:) பாலைவனப் புறா என்பதால் அப்படி அழைக்கினமோ...
பதிலளிநீக்குசரி நீங்கதான் பதில் சொல்ல மாட்டீங்களே:) ஆனா அது தெரிஞ்சும் எனக்கு நிறையக் கொஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சனா வருதே:)..
அன்பின் ஜி
பதிலளிநீக்குமனதை கலங்கடிக்கும் விடயங்கள் இறையருளால் நான் அடி வாங்கும் கீழ்நிலைக்கு இல்லை.
வாயுள்ள பிள்ளையே பிழைக்கும் என்பதை அங்கு சென்ற பிறகே அறிந்து பிழைக்க தொடங்கினேன்.
இருப்பினும் அரேபியரில் யூ.ஏ.ஈ.யினர் சற்றே நாகரீகம் அறிந்தவரே காரணம் தற்போது படிப்பறிவு முழுமையடைகிறது.
எமக்கு பின்னாளில் ராஜவாழ்க்கை எனலாம்.
வாழ்க நலம்.
வெளிநாடு சென்றுவாழ்வோர் உங்களை வாழ்க்கை முறையை கடைபிடிப்பது நலமென்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅரபு நாடுகளில் தொழில் துவங்கக் கூட அதற்கு ஒரு அரபியின் பெயரில்தான் துவங்க வேண்டுமாமே பெனாமி தொழில்களா தங்குமிடமில்லாவிட்டால் அரபு நாடுகளுக்குப்போகக் கூடாது என்னும் அறி வுரை கேட்டிருக்கிறேன்
பதிலளிநீக்குவெளிநாட்டு ஊதியம் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்
பதிலளிநீக்குஆனால் வெளிநாட்டு வாழ்க்கை
நினைக்கவே மனம் கனக்கிறது ஐயா
முதலில் சொல்லப்பட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது. பாலைவனத் தேசத்தில் அத்தேசத்தின் நிலைத்தைப் போல இப்படி வெறுமைதான் போல வாழ்க்கை!!! அடிகள் எல்லாம் விழுமா ஹையோ!!! ஏன் கேள்வி கேட்பார் இல்லையா....கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை வேதனைதான் அங்கு என்பது முன்பே பல செய்திகளில் வாசித்ததுண்டு. அதுவும் ஊருக்கு வெளியே அடைத்துப் போட்டு ஜெயில் போல இருக்கும் அறைகளைக் கூடப் படங்களாகப் போட்டிருந்தார்கள் அதன் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் அந்த வேதனையான முகங்கள் இன்னும் கண்ணில்....
பதிலளிநீக்குகீதா
துரை அண்ணா பைரவி செல்லம் ரொம்ப கம்பீரமாக இருக்கிறாளே!!! கதை ஏதேனும் உண்டா...அவள் பேரன் பேத்தி எல்லாம் பார்த்தாளா? கதை இருக்குமே!! இருந்தால் பதிவாய்...
பதிலளிநீக்குபுறாக்கள் ஜன்னலில் அமர்வதும் அதற்கு உணவு அளிப்பதும் அழகு!! ரசித்தேன் துரை அண்ணா...
காரட் ஜூஸ் புதினா டீ, பழங்கள், காய்கள் ஆஹா!!!! கண்ணைக் கவர்கிறது....
கீதா
அரபு நாட்டு வாழ்க்கை அதுவும் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி நன்றாகவே தெரியும். கேரளத்தில் இருந்து அங்கு அதிகம் பேர் இருக்கிறார்களே. அதில் பல வகையறாக்கள் உண்டு...கூலித் தொழிலாளிகளாகச் செல்வதிலிருந்து உயர்தர வேலைக்குச் செல்பவர்கள் வரை..இதில் அதிகம் கஷ்ட்ப்படுபவர்கள் கூலி வேலைக்குச் செல்பவர்கள்...பாவம்...இதில் சில தில்லுமுல்லுக்கள் நடந்து ஏமாறுபவர்களும் உண்டு...பணத்தை பாஸ்போர்ட்டை இழப்பவர்களும் உண்டு. வேதனை அதைக் கேட்கும் போது.
பதிலளிநீக்குஉங்கள் படங்கள் அனைத்தும் அழகு..ரசனை மிக்கதாக இருக்கிறது...
துளதிதரன்
அரபு நாட்டு வாழ்க்கையில் இரண்டு வகைகள்தான் உண்டு. அரசு, தனியார் கம்பெனிகளில் நல்ல வேலை பார்ப்பவர்கள் (400 தினாருக்கு மேல் சம்பாதிப்பவர்கள்). இவர்களில், 600-700க்கு மேல் சம்பாதிப்பவர்கள் தங்கள் மனைவியை இங்கு அழைத்துவருகிறார்கள். வாய்க்கும் கைக்குமாக வாழ்க்கை ஓடும். அவர்களுக்கு மிகுந்த சுமை இல்லை.
பதிலளிநீக்கு1000 தினாருக்கு மேல் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் வாழ்கிறார்கள். கோவில், சத் சங்கம், நண்பர்களோடு கூடிக் குலாவுதால் என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
200 தினாருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அதிலும் 100 தினாருக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அதிலும் அவர்களது ஊரில், இவர்களது கஷ்டங்களை அறியாமல் அனுப்பும் ரூபாய்களை ஊதாரித்தனமாகச் செலவழிக்கும்போதுதான் இவர்களுக்கு வருத்தம் தாளாது.
வீட்டு வேலைக்கு தெலுங்கு பேசுபவர்களும், பிலிப்பினோக்களும்தான் அதிகம் உண்டு.
துரை செல்வராஜு சார் நலமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களை குவைத்தில் சந்திக்கணும் என்று நினைத்தது நிறைவேறவில்லை. வாழ்க வளமுடன்.
ஓ இப்பொழுதான் கொஞ்சம் விபரம் புரிகிறது... அப்போ குடும்பத்தை அழைத்துவர விசாப் பிரச்சனை இல்லை பணம்தான் பிரச்சனையோ பலருக்கு.?....
நீக்குநான் அறிஞ்சது கொன்றக்ட் சைன் பண்ணி வந்தால் 2 அ 3 வருடம் பாஸ்போர்ட்டே கையில் கிடைக்காதாமே.. அவர்கள்தான் மிகக் குறைந்த வருவாயில் இருப்பவர்களோ...
மனைவியை அழைத்துவர, அதற்கு ஏற்ற சம்பளம் இருக்கணும் (குறைந்த பட்சம் 4000 திர்.ஹாம், தங்குமிடம் என்று ஞாபகம். மற்ற தேசங்களில் சிறிது குறைவு. வேலையும், 'ஃபேமிலி ஸ்டேடஸ்' ஆக இருந்தால், நிச்சயம் குடும்பத்தை அழைத்துவரலாம்.
நீக்குகுறைந்த வருவாயில் நிறையபேர் இருக்கின்றனர். ஆமாம். ஸ்பான்ஸர்கள் பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துக்கொள்கின்றனர்.
முருங்கைக்கீரை கூடக்கிடைப்பது சந்தோஷமா இருந்தாலும் உள்ள நிலைமையை நினைத்தால் வேதனை தான் மிச்சம். மனதில் சந்தோஷம் இருக்க வேண்டாமா! உற்றாரை விட்டு, உறவுகள், நட்புக்களை விட்டு வெளிநாட்டில் தனிக்குடித்தனம்! :( என்னதான் சமைத்துச் சாப்பிட்டாலும் மனதுக்கு வீட்டுச் சாப்பாடு வேண்டும் என எதிர்பார்க்குமே!
பதிலளிநீக்குகீசா மேடம்,, இங்கு அகத்திக் கீரை, அகத்திப் பூவும் கிடைக்குமாக்கும்.
நீக்குவெயில் காலத்தை எப்படித் தான் சமாளிக்கிறீர்களோ! அதை நினைத்தால் தான் இன்னும் கலக்கம் வருகிறது. இங்குள்ள வெயிலையே எங்களால் தாங்க முடியவில்லை.
பதிலளிநீக்குகீசா மேடம்... இந்த 22 வருடங்களில், 5 முறையே பவர் கட் ஆகியிருக்கிறது. ஒரு முறைதான் 6 மணி நேரம் பவர் இல்லை. மற்ற சமயங்களில் 10-20 நிமிடங்கள்.
நீக்குஎங்கும் ஏ.சி. அதனால வெயிலைச் சமாளிப்பது கடினமல்ல.
ஆனால் வேலைக்காரர்களுக்கு (worker category, in construction field, road etc.) கஷ்டம்தான்.
படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஇருக்கும் இடத்தின் சூழ்நிலையை ரசிப்பது மனதுக்கு நிறைவை தரும் இல்லையா?
வெயில் கொடுமைதான் இல்லையா?
குடும்பத்திற்காக சில கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள சொல்கிறது மனம் .
ஜி யின் பதிவைப் படிக்கவில்லை. உங்கள் பதிவே வருத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றாக உணவு உண்டு ,உடல் தேறுங்கள்.
துபாயில் வீட்டு வேலை செய்ய வருபவர்கள்
அவர்கள் சேரும் இடத்தைப் பொறுத்து
நன்றாகாவே இருக்கிறார்கள்.
அவர்களை ஸ்பான்சர் செய்பவர்களின் முக்கால்வாசி அரபிகள்
வீட்டில் முதலில் முடித்துவிட்டுதான் வரவேண்டும்.
ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பெண் 20 வருடங்களாக இருக்கிறார். ரம்சான் நேரத்தில் சீக்கிரம் எழுந்திருக்காததால் முகத்தில் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் இருந்தார்.
ரொம்பப் பாவம்.