செவ்வாய், ஜூன் 21, 2016

வேணுவனத்தில் திருவிழா

மூங்கில் வனத்துள் சிவலிங்கம்
முளைத்தெழுந்த திருத்தலம்.. .

அறம் காத்த எளியோர் உலர்த்தியிருந்த நெல்லை
மழையினின்று வேலியிட்டுக் காத்தருளிய திருத்தலம்..

திருநெல்வேலி..

தென் தமிழகத்தில் 
பெரும்புகழுடைய திருத்தலம்..
அகத்தியருக்குத் திருமணக்கோலம்
கட்டியருளிய திருத்தலங்களுள் நெல்லையும் ஒன்று..
***

வருடாந்திர ஆனிப்பெருந்திருவிழாவிற்கான
திருக்கொடியேற்றம்
ஜூன் 11 அன்று காலை 7.30 மணியளவில் 
 நடைபெற்றது...







இறைவன் - ஸ்ரீ நெல்லையப்பர்
அம்பிகை - ஸ்ரீ காந்திமதி

தீர்த்தம் - தாமிரபரணி, சிந்துபூந்துறை
தலவிருட்சம் - மூங்கில்

ஐயன் ஆடிக் களிக்கும்
பஞ்ச சபைகளுள் - தாமிரசபை..

உச்சி கால வழிபாட்டினை 
அம்பிகை நிகழ்த்துவதாக ஐதீகம்..

 தமிழகத்தில் ஆடிப்பூரம் மிகச்சிறப்பாக
நிகழும் சிவாலயம்..

நெல்லையில் நிகழ்ந்த
ஆனிப் பெருந்திருவிழாவின் 
காட்சிகள் - இன்றைய பதிவில்!..








கலைவாணி என காந்திமதி 










கிளி வாகனத்தில் அன்னை



ஒன்பதாம் நாள் (19/6) திருத்தேர்..

512 ஆண்டுகளாக ஆனிப்பெருந் தேரோட்டம்
நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..



மருத்துவ சேவை
தண்ணீர் சேவை
பத்தாம் நாள் - தீர்த்தவாரி
அம்பிகைக்குத் திருமுழுக்கு





மங்கள ஆரத்தி  
20/6 அன்று தீர்த்தவாரி மங்கலத்துடன்
திருவிழா இனிதே நிறைவுற்றது..

படங்களை வழங்கிய
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் 
திருக்கோயில் பக்தர் பேரவையினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி.
***.




நேர்ந்து கொண்டோர் ஒன்று கூடி
அம்பிகையைத் தம் மகளாகப் பாவித்து
வளையல் அணிவித்து
இறும்பூது எய்துகின்றனர்..

அன்பு கொண்ட அனைவருக்கும் அம்பிகையே அன்னை..
பின்னும் அவளே - அன்பு மகள்!..  
* * *

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே!.. (3/92)
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
*** 

16 கருத்துகள்:

  1. படங்களால் ஓர் பக்திப் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மின்னல் வேகத்தில் தங்களது வருகை..
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஒரே ஒரு முறை ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் எல்லாதகவல்களும் புதிது படங்கள் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நெல்லையப்பர் கோயில் சென்றுள்ளோம். விழாக்களைக் கண்டதில்லை, கேட்டதில்லை. தங்கள் பதிவு மூலமாக இன்று சென்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      எழில்மிகு சிற்பங்கள் விளங்கும் திருக்கோயில்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்வேபின்ஜி
    வேணுவனத்திருவிழா அழகிய புகைப்படங்களுடன் நன்று

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பதிவு
    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்களும் பதிவும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருவிழாவில் நாங்களும் பங்கு கொண்டோம் ஐயா...நன்றி
    இக் கோவிலுக்கு சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான புகைப்படங்கள்.... நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அழகான புகைப்படங்கள், தகவல்கள் மூலம் வேணுவனத் திருவிழாவைக் கண்டோம் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..