நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!..
அப்படி நடப்பதேயில்லை..
டிசம்பர் 10 அன்று, தஞ்சையிலிருந்து அதிகாலை புறப்பட்டு,
மீண்டும் அபுதாபி வழியாக - நலமுடன் குவைத் வந்து சேர்ந்தேன்..
அக்டோபரில் குவைத்திலிருந்து புறப்பட்டபோதே - இங்கு குடியிருப்பு மாற்றப்பட இருக்கின்றது - என்பதை அறிந்திருந்தேன்..
அதன்படி, விடுமுறையிலிருந்து திரும்பியபோது - புதிய வசிப்பிடம்..
வந்தவுடன் - புதிய இடத்தில் இணைய இணைப்பினைப் பெற இயலவில்லை..
இதனாலேயே - பதிவுகளை வழங்குவதிலும்,
நண்பர்களின் தளங்களுக்குச் செல்வதிலும் மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது..
இப்போதும் - இணைய இணைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை..
எனினும்,
இனிமேல் - நானும் நண்பர்களுடன் தொடர்ந்து வருவேன்..
இறைவனின் பெருங்கருணையினால் -
ஓரளவுக்கு சந்தோஷமும் சற்றே அதிக வருத்தமுமாக -
இந்த ஆண்டின் விடுமுறை நாட்கள் கழிந்தன..
ஒட்டுமொத்த சந்தோஷமும் - அன்பின் வர்ஷிதா!..
எங்கள் இல்லத்தின் இளந்தளிர்...
எது எதெற்கெல்லாமோ நெஞ்சில் கவிதை ஊற்றெடுக்கும்..
ஆனால்,
வர்ஷிதாவுடன் விளையாடிக் கழித்த நாட்களில் -
கவிதை என்று ஒரு சொல்!.. ஒரே ஒரு சொல்!?..
கவிதையே கைகளில் விளையாடிக் கிடந்தது என்பதைத் தவிர வேறன்ன சொல்ல!..
அபுதாபியிலிருந்து - தஞ்சைக்கு வந்த நாள் முதலாக மழை.. மழை தான்..
தீபாவளிக்கு முன் - திருஆரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் குடமுழுக்கு வைபவத்தின் போது கடும் மழை..
அதற்கு அடுத்து தீபாவளி சமயத்தில் சற்றே தூறலும் சாரலும்..
திருச்செந்தூர் - உவரி.. அதன்பின், திருமலை திருப்பதி..
திருப்பதியிலிருந்து - துரத்திக் கொண்டு வந்த மழை -
அடுத்த சில தினங்களில் தமிழகத்தின் தலைநகரைப் புரட்டிப் போட்டது..
அதிலிருந்து தஞ்சையிலும் அவ்வப்போது மழையின் கைவரிசை..
கொட்டும் மழையில் -
கல்லணையின் காவிரிக் கரையில் உலவியது புதியதோர் அனுபவம்..
அதனால் -
முன்பே திட்டமிட்டிருந்தபடி - சில விஷயங்கள் நடக்காமல் போயின..
அதற்கு மழை மட்டுமே முழுக்காரணம் அல்ல!..
இனம் புரியாத சோர்வும் ஒரு காரணம்..
ஆயினும்,
மதிப்புக்குரிய Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்களைச் சந்தித்ததில் நெஞ்சுக்கு சற்றே நிம்மதி..
பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அன்பில் வசப்பட்டிருந்தோம்!..
நிமிடங்கள் எப்படிச் சென்றன என்றே தெரியவில்லை..
ஐயா அவர்களுக்கு இணையாக - அவரது வீட்டில் மற்றொரு பதிவர்!..
தினமணி நாளிதழில் - பல படைப்புகளை வழங்கியுள்ள -
ஸ்ரீமதி பாக்கியம் ஜம்புலிங்கம் அவர்கள்..
நல்லதொரு சந்திப்பில் மயங்கிக் கிடந்த மனம் -
அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட பின் தான் - திடுக்கிட்டு விழித்தது..
ஐயா அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே!.. என்று..
மனதில் மகிழ்ச்சி இருந்ததைப் போல் -
கையில் - ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அன்புடன் வழங்கிய -
ஏற்றமிகு எழுதுகோலும் இனியதொரு நூலும் இருந்தன..
கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணமாகிய - அந்த நூலின் பெயர் -

சீற்றம் குறைந்த நிலையில் பாலாறு |
கொட்டும் மழையில் -
கல்லணையின் காவிரிக் கரையில் உலவியது புதியதோர் அனுபவம்..
டிசம்பர் மாதத்தின் - முதல் வாரம் முழுதும் தஞ்சையில் கடும் மழை..
அதனால் -
அதற்கு மழை மட்டுமே முழுக்காரணம் அல்ல!..
இனம் புரியாத சோர்வும் ஒரு காரணம்..
அன்புக்குரிய ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் |
அன்பிற்குரிய வலைப்பதிவின் உறவுகளைச் சந்திக்க இயலாததை நினைக்கும் போதெல்லாம் வருத்தம் மேலிடுகின்றது..
மதிப்புக்குரிய Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்களைச் சந்தித்ததில் நெஞ்சுக்கு சற்றே நிம்மதி..
பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அன்பில் வசப்பட்டிருந்தோம்!..
நிமிடங்கள் எப்படிச் சென்றன என்றே தெரியவில்லை..
ஐயா அவர்களுக்கு இணையாக - அவரது வீட்டில் மற்றொரு பதிவர்!..
தினமணி நாளிதழில் - பல படைப்புகளை வழங்கியுள்ள -
ஸ்ரீமதி பாக்கியம் ஜம்புலிங்கம் அவர்கள்..
நல்லதொரு சந்திப்பில் மயங்கிக் கிடந்த மனம் -
அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட பின் தான் - திடுக்கிட்டு விழித்தது..
ஐயா அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே!.. என்று..
மனதில் மகிழ்ச்சி இருந்ததைப் போல் -
கையில் - ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அன்புடன் வழங்கிய -
ஏற்றமிகு எழுதுகோலும் இனியதொரு நூலும் இருந்தன..
கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணமாகிய - அந்த நூலின் பெயர் -
ஞானத்தைத் தேடி..
உண்மையில் அது தான் இலக்கு..
வாழ்க நலம்
***
தஞ்சையில் சந்தோஷமாக கழித்த நாட்களை சொல்லியிருக்கும் விதம் அருமை சார்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
படங்களும் பதிவும் சுருக்கமாகவும், உருக்கமாகவும், சுவையாகவும் உள்ளது.
பதிலளிநீக்குநலமுடன் வாழ்க !
அன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி நலமுடன் குவைத் திரும்பியமை அறிந்து மகிழ்ச்சி
பதிலளிநீக்குவர்ஷிதா பெயரே ஒரு கவிதைதானே.. ஜி
தொடரட்டும் தங்களது (எழுத்து) பணி(யும்)
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம்.
பதிலளிநீக்குதாங்கள் நலமுடன் ஊர் சென்றது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள், வர்ஷிதா வுக்கு,
படங்கள் அனைத்தும் அருமை.
நன்றி.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
மனதில் சோர்வு எதற்கு ஐயா
பதிலளிநீக்குமகிழ்வோடு இருங்கள்
அன்புடையீர்..
நீக்குதங்களைச் சந்திக்கவில்லையே என்னும் வருத்தம் இன்னும் தீரவில்லை..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
உங்கள் இல்லத்தின் இளந்தளிர் வர்ஷிதாவுக்கு ஆசிகள்! குவைத் நல்லவிதமாகத் திரும்பியது அறிந்து மகிழ்ச்சி. இடையில் மீனம்பாக்கம் விமானநிலையம் மூடிக்கிடந்ததால் வெளியூர்ப்பயணிகள் அடைந்த இன்னல்கள் பல. முனைவர் ஐயாவைச்சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி. சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎங்க ஊருக்கு எப்போது...?
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குஅடுத்த விடுமுறையில் - நிச்சயம் தங்களைச் சந்திப்பது என்று இப்போதே முடிந்து வைத்துக் கொண்டேன்.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சென்ற முறை முடிந்தது??????
நீக்குசரி சரி சும்மா தான் சொன்னேன் வருத்தம் வேண்டாம்.
நன்றி,
அன்புடையீர்..
நீக்குஇரண்டு முடிச்சுகளும் பத்திரமான இருக்கின்றன..
நினைவூட்டியமைக்கு நன்றி..
வர்ஷிதா ஆஹா அருமையான பெயர்!
பதிலளிநீக்குவாழ்த்துகள் குழந்தைக்கு!
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
பயணம் முடிந்து திரும்பி விட்டீர்களா? ஒவ்வொரு பயணமும் முடியும் போது கொஞ்சம் கஷ்டம் தான். கடந்த நான்கு மாதங்களாகவே எங்கும் செல்ல முடியாத அளவிற்கு பணி அதிகமாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் இப்படித்தான்! பொங்கலுக்காவது ஊருக்குப் போக வேண்டும்.... ம்ம்..... முடியுமா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்கு