சனி, அக்டோபர் 03, 2015

வருக.. வருக..

அனைவருக்குமாக அன்பின் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு விட்டன..

புதுக்கோட்டை பெருமை கொள்ளும் நாள் - இதோ அருகில்!..

அன்புக்குரிய திருமிகு நா. முத்துநிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,
வலைநுட்ப வல்லுநர் திருமிகு திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களும்
விழாக்குழு உறுப்பினர்களும் நம்மை வரவேற்க அன்புடன் காத்திருக்கின்றனர்..

அவர்களுடன் தோளுக்குத் தோளாக நின்று -
விழாவின் நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொள்ள இயலாமற் போனது..

ஆயினும்,

வரவேற்புக் குழுவில் இணைந்து -

அனைவரையும் வருக.. வருக.. என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி!..




நான்காவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா -
எதிர்வரும் அக்டோபர் 11 ஞாயிறு அன்று நிகழ இருக்கின்றது..

கவிதை - ஓவியக் கண்காட்சி, பதிவர் புத்தகக் காட்சி & விற்பனை,
தமிழிசைப் பாடல்கள், பதிவர் அறிமுகம்,
நூல் வெளியீடுகள், போட்டிகள் - பரிசு வழங்குதல்,
வலைப்பதிவர் கையேடு வெளியிடுதல், விருது வழங்குதல் - 

- என விழா நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன..


மேலும் -

பல்வேறு அம்சங்களுடன் நிகழ இருக்கும் -
விழாவின் ஏனைய சிறப்புகளை - இங்கே காணலாம்..


இதுவரையிலும் -

விழாவில் கலந்து கொள்வதற்கென 232 நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்..

தகவல் கையேட்டிற்கென 97 நண்பர்கள் விவரங்களைத் தந்திருக்கின்றார்கள்..

விழாவினை சிறப்பித்து 65 தளங்களில் 137 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன..

இருப்பினும் இந்த பதிவுகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்..

அத்துடன், வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -

தமிழ் இணையக் கல்விக்கழகம் மின் இலக்கியப் போட்டிகளை நடத்துகின்றது.


வகை 01 - கணினித் தமிழ்ப்பயன்பாடு - 27 கட்டுரைகள்  
வகை 02 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - 51 கட்டுரைகள் 
வகை 03 - பெண் முன்னேற்றம் - 39 கட்டுரைகள் 
வகை 04 - புதுக் கவிதை - 92 கவிதைகள்  
வகை 05 - மரபுக் கவிதை - 51 கவிதைகள்

- என, போட்டிக்கு வந்துள்ள -

ஆக்கங்களின் எண்ணிக்கை - 260..

போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகளைப் பற்றிய விவரங்கள் -
எதிர்வரும் 06.10.2015 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

மேலும், கூடுதல் மகிழ்ச்சியாக -

நடுவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடர்ந்து தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அவை தகுதியாக இருக்குமெனில் -
பரிசுகளுக்கு அப்பாற்பட்டு - மின்னூல் தயாரிக்கப்படும் வேளையில் -
அதில் சேர்க்கப்படும் - என அறிவிக்கப்பட்டுள்ளது..

அதற்கும், அப்புறமாக -

அங்கே சிறிய யோசனை ஒன்றும் பளிச்சிட்டுள்ளது.. அது -

நடுவர்களின் அனைத்து முடிவுகளோடும் ஒத்துப் போகின்ற முடிவுகளை சரியாக எடுத்துச் சொல்லும் வாசக விமரிசனத்திற்கு யாரேனும் பரிசு தர முன்வந்தால் - அதையும் விழாவிலேயே தந்து பாராட்டலாம்..

ஆக, சிறந்த விமரிசனத்திற்கும் பரிசு!..

- என, நள்ளிரவுக்குப் பின் (குவைத் நேரம் - 1.15) கிடைத்த செய்திகள் கூறுகின்றன..

மேலும் விவரங்களை -

போட்டிகள் முடிந்தன.. அடுத்து ஒரு போட்டி?!..   - எனும் இணைப்பில் காணவும்..





வெற்றி பெறும் நண்பர்களுக்கு 
முன்னதாகவே
அன்பின் நல்வாழ்த்துகள்!.. 


மீண்டும் மனதார அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு 

வலைப் பதிவர்கள் அனைவரையும் சந்திப்பு விழாவிற்கு 
அன்புடன் அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

வாழ்க நலம் 
* * *

21 கருத்துகள்:

  1. நம் விழாவிற்கான நாம் அழைக்கும் அழைப்பிதழ் மகிழ்வைத் தந்தது. புதுக்கோட்டையில் அனைவரும் சந்திப்போம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. உங்கள் கைவண்ணத்தில் பதிவு மிளிர்கிறது... வாழ்த்துகள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஐயா அற்புதம்! அற்புதம் ! உண்மையிலும் இந்த அழைப்பிதழ் ஏதோ எங்களின் குடும்ப விழா ஒன்றினை நினைவு படுத்தி ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய்
    விட்டது நானும் பகிர வேண்டும் என்று எண்ணுகின்றேன் இருப்பினும் உங்கள் ஒவ்வொருவரினது பகிர்வும் என்னை அசர வைத்துத் தாமதிக்க வைக்கின்றதே ! இதை விடவும் நான் என்ன சாதித்து விடப் போகின்றேன் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா எங்கள் எல்லோரினது மனம் போலவும் விழா சிறக்கடும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் பாமாலை புனைந்து அழகூட்டுகின்றீர்கள்..
      அது பெரும்பணி அல்லவா!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. அன்பி்ன் ஜி அருமை அற்புதமாக உழைத்திருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
    ஜி நான் ஒட்டகத்துல ஏறிட்டேன் அப்ப நீங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நானும் ஒட்டகத்தில ஏறிட்டேன்..
      ஆனால் - அது அபுதாபியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. ஆகா ஒரு பதிவிற்காக தாங்கள் உழைக்கும் உழைப்பு இருக்கிறதே
    யாருக்கும் கிட்டாத கலை ஐயா அது
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இந்தப் பதிவு தயாரித்தபோது - குவைத் நேரம் நள்ளிரவு 1.00 மணி.. வலைப்பதிவர் சந்திப்பு தளத்திலும் அப்போது செய்திகள் வெளியாகின..

      அதையும் இணைத்து இன்றைய பதிவை தொகுத்த பின் தூக்கம் கண்களைச் சுழற்றியது..

      அதன் பிறகு - காலையில் எழுந்ததும் - தொடர்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்பின் தனபாலன்..
    தளத்தில் இணைத்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. எல்லா விவரங்களும் அடங்கிய அருமையான அழைப்பு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. தங்களின் தொகுப்பே ஆயிரம் வரவேற்பு ,,,,,,,
    வாழ்த்துக்கள்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. விழா பற்றிய அத்தனை தொகுப்புகளுடன் கூடிய அழைப்பிதழ் கண்டு மகிழ்ந்தேன் பாராட்டுக்கள்!. மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் பாராட்டுரைக்கு நன்றி..

      நீக்கு
  10. ஆஹா! அருமை!! நான் ஒரு அழைப்பு போடலாம்னு பாத்தா நீங்க எதையுமே விட்டு வக்கலியே! கலக்கல்! அன்புடன் ரவிஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்களுடைய முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  11. ஆஹா அருமை....அழைப்பு! தொகுப்பு உட்பட....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..