நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!..
நற்றமிழ் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு!..
வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் போட்டிக்குள் போட்டி!..
மேலும், பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது!..
வழி விடு!.. வழி விடு!.. என்ன போட்டி அது?..
நல்ல பதிவை தேர்ந்தெடுக்கும் போட்டி!..
பரிசுத் தொகை எவ்வளவு!?..
பத்தாயிரம் ரூபாய்!..
பத்தாயிரம் ரூபாயா.. ஆஆ.. ஆ!..
இதப்பத்தி தண்டோராவுக்கு ஏதாவது விவரம் தெரியுமா!?..
அதெல்லாம் செய்யத் தெரிஞ்சா -
நான் ஏன் - இங்கே தண்டோரா போட்டுக்கிட்டு இருக்கேன்!..
கீழே இணைப்பு எல்லாம் இருக்கு.. அங்கே போய்ப் பார்த்து - பதிவுகளைப் படித்து விட்டு - தேர்ந்தெடுக்கணும்!.. இதுதான் சாக்கு.. ந்னு மண்டபத்துக்குப் போய் யாருக்கிட்டயாவது சொல்லி எழுதி வாங்கிக்கிட்டு வரக்கூடாது.. முன்கூட்டியே விவரம் சொல்லிட்டாங்க!..
சொக்கா!..
இந்த நேரம் பார்த்து பதிவு எழுத வரலே..
படிச்சு பார்த்து தேர்ந்தெடுக்கவும் வரலே!..
கரும்பு தின்னக் கூலி!..
வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -
மறுபடியும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - புதுக்கோட்டை 2015
- எனும், தளத்திலிருக்கும் போட்டிக்கு வந்த படைப்புகளைப் படித்து விட்டு,
இந்தப் போட்டியில் இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்!.. - என,
ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் பதினைந்து பேரைத் தேர்வு செய்ய வேண்டும்..
முதல் பரிசு இவருக்கு
- என்று, ஐந்து போட்டிகளுக்கும் கருத்து தெரிவித்தால் போதும்..
அந்தக் கருத்து, ஏற்கனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் -
தேர்வு செய்து சொன்னவர்களுக்கும் பரிசு உண்டு..
விமர்சனம் எழுதவேண்டியதில்லை.. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்..
எல்லாப் படைப்புகளையும் பற்றி விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப் பின் அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு..
எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம்..
பின்னால் உதவும்!..
சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு,
அதே முடிவை எடுத்து கருத்து சொன்னவருக்கே முதல் பரிசு ரூ. 5,000/-
அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர்களுக்கு முறையே,
இரண்டாம் பரிசாக ரூ. 3,000/-
மூன்றாம் பரிசாக ரூ. 2,000/-
- என, மொத்தப் பரிசுத் தொகை ரூ. 10,000/- விழாவில் வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால்,
பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்!..

(உள்ளம் ஓட்டம் பிடிக்கின்றது - மண்டபத்தை நோக்கி!..)
* * *
கரும்பு தின்னக் கூலி!..
வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -
மறுபடியும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - புதுக்கோட்டை 2015
- எனும், தளத்திலிருக்கும் போட்டிக்கு வந்த படைப்புகளைப் படித்து விட்டு,
இந்தப் போட்டியில் இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்!.. - என,
ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் பதினைந்து பேரைத் தேர்வு செய்ய வேண்டும்..
முதல் பரிசு இவருக்கு
இரண்டாவது பரிசு இவருக்கு
மூன்றாவது பரிசு இவருக்கு
அந்தக் கருத்து, ஏற்கனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் -
தேர்வு செய்து சொன்னவர்களுக்கும் பரிசு உண்டு..
விமர்சனம் எழுதவேண்டியதில்லை.. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்..
எல்லாப் படைப்புகளையும் பற்றி விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப் பின் அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு..
எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம்..
பின்னால் உதவும்!..
சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு,
அதே முடிவை எடுத்து கருத்து சொன்னவருக்கே முதல் பரிசு ரூ. 5,000/-
அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர்களுக்கு முறையே,
இரண்டாம் பரிசாக ரூ. 3,000/-
மூன்றாம் பரிசாக ரூ. 2,000/-
- என, மொத்தப் பரிசுத் தொகை ரூ. 10,000/- விழாவில் வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால்,
பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்!..
இந்தச் செய்தி - இன்றைய தினமணி நாளிதழின் திருச்சி பதிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செய்திகளின் பிரிவிலும் வெளியாகியுள்ளது..
தினமணி நாளிதழுக்கு நன்றி..
* * *
போட்டிக்கு வந்துள்ள மொத்த படைப்புகளின் எண்ணிக்கை - 260..
அவற்றின் பட்டியலை - கீழே உள்ள இணைப்பில் காண்க..
வலைநுட்ப வல்லுநர் திருமிகு திண்டுக்கல் பொன் தனபாலன் அவர்கள் தனது தளத்தில், போட்டியின் விதிமுறைகளை விவரித்திருக்கின்றார்..
மேலும், படிவம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்கள்..
அதில் விவரங்களத் தேர்ந்தெடுத்து நிரப்பிய பின் - அனைத்து விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Submit-ஐ- அழுத்தவும்..
அதன் பின்,
தகவல் ஒன்று படிவத்தின் மேற்பகுதியில் தோன்றும்..
அதைக் கொண்டு - விவரங்கள் சேர்ந்ததை - உறுதி செய்து கொள்ளலாம்..
அன்பின் கவனத்திற்கு - தங்கள் தெரிவுகளை -
கீழ்க்கண்ட இணைப்பில் -
போட்டிக்கான விதிமுறைகளும் படிவமும்
கீழ்க்கண்ட இணைப்பில்,
போட்டிக்கு வந்துள்ள பதிவுகளும் படிவமும்
- எனக் கேட்டுக் கொண்டு, இப்போட்டிக்கான பரிசுத் தொகையையும்,
விழாவிற்கு நன்கொடையையும் வழங்கியுள்ள நல்ல உள்ளம் என்றும் வாழ்க..

வரும் 9ஆம் தேதி இரவு (இந்திய நேரம்) 11.59 வரை மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கான விதிமுறைகளும் படிவமும்
கீழ்க்கண்ட இணைப்பில்,
போட்டிக்கு வந்துள்ள பதிவுகளும் படிவமும்
* * *
விழா அரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது!..
- எனக் கேட்டுக் கொண்டு, இப்போட்டிக்கான பரிசுத் தொகையையும்,
விழாவிற்கு நன்கொடையையும் வழங்கியுள்ள நல்ல உள்ளம் என்றும் வாழ்க..
நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுத்துப்
பரிசுத் தொகையை வெல்வதற்கு
நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்!..
* * *
ஆஹா படிக்கும் வாசகர்களுக்கும் போட்டி..... கூடவே பரிசும்.
பதிலளிநீக்குபோட்டியில் ப்ங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
வெற்றி பெறுவோரை வாழ்த்துவோம்!..
அப்புறம் என்ன ? ஜி ஆரம்பிங்க.....
பதிலளிநீக்குவாங்க ஜி!..
நீக்குநம்ம ஒட்டகம் அபுதாபி பக்கம் வருது..ன்னேன்..
கொஞ்சம் தேடிப் பாருங்க.. கண்டிப்பா G Mail Box - பாருங்க!..
மகிழ்ச்சி.. நன்றி..
ஆகா..வித்தியாசமான முறையில் விமரிசனப் போட்டியை அறிமுகப்படுத்திய விதம் அருமையோ அருமை அய்யா. உங்களுக்குள் ஒரு நாடகாசிரியர் உறங்குகிறார். அவரை உசுப்பிவிட்டுப் பாருங்கள் அற்புதமான நாடகங்கள் கிடைக்கும். மிக்க நன்றி அய்யா, நமதுதளத்தில் இணைத்துவிடுவோம். வணக்கம்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஇன்று - இந்தக் கணம் மகத்தானது..
தங்களை என் தளத்தில் கண்டேன்..
தாங்கள் வந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டீர்களா!.. -
என்று ஏங்கிக் கிடந்தது மனம்..
மகிழ்ச்சியுற்றேன்.. நெஞ்சம் நெகிழ்ச்சியுற்றேன்..
அடுத்த நிலையில் வீறு கொண்டிருக்கும் தமிழுடன் எங்களையும் நடத்திச் செல்லும் தங்கள் பணி மகத்தானது...
தங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்!..
வணக்கம்..
கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
பதிலளிநீக்குசொல்வது உண்மைதான்
ஒரு அருமையான திறமையான நாடக ஆசிரியர்
தங்களுள் இருக்கிறார்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..
ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகின்றேன்..அது அடையாளம் காணப்படுகின்றதென்றால் - சந்தோஷமே..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
கைகோர்க்கும் உங்களது பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதிவு. போட்டியில் வெற்றி பெற போகும் அணைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள்!..
அன்பின் தனபாலன்..
பதிலளிநீக்குதளத்தில் இணைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா இந்நேரம் போட்டி வேலை அந்தப்பக்கம் மும்முரமாக தொடங்கியிருக்கும்,,,,,,,, ம்ம்,,,,,,,,
பதிலளிநீக்குஉண்மைதான், தங்கள் பல பணிகளுக்கு இடையேயும் தமிழுக்குள் தாங்கள் ஆழ்ந்து போவது,,,,,,
மேலும் தங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், அருமை,,,,
வாழ்த்துக்கள்,
நன்றி.
அன்புடையீர்..
நீக்குநான் இதில் கலந்து கொள்ளவில்லை.. வேலை அதிகம்.. ஓய்வில்லை..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
பதிவுலகமே அல்லோல கல்லோலப்படுகிறது. வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதிருவிழா என்று அறிவித்ததும் போதும்.. அப்படியே ஆகி விட்டது..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..வாழ்த்துரைக்கு நன்றி..
எத்தனை எத்தனை சிறப்பு!..
பதிலளிநீக்குவித விதமான போட்டிகள்! வலைப்பதிவர் விழாவென்றாலே
தனிச் சிறப்புத்தான்!
உங்கள் பதிவும் அருமை ஐயா!
வாழ்த்துக்கள்!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
இதுநாள் வரையில் தலை நிமிர்த்தி வணக்கம் செய்யும்
பதிலளிநீக்குகோயில் கோபுரத்தை தங்களது பதிவில் கண்டு மகிழ்ந்து வந்தேன்.
இன்றையை பதிவின் மூலம்
வலைப் பதிவர் திருநாள் -2015
அத்தகைய சிறப்பை பெற்று தந்து விட்டீர்கள் அருளாளர் அய்யா!
சிற்ப்பு கைங்கர்யம்!
வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
அன்புடையீர்..
நீக்குகவிதைகளால் கருத்துரைக்கும் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
அன்பின் இனிய வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..
வணக்கம்...
பதிலளிநீக்குதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
அன்பின் தனபாலன்..
நீக்குவிடுமுறையின் - பயண ஆயத்தத்தில் இருக்கின்றேன்..
வேலையும் அதிகம்!..
தங்களுடைய அழைப்பினுக்கு மகிழ்ச்சி..நன்றி..
அருமையான எழுத்து நடையில் அறிவிப்பு!!!!! மிகவும் ரசித்தோம் ஐயா....
பதிலளிநீக்குநீங்களும் கலந்து கொள்ளலாமே ஐயா!
போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!
தாமதத்திற்கு மன்னிக்கவும்...வேலைப்பளு...
அன்புடையீர்..
நீக்குதங்களுடைய அழைப்பினுக்கு நன்றி..
விடுமுறை கிடைத்துள்ளது.. எனவே வேலை சற்றே அதிகம்..
தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..