வியாழன், ஆகஸ்ட் 27, 2015

இது எந்த வகை..

நண்பனா!.. எதிரியா?..

இதற்கும் அதற்கும் நட்பா!.. பகைமையா?..

எதுவாக இருந்தாலும் சரி..

நண்பனாக இருந்தால் - அன்பும் நட்பும் இனிமையும் தொடரட்டும்!..

இல்லையெனில் -

அன்பின் அர்ப்பணிப்பு - அடிவயிற்றில் ஆனந்தமாக நிறையட்டும்!..







பச்சைப் பாம்பினைப் பற்றிக் கொண்டிருக்கும் தவளை!..

இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவிலுள்ள உயிரியல் பூங்காவில் நிகழ்ந்திருக்கின்றது..

ஃபஹ்மி என்பவர் - இந்த அரிய காட்சிகளைப் படமெடுத்து பகிந்துள்ளார்..

பாம்பைக் கண்டு தவளை பயந்தோடாமல் - பொறுமையாக அதன் மீதே ஏறி - வேறு கிளைக்குத் தாவிச் சென்றதாக -

இந்தப் படங்களை வெளியிட்டுள்ள தினமணி கூறுகின்றது..

இது - தினசரி நிகழ்வாகக் கூட இருக்கலாம்..

புராணங்களிலும் இலக்கியங்களிலும் காட்டப்பெறும் நிறைஅமைதியின் ஒரு கூறாகக் கொள்ளலாம்..

பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் 
பகைவன் கூட நண்பனே!..

- என்றார் கவியரசர்..

பாம்பின் முகத்தில் உக்ரமோ கோபமோ தெரியவில்லை..

தவளையின் முகத்திலும் பயமோ கலக்கமோ தெரியவில்லை..

பசுமை நிறைந்த நினைவுகளுடன், பாடித் திரியும் பறவைகளைப் போல -

இந்தப் பாம்பும் தவளையும் பழகிக் கிடக்கலாம் - என்றே எண்ணுகின்றது மனம்..

அழகிய காட்சியினைப் படங்களாக்கிய - திரு. ஃபஹ்மி அவர்களுக்கு நன்றி..

அவற்றை வெளியிட்டு சிறப்பித்த தினமணிக்கு நன்றி..

நட்பும் நலமும் 
வாழ்க எந்நாளும்!..
* * * 

15 கருத்துகள்:

  1. காணக் கிடைக்காத
    அற்புதக் காட்சி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையா காட்சி ! உயிரினங்கள் எல்லாம் இப்படியே பகைமை துறந்து
    வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்க வைக்கும் காட்சி
    அருமை ! இதனைப் படம் பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்ட
    தங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா ! மன்னிக்க வேண்டும் ஐயா சில தவிர்க்க
    முடியாத சூழ்நிலை காரணமாக நான் இப்போதெல்லாம் அதிகம் யாருடைய வலைத் தளத்திற்கும் செல்வது அரிதாகி விட்டது விரைவில் இந்நிலை மாறும் அதுவரை பொறுத்தருளுங்கள் .மிக்க நன்றி ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தாங்கள் கூறுவது போல உயிரினங்கள் பகைமை மறந்திருந்தால் - பூமியே சொர்க்கமாகி விடுமே!..

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அரிய புகைப்படங்களுடன் நட்பை மேன்மைப்படுத்தியிருப்பது சிறப்பு சகோதரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..

      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. நுணுக்கமான ஒரு நிகழ்வைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இயற்கைக்கு மாறான இம்மாதிரியான அபூர்வக் காட்சிகளின் படங்கள் கண்டதுண்டு. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அபூர்வமான ஆச்சரியமான காட்சி ஐயா!

    படங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது மனதுக்குள் பக் பக் கென அடித்துக்கொண்டது. உங்கள் பதிவில் இது சாதாரண நிகழ்வு போலும் என்பதை கண்டபின்பே ஆறுதல் கொண்டேன்!

    பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அருமை ஜி அற்புதமான புகைப்படங்கள் தங்களின் வர்ணனைகளுடன் .

    பதிலளிநீக்கு
  8. அருமையாக உள்ளது அதன் உறவு. புகைப்படம் அழகு
    காணக் கிடைக்காத படம். வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..