ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
ஐந்து வயது வரையில் வாய் திறந்து பேசாதிருந்த குமரகுருபரர் -
திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் மடை திறந்த வெள்ளம் போல பாடினார்.
முருகன் முன்னின்று நல்லருள் பொழிந்தனன்.
குமரகுருபரரின் தந்தை சண்முக சிகாமணியாரும் தாய் சிவகாமி அம்மையும் ஒரு மண்டலம் செய்த வழிபாட்டின் பயனை செந்தில்நாதன் அருளினான்.
பிள்ளைக்குப் பேசும் சக்தியைத் தான் கேட்டனர். ஆனால் - குமரகுருபரர் செந்தமிழ் கொண்டு செந்தில் வேலனைப் பாடினார்.
வற்றாத ஊற்று என - வளர்தமிழ் அவர் நாவில் இருந்து பெருகியது.
அப்படிப் பெருகியது தான் - கந்தர் கலிவெண்பா.
முருகனின் கருணையால் வாக்கு வளம் பெற்ற குமரகுருபரர் - மாமதுரைக் கோயிலில் அன்னை மீனாட்சியின் திருமுன் பிள்ளைத் தமிழ் பாடினார்.
அதைக் கேட்டு அகமகிழ்ந்த அங்கயற்கண்ணி - சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடை உடுத்தி வந்து குமரகுருபரருக்கு முத்து மாலையை சூட்டிச் சென்றாள்.
இத்தனை
சிறப்பெய்திய குமரகுருபரருக்கு இல்வாழ்க்கையில் நாட்டமில்லை. பெற்றோரிடம் விடை பெற்று - தருமபுரத்தில் துறவறம் பூண்டார்.
அதன்பின் குருநாதர் ஆசியுடன் புனிதத்தலங்களுள் முதன்மையான காசிக்குச் சென்றார்.
கங்கையில் மூழ்கி எழுந்தார். ஸ்ரீ விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் போற்றி வணங்கினார். கங்கைக் கரையில் திருமடம் அமைக்க எண்ணினார்.

அப்போது
காசியம்பதியினை நிர்வகித்துக் கொண்டிருந்தவன் - தாரா ஷிக்கோ.
இவன் - முகலாய மன்னன் ஷாஜஹானின் மகன்.
இளவரசன் தாரா ஷிக்கோவிடம் தன் எண்ணத்தை நேரிடையாக சொல்ல விரும்பினார் - குமரகுருபரர்.
இவன் - முகலாய மன்னன் ஷாஜஹானின் மகன்.
இளவரசன் தாரா ஷிக்கோவிடம் தன் எண்ணத்தை நேரிடையாக சொல்ல விரும்பினார் - குமரகுருபரர்.
ஆனால், குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது.
அதனால்
- வாணியைச் சரண் புகுந்தார். சகலகலாவல்லியின் திருவடிகளைப் பத்துப்
பாடல்களால் போற்றித் துதித்தார்.
குமரகுருபரர் மீது கருணை கொண்டாள் கலைவாணி.
அன்னையின் திருவருளால் ஹிந்துஸ்தானி குமரகுருபரருக்கு சித்தியானது.
குமரகுருபரர் மீது கருணை கொண்டாள் கலைவாணி.
அன்னையின் திருவருளால் ஹிந்துஸ்தானி குமரகுருபரருக்கு சித்தியானது.
மறுநாள்
- தனது யோக சக்தியினால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தினார். அதன் மீது ஆரோகணித்து அரசவை சென்றார். இவரைக்
கண்டு அனைவரும் வியந்தனர். அரசவையில் தன் விருப்பத்தைக் கூறினார்.
இவரைப் பற்றி அறிந்திருந்த தாரா ஷிக்கோ - மேலும் சோதிக்க விழைந்தான்.
எங்கே இடம் வேண்டும்.. தங்களுக்கு!?.. - என்று கேட்டான்.
அந்த இடத்தைக் கருடன் வட்டமிட்டுக் காட்டும்!.. - என்றார் ஸ்வாமிகள்.
எங்கே இடம் வேண்டும்.. தங்களுக்கு!?.. - என்று கேட்டான்.
அந்த இடத்தைக் கருடன் வட்டமிட்டுக் காட்டும்!.. - என்றார் ஸ்வாமிகள்.
ஸ்ரீராமர்
சிவபூஜை செய்வதற்கு சிவலிங்கம் தேடி - தென் திசையில் இருந்து வந்து -
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு சரியான லிங்கத்தினை தன்
அனுமதியின்றி அடையாளம் காட்டியதற்காக -
காசியில் காவல் நாயகனாகிய ஸ்ரீ காலபைரவரின் சாபத்துக்கு ஆளாகி - அன்றிலிருந்து காசியில் கருடன் பறப்பதில்லை.
இந்நிலையில் - அங்கிருந்த அனைவருக்கும் மேலும் வியப்பு!..
காசியில் கருடன் பறப்பதா!..
காசியில் காவல் நாயகனாகிய ஸ்ரீ காலபைரவரின் சாபத்துக்கு ஆளாகி - அன்றிலிருந்து காசியில் கருடன் பறப்பதில்லை.
இந்நிலையில் - அங்கிருந்த அனைவருக்கும் மேலும் வியப்பு!..
காசியில் கருடன் பறப்பதா!..
''ஆம்!.. பறக்கும்!..''
''அப்படியானால் நாளை கங்கைக் கரையினில் சந்திக்கலாம்!..''
அரசவை கலைந்தது.
மறுநாள். இளவரசன் தாராவும் மற்றவர்களும் கங்கைக் கரையில் கூடினர். ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்தார்.
சில நிமிடங்களில் அனைவரும் காணும்படி - கருடன் வட்டமிட்டுப் பறந்தது.
கந்தன் அருள் பெற்ற கன்னித் தமிழ் வேந்தருக்காக - கருடன் பறக்காதா - என்ன!..
கருடன் வட்டமிட்டுப் பறந்த இடம் ஸ்வாமிகளுக்கு வழங்கப் பெற்றது என்பது வரலாறு.
ஸ்வாமிகளின் பெருமையை உணர்ந்த தாராஷிக்கோ தான் வாக்களித்தபடியே நடந்து கொண்டான்.
ஸ்வாமிகளும் தமது எண்ணப்படியே மன்னன் அளித்த இடத்தில் திருமடம் அமைத்தார்.
அந்த காசி மடத்தின் கிளை தான் கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது.
செந்தமிழ்த் துறவி ஸ்ரீகுமரகுருபரர் அவர்களால் - கங்கைக் கரையில் காசி திருநகரில் சைவத் திருமடம் அமைக்கப்பட்டது.
அதற்குத் துணை நின்றவள் செந்தமிழ்ச் செல்வியாகிய ஸ்ரீ சரஸ்வதி!..

ஸ்வாமிகளுக்கு ஹிந்துஸ்தானி மொழியை அருளியவள் ஸ்ரீ சரஸ்வதி!..
தம்மை ஆதரிக்குமாறு - சரஸ்வதியை வேண்டி அமுதத் தமிழில் ஸ்வாமிகள் பாடியது - சகல கலாவல்லி மாலை எனும் ஞானப் பனுவல்!..
ஸ்ரீ குமரகுருபரர் அருளிய சகல கலாவல்லி மாலை - கற்போருக்கு எல்லா நலன்களையும் தருகின்றது என்பது காலகாலமாக நிரூபணமாகி வரும் உண்மை.
நவராத்திரியின் மகத்தான நாள் - இன்று!..
ஸ்ரீசரஸ்வதி பூஜை!..
இந்நாளை ஆயுதபூஜை என்றும் சிறப்பித்து மகிழ்கின்றோம்.
மதர்த்திருந்த மகிஷாசுரனை - அன்னை ஸ்ரீதுர்கா வதம் செய்தாள்.
ஆனந்தக் கூத்தாடிய தேவர்கள் அன்னையையும் அவள் திருக்கரங்களில் இருந்த பலவிதமான ஆயுதங்களையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதனாலேயே இந்நாள் ஆயுத பூஜை எனப்பட்டது.
மங்கலகரமாகிய இந்நாளில் - சகல கலாவல்லி மாலையைச் சிந்திப்போம்!..
ஸ்ரீ குமரகுருபரர்
அருளிய
சகல கலாவல்லி மாலை.
அருளிய
சகல கலாவல்லி மாலை.
வெண்தாமரைக்கு
அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகமேழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!.. 1
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே!.. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்துன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடுங்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலாவல்லியே!.. 3
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே!.. 4
பஞ்சப்பிதந்தரு செய்யபொற் பாத பங்கேருகமென்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே!.. 5
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே!.. 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலாவல்லியே!.. 7
சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளினாசனம்சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலாவல்லியே!.. 8
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலந்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே சகலகலா வல்லியே!.. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!.. 10.
* * *
வடமொழியும் தென் தமிழும் ஆயினான் காண்!..
- என்று சிவபெருமானை அப்பர் ஸ்வாமிகள் புகழ்ந்துரைப்பார்.
ஈசனைப் போலவே சரஸ்வதி தேவியும் - சந்த்ரகலை, ஜடாமகுடம், சுவடி, அட்சமாலை, வீணை, ஸ்படிக நிறம் - கொண்டு திகழ்பவள்.
தமிழில் பாடித் துதித்த குமரகுருபரருக்கு வடமொழியினை அருளிய பெருமையையும் உடையவள்..
ஸரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலையா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
சிவானுஜா புஸ்தகப்ருத் ஞானமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாசினி..
மஹாஸ்ரயா மாலிநி ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஷா மஹாகாரா மஹாங்குசா
பீடா ச விமலா விஸ்வா வித்யுன்மாலா ச வைஷ்ணவி..
சந்த்ரிகா சந்த்ரவதனா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரி ஸுரஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ சிவா
ஜடிலா விந்திய வாஸா ச விந்தியாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ ப்ரம்ஹஞானைக ஸாதனா
ஸௌதாமினி ஸுதாமூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாஸினி ஸுநாசா ச விநித்ரா பத்மலோசனா..
வித்யா ரூபா விசாலாக்ஷா ப்ரம்ஹஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்தி த்ரிகாலஞ்ஞா த்ரிகுணா சாஸ்த்ரரூபிணி
சும்பாசுர ப்ரமதனீ ஸுபதா ச ஸ்வராத்மிகா
ரக்தபீஜ நிஹந்த்ரீ சாமுண்டா ச அம்பிகா ததா
முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசன மர்தனா
ஸர்வதேவஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதரா ரூபஸௌபாக்ய தாயினி
வாக்தேவி ச வராருஹா வராஹி வாரிஜாஸனா..
சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஞ்ஜனா
ஹம்ஸாஸனா நீலஜங்கா ப்ரம்ஹ விஷ்ணு சிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாம் அஷ்டோத்தரம் சதம்.
இதி ஸ்ரீ ஸரஸ்வதி சத நாம அஷ்டோத்திரம் சம்பூர்ணம்.
இனி கலைவாணியைப் போற்றிப் புகழ்ந்துரைக்கும்
ஸ்ரீசரஸ்வதி அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ர மாலை!..
ஸரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலையா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
சிவானுஜா புஸ்தகப்ருத் ஞானமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாசினி..
மஹாஸ்ரயா மாலிநி ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஷா மஹாகாரா மஹாங்குசா
பீடா ச விமலா விஸ்வா வித்யுன்மாலா ச வைஷ்ணவி..
சந்த்ரிகா சந்த்ரவதனா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரி ஸுரஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ சிவா
ஜடிலா விந்திய வாஸா ச விந்தியாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ ப்ரம்ஹஞானைக ஸாதனா
ஸௌதாமினி ஸுதாமூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாஸினி ஸுநாசா ச விநித்ரா பத்மலோசனா..
என் தந்தையின் நினைவாக!.. |
வித்யா ரூபா விசாலாக்ஷா ப்ரம்ஹஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்தி த்ரிகாலஞ்ஞா த்ரிகுணா சாஸ்த்ரரூபிணி
சும்பாசுர ப்ரமதனீ ஸுபதா ச ஸ்வராத்மிகா
ரக்தபீஜ நிஹந்த்ரீ சாமுண்டா ச அம்பிகா ததா
முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசன மர்தனா
ஸர்வதேவஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதரா ரூபஸௌபாக்ய தாயினி
வாக்தேவி ச வராருஹா வராஹி வாரிஜாஸனா..
சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஞ்ஜனா
ஹம்ஸாஸனா நீலஜங்கா ப்ரம்ஹ விஷ்ணு சிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாம் அஷ்டோத்தரம் சதம்.
இதி ஸ்ரீ ஸரஸ்வதி சத நாம அஷ்டோத்திரம் சம்பூர்ணம்.
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே சதா..
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
ஓம் ஸரஸ்வத்யை நம:
* * *
சரஸ்வதி பூஜையின் மகிமையை உணர்த்தும் சிறந்த படைப்பிற்கு
பதிலளிநீக்குஎன் மனமார்ந்த பாராட்டுக்களும் இனிய சரஸ்வதி பூஜை நல்
வாழ்த்துக்களும் ஐயா !
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
அருமையான பதிவு.
பதிலளிநீக்குகுமரகுருபரர் காசியில் மடம் அமைத்த வரலாறு, மற்றும் சகலகலாவல்லி மாலை பகிர்வு, சரஸ்வதி சத நாம அஷ்டோத்திர பகிர்வு அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குவேண்டப்படும் பதிவு ! மிக அருமை!
அனைவருக்கும் கல்வித்தாயின் கருணை கிடைத்திட வேண்டுகிறேன்!
நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
சரசுவதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
இன்று முற்பகலிலேயே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
குமர குருபரர் பற்றிய இந்த செய்தி நான் அறியாதது. இன்று அறிந்து கொண்டேன். நன்றி. உங்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
தங்களுக்கும் அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்கள் நண்பரே,,,
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
ஸரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..
தங்கள் அன்பின் நல்வாழ்த்துகளுக்கு நன்றி..