சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 09.
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்
ஆலய தரிசனம்
திருநெடுங்களம்
இறைவன் திருப்பெயர் - ஸ்ரீ நித்ய சுந்தரேஸ்வரர்.
அம்பிகை - மங்கலநாயகி, ஒப்பிலாநாயகி.
தல விருட்சம் - வில்வம்.
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
அகத்திய மாமுனிவர் வழிபட்டதிருத்தலம்.
திரு மூலஸ்தானத்தினுள் அம்பிகை ஐயனைப் பிரியாது உறைகின்றாள் என்பது ஐதீகம். எனவே - கருவறையின் மீது இரு விமானங்கள் திகழ்கின்றன.
இடர் களையாய் நெடுங்கள மேயவனே!...
- என அடியார் குறைதீர வேண்டி திருஞானசம்பந்தர் - திருப்பதிகம் அருளிய திருத்தலம்.
திருச்சுற்றில் வள்ளி தேவசேனா சமேதரராக விளங்கும் - முருகப்பெருமான். அருணகிரிநாதர் வழிபட்ட திருத்தலம்.
சப்தகன்னியர் சந்நிதி விசேஷமானது. கன்னிப் பெண்கள் விரைவில் மணக் கோலங் கொள்ளவும் நல்ல மணாளனை வேண்டியும் -
ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதியிலுள்ள கல் உரலில் பஞ்சமி தினங்களிலும் வெள்ளிக்கிழமைகளிலும் விறலி மஞ்சளை இடித்து அதைக் கொண்டு - அம்மனை வழிபட அவர்தம் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
மேலும் - திருக்கற்குடியைப் போலவே - திருச்சுற்றில் ஸ்ரீ ஜேஷ்டா தேவி தனது - மகனுடனும் மகளுடனும் வீற்றிருக்கின்றாள்.
நவக்ரக மண்டலத்தில் சூரியனுடன் உஷா - சாயா தேவியர் திகழ்கின்றனர்.
மேலும், இடர் களையும் திருப்பதிகத்துடன் கூடிய - - முந்தைய பதிவு
தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில், திருஎறும்பூரை அடுத்துள்ள துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
திருச்சிம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெடுங்களத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையி னால்உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.(1/52)
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையி னால்உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.(1/52)
திருஞானசம்பந்தர்.
சிவாய திருச்சிற்றம்பலம்.
நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
இன்றும் எங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு திருக்கோயில் பற்றி சொன்னதற்கு நன்றி! திருநெடுங்கள நாதர் ஈசன் கோயில் பற்றி சுற்று வட்டாரத்தில் சொல்வதைக் கேட்டதுண்டு. பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா மிக அருமையான திருப்பாவை பாசுரத்துடன், எங்கள் ஊராம் திருச்சி அருகேயுள்ள திருநெடுங்களம் பற்றிய மிகச்சிறப்பான தகவல்கள்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றிகள், சகோதரரே !.
அன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
திருநெடுங்கள சென்றதில்லை. அடுத்த பயணத்தின் போது செல்ல முயல்கிறேன்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அன்பின் வெங்கட்..
நீக்குதிருநெடுங்களம் சென்று வாருங்கள்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
பதிலளிநீக்குஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதியிலுள்ள கல் உரலில் பஞ்சமி தினங்களிலும் வெள்ளிக்கிழமைகளிலும் விறலி மஞ்சளை இடித்து அதைக் கொண்டு - அம்மனை வழிபட அவர்தம் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
சோழர்கால கல் உரல் மிக்க வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது..
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்..
நீக்குஇனிய வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..
அருமையான பகிர்வு
பதிலளிநீக்குஸ்ரீ வராகி அம்மன் பற்றிய விடயமும் அறிய தந்தமைக்கும் நன்றிகள் .....!
தொடர வாழ்த்துக்கள்......!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..