செவ்வாய், டிசம்பர் 17, 2013

மார்கழிப் பனியில் - 02

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 02

 
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்

திருஅரங்கம்


 பூலோக வைகுந்தம்..

வைணவத்தில் கோயில் என்றால் அது திருஅரங்கம் தான்.


பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலம்.

மூலவர் - ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள். தாயார்  - ஸ்ரீரங்கநாயகி.

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் 
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!..
                                                                           - தொண்டரடிப்பொடியாழ்வார். 

வருடம் முழுதும் வைபவங்கள் நிகழும் திருத்தலம். எனினும்

லட்சக் கணக்கான பக்தர்கள் திரள - மார்கழியில் வைகுந்த ஏகாதசி வெகு சிறப்பாக நிகழும் திருத்தலம்.

ஸ்ரீ ரங்கநாயகி
21 ராஜகோபுரங்கள். நிறைந்த மண்டபங்கள். சந்நிதிகள். தீர்த்தங்கள்.

ஏழு திருச்சுற்றுகளுடன் விளங்கும் பிரம்மாண்டமான திருக்கோயில். சந்திர தீர்த்தம் திருக்கோயிலின் உள்ளே இருக்கின்றது.
 
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் - இத் திருத்தலத்தில் தான் பலகாலம் தங்கியிருந்தார். அவர் திருநாடு எய்தியதும் இங்கேதான். 

ஆடிப்பெருக்கு வைபவத்தின் போது -  பட்டுப்புடவை, வளையல், மஞ்சள் குங்குமம், தாம்பூலம்  - என அனைத்து மங்கலங்களையும் யானையின் மீது எடுத்து வந்து  -  காவிரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்.

ஸ்ரீரங்கநாதர் - காவிரிக்கு சீர் வழங்குவதாக ஐதீகம். 

அதேபோல,  ஸ்ரீரங்கநாதர் - சமயபுரம் மாரியம்மனுக்கும்  சீர் வழங்குகின்றார்.

ஓம் ஹரி ஓம்!..

16 கருத்துகள்:

  1. பூலோக வைகுந்தம்.. வைணவத்தில் கோயில் என்றால் அது திருஅரங்கம் தான்.
    வருடம் முழுதும் வைபவங்கள் நிகழும் திருத்தலம். எனினும் லட்சக் கணக்கான பக்தர்கள் திரள - மார்கழியில் வைகுந்த ஏகாதசி வெகு சிறப்பாக நிகழும் திருத்தலம்.//

    அற்புதமான செய்திகளுடன் அழகான படங்களுடன் நல்லதோர் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா!..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அழகான படங்களுடன் பூலோக வைகுந்தம் தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. ஸ்ரீரங்கநாதரின் சிந்தை நிறைக்கும் அற்புதமான படங்கள்!

    உண்மையில் பூலோக வைகுந்தம்தான். அரங்கனிடம் இதுவரை இரண்டு தடவை சென்று வந்தேன். அதுவே என் பாக்கியம்! அருமையான பதிவு!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தாங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. vai ku n tha m

    ku vai th aanatho !!

    subbu thatha
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பெருமாள் இருக்கும் இடம் எல்லாம் வைகுந்தம் தானே!..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. திருப்பாவையின் விளக்கத்துடன் , படங்களும் மிக மிக அருமை துரை சார்.
    படங்கள் அனைத்தும் தெய்வீகம் .படிக்காமல் விட்டுப் போன நேற்றையப் பதிவையும்
    படித்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..

      நீக்கு
  6. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களை அரங்கன் கண்டு கொள்வது இல்லை. அங்கும் காசேதான் கடவுளடா....!படங்களுடன் பகிர்சு அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர்..
    அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
    இவர்கள் தான் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்வதேயில்லை.
    ஐயா.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  8. அரங்கன் தரிசனம் அருமையாக இருந்தது.

    இங்கே தான் எத்தனை எத்தனை சிற்பங்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அரங்கமா நகருள்ளவனை அழகாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அரங்கன் அழகன் அல்லவா!..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..