திருமருகல்.
சோழநாட்டில் காவிரியின் தென் கரையில் உள்ள திருத்தலம்.
மஹாலக்ஷ்மி தவமிருந்து சிவபெருமானை தரிசித்த திருத்தலம்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம்.
சோழநாட்டில் காவிரியின் தென் கரையில் உள்ள திருத்தலம்.
இறைவனின் திருப்பெயர் - ரத்னேஸ்வரர்.
அம்பிகை - வண்டுவார்குழலி.
தலவிருட்சம் - வாழை.
தீர்த்தம்
- மாணிக்கத் தீர்த்தம்.
மஹாலக்ஷ்மி தவமிருந்து சிவபெருமானை தரிசித்த திருத்தலம்.
அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் விஷந்தீர்த்த
விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
அறுபத்து மூவருள் ஒருவரான கோச்செங்கட்சோழன் எழுப்பிய எழுபது மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று. யானை ஏற முடியாதபடி கட்டப்பட்ட பெருங் கோயில்.
மனம் ஒருமித்து - தன் அம்மான் மகனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி நங்கை ஒருத்தி வீட்டினின்றூம் வெளிப்பட்டாள்.
இரவுப் பொழுதில் இவ்வூரில் தங்கியிருந்த போது நாகம் தீண்டியதால் மணவாளன் மாண்டு போனான். துயரம் பொறுக்க இயலாமல் கதறி அழுதாள் உடன் வந்த மங்கை.
அப்போது திருமருகலில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்தார்.
அபலையின் அழுகுரல் கேட்டு - திருமடத்திலிருந்து வெளிவந்து - திருப்பதிகம் பாடி மாண்டு கிடந்த மணாளனை எழுப்பி - நங்கைக்கும் நம்பிக்கும் திருமணம் செய்வித்தருளினார்.
அதனால், இத்திருத்தலத்தை தரிசித்தால் - தடைப்பட்டுள்ள திருமணங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மேலும் இவ்வூரில் யாரையும் நாகம் தீண்டுவதில்லை என்பது ஆச்சர்யம்.

திருமருகல் திருத்தலத்திற்கு - நன்னிலம், நாகை, திருவாரூர்,
மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
திருச்சிற்றம்பலம்.
* * *
* * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..