வெள்ளி, ஏப்ரல் 24, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
சுவாமிமலை


தனன தனதன தனன தனதன
     தனன தனதன ... தனதான

குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ... பிறகான

குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு ... மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின ... முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர ... லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட ... வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு ... மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் ... குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 
நன்றி
கௌமாரம்


முருகா முருகா
முருகா முருகா
***

8 கருத்துகள்:

  1. மூவுலகையும் காக்கும் முத்துக்குமாறா...  முட்டாள் என்னையும் கடைத்தேத்து..

    பதிலளிநீக்கு
  2. முருகா சரணம்.

    சில நாட்களாக பகிர்வு படிக்க முடியவில்லை. இனித்தான் படிக்க வேண்டும்.

    இன்றுதான் ஊரிலிருந்து வந்தோம்.பாடசாலை லீவில் ஊர் சென்று வந்தோம் . அங்கு வெப்பம் அதிகம்.

    கோவில் தரிசனங்கள் கிடைத்தன. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    திருப்புகழ் பாடி முருகனை வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      விவரத்திற்கு நன்றி...

      எங்கிருந்தாலும் இறைவன் அருள் உண்டு...

      முருகா சரணம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நலமா.. ? பதிவு அருமை. திருப்புகழ் பாடலும், அழகான முருகனின் தரிசனமும், வேல் தரிசனமும் படித்து, கண்டு மகிழ்வடைந்தேன்.முருகா சரணமென்று அவனையே துதித்து வருகிறேன்.

    ஒரு மாதமாக நல்ல அலைச்சலுடன் ஊருக்கெல்லாம் சென்று வந்ததில், வலைப்பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    கடந்த சில தினங்களாக எபிக்கு மட்டும் வந்து அனைவரின் நலன்களையும் கண்டு களித்து, அங்கு பதிவைபடித்து வருகிறேன். இனி அனைவரின் பதிவுகளுக்கும் இறைவன் அருளால், எப்போதும் போல் வர முயற்சிக்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      விவரத்திற்கு நன்றி...

      தங்களது சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வும்..

      எங்கிருந்தாலும் இறைவன் அருள் உண்டு...

      முருகா சரணம்

      நீக்கு
  4. நல்லதே நடக்கட்டும்.

    திருப்புகழின் சுவை - அனைவரும் உணர ஏதுவாக... நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..