புதன், டிசம்பர் 31, 2025

மார்கழி 16

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 16

குறளமுதம்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.. 16

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.. 16
**
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.. 6

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்

திரு இடைமருதூர்

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை யீருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப் படுவார் போலும்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.. 6/16/2
**
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. மார்கழி 16 ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலுமே இன்று நேற்று வந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ஒரு சமயம் தோன்றும்..  அந்நாளைய கவிதைகளை, பாக்களை படிக்கிறோமே, ஏறத்தாழ இதே பாணியில்தான் பேச்சு வழக்கும் இருந்திருக்குமோ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..