நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 19
வெள்ளிக்கிழமை
குறளமுதம்
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.. 484
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.. 19
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருவெம்பாவை
ஃஃ
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.. 9
**
ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
நாணமுடை வேதியனும்
நாரணனும் நண்ணவொணாத்
தாணுஎனை யாளுடையான்
தன்னடியார்க் கன்புடைமை
பாணன்இசை பத்திமையாற்
பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக்
கோளிலி எம்பெருமானே.. 9
ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.. 9
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படித்தேன். வணங்கிக் கொள்கிறேன். நன்றி.
பதிலளிநீக்கு
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய குறளமுதம், அருளமுதம், திருவெம்பாவை,திருப்பதிகம் பாடல்கள் அனைத்தும் அருமை. நாராயணரையும், எம் பெருமான் சிவனாரையும் பணிந்து வணங்கிக் கொண்டேன். அவரருள் என்றும் குறையாது நமக்கு கிடைத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
பிரார்த்தனையும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் படித்து வணங்கினோம்.
பதிலளிநீக்குஅன்பின்
நீக்குவருகையும்
கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
ஓம் நம சிவாய
பதிலளிநீக்கு