ஞாயிறு, டிசம்பர் 01, 2024

அன்னாபிஷேகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை16
ஞாயிற்றுக்கிழமை


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி...  6/55/1 
-: திருநாவுக்கரசர் :-


அன்னாபிஷேகம் செய்விக்கப்பட்டதைப் போல வெள்ளிப் பனிப் பொழிவில் திளைத்திருக்கின்ற திருக்கயிலாயம்..
ஃஃ

சோமவார தரிசனத்திற்கென நாட்களை ஒதுக்கியதில் அன்னாபிஷேகப் படங்களைப் பதிவிடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது..

எந்தெந்தத் தலங்கள் என்பது தெரியவில்லை..

படங்கள் அனைத்தும் நண்பர்கள் அனுப்பியவை..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..







தஞ்சை ஸ்ரீ பெருவுடையார்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6/55/7
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. கயிலை மலையோனே ...
    தென்னாடுடைய சிவனே...

    எந்நாளும் எமக்கு அருள் புரிவாய்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. கயிலைக்காட்சிகள் காண்பதற்கு இன்பம் கண்டு வணங்கினோம்.
    கயிலை மலையானே போற்றி.

    அன்னாபிஷேகம் படங்கள் அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..