திங்கள், டிசம்பர் 23, 2024

மார்கழி 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 8 
திங்கட்கிழமை

குறளமுதம்

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.. 36


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.. 8
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே. . 8

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்

இமையாது உயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 8
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. வணக்கம் செல்வாண்ணா...   வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. இன்றைய குறளமுதம் நன்று. ஸ்ரீ கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரமும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, பாடல்களையும் பாடி பரவசமடைந்தேன். இறைவனை வணங்கி அவன் தாள் பணிந்து அனைவரும் நலமே வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும்
      மகிழ்ச்சி
      நன்றி

      ஓம் ஹரி
      ஓம் நம சிவாய

      நீக்கு
  3. பாடல்கள் பாடி வணங்கிக் கொண்டோம்.

    ஹரி ஓம். சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி
      நன்றி மாதேவி

      ஓம் ஹரி
      ஓம் நம சிவாய

      நீக்கு
  4. பாடல்கள் பாடி வணங்கிக் கொண்டோம்.

    ஹரி ஓம். சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  5. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  6. பாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி
      நன்றி

      ஓம் ஹரி ஓம்
      ஓம் நம சிவாய

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..