செவ்வாய், டிசம்பர் 17, 2024

மார்கழி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 2 
செவ்வாய்க்கிழமை

குறளமுதம்

வானின் றுலகம் வழங்கி வருதலால் 
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.. 11


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 2
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.. 2

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்ற எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 2

 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



8 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கக் கிடைத்த குறள்.

    சிவாய ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      சிவாய ஹரி ஓம்.

      நீக்கு
  2. பகிர்ந்த குறள், மற்றும் பன்னிரு திருமுறை பாடல்களை படித்து

    இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி
      ஓம் ஹரி ஓம்

      நீக்கு
  3. தரிசித்துக் கொண்டோம்.

    கயிலை மலையானே போற்றி .

    ஓம் ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குறளமுதம் அருமை. திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி பரவசமடைந்தேன். கயிலை மலையான் அனைவரையும் காத்தருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..