வெள்ளி, டிசம்பர் 27, 2024

மார்கழி 12

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 12
வெள்ளிக்கிழமை


குறளமுதம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.. 54

அருளமுதம்


ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.. 12
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்... 2

ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்

ஆடரவத் தழகாமை 
  அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் 
  துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று 
  பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் 
  கோளிலி எம்பெருமானே.  2


ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்

உற்ற வர்க்குத வும்பெரு மானை
  ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் தன்னைப்
  பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
  ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன் எம்மானைக்
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  2  
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..