செவ்வாய், நவம்பர் 05, 2024

தமிழ் மாலை 4

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 19
செவ்வாய்க்கிழமை

கந்த சஷ்டி
நான்காம் நாள்

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் தஞ்சை

தந்தன தானன ... 
தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ
விஞ்சுறு மாவுன .. தடிசேர
விம்பம தாயரு ... ளருளாதோ
நஞ்சமு தாவுணு .. மரனார்தம்
நல்கும ராவுமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

 பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
   சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
      வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே... 30
-: கந்தரலங்காரம் :-

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
-: கந்தரநுபூதி :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. அஞ்சன வேல்விழி மடமாதர் / அங்கு அவர் மாயையில் அலைவேனோ...   விஞ்சுறுமா உனதடி சேர விம்பமு தாயருள் அருளாதோ...நஞ்சை அமுதாக உண்ணும் அரனார்தம் நல்குமரா...  உமையருள் பாலா..  தஞ்சமென அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே... 

    முருகா.. முருகா... முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் எங்கு குமரன் கோவில் உள்ளது? சுவாமிமலை தவிர?

      நீக்கு
    2. இந்தத் திருப்புகழ் தஞ்சை பெரிய கோயில் முருகனைக் குறித்தது..

      தஞ்சை மா
      நகருக்குள்
      முருகன் கோயில்கள்
      பத்து உள்ளன

      கரந்தையில் மேற்கு நோக்கிய முருகன் கோயில்..

      ஆடி மாதத்தில் இவற்றைப் பற்றி பதிவு வெளியிட்டுள்ளேன்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இன்றைய கந்தரலங்காரப் பகுதி நம் மனத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இறைவனைப் பற்றிச் சிந்தை செய்யாமல் அழியும் பொருள்களாலான பெண்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் எங்கனம் கடைந்தேறுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை யும் இது தானே

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. "மாயையில் அலைவேனோ...."

    தஞ்சை மேவிய பெருமாளே வணங்குகின்றோம் உன்பாதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி

      நீக்கு
  4. முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா
      முருகா

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    கந்த சஷ்டி நான்காம் நாளுக்கான பதிவு அருமை. கந்தரலங்காரம் கந்தர் அநுபூதி பாடல்கள் நன்றாக உள்ளது. முருகன் அனைவரையும் நலமுடன் காத்து ரக்ஷிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா
      முருகா

      தங்கள்
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..