திங்கள், செப்டம்பர் 16, 2024

பாயசப் பெருமை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
திங்கட்கிழமை

இன்றொரு சமையல் குறிப்பு..


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில் விளைந்து கொண்டிருக்கும் சிறு தானியம்..

இதன் பெருமைகள் யாவருக்கும் தெரிந்ததே..


தினைப் பாயசம்  

தேவையான பொருள்கள்:

தினையரிசி  200 கி
பாசிப்பருப்பு  50 கி
கருப்பட்டி  250 கி
ஏலக்காய்  3
பசும்பால் 400 மிலி
தேங்காய்த் துருவல் சிறிதளவு
முந்திரி  15
உலர் திராட்சை  20
பசு நெய்  50 மிலி

செய்முறை :
தினை, பாசிப்பருப்பு  இவற்றை  சுத்தம் செய்து சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும்..

பாயசம் வைக்கும் முன்பாக  இரண்டீயும் சரிக்கு சரி தண்ணீரில் 15 நிமிடங்கள்
ஊற வைத்து பின் மிதமன சூட்டில் அடுப்பில் ஏற்றவும்..

வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை சற்றே சிவக்க வறுத்துக்  கொள்ளவும்.. 
( பொன்னிறமாக எப்படி டா வறுபடும் ?..)

ஏலக்காய்களை கல்லுரலில் இடித்துக் கொள்ளவும்..

பாலை மிதமான சூட்டில் வைத்து -
அரை வேக்காட்டில்  கொதிக்கின்ற தினையுடன்  சேர்த்துக் கிளறி விடவும்..

இடையில் கருப்பட்டியைத் தூளாக்கி - அளவான வெந்நீரில் கரைத்து வடிகட்டி தளதளத்துக் கொண்டிருக்கின்ற பாயசத்தில் ஊற்றி -

வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு தளதளத்து வரும்போது
இறக்கவும்..

தினைப் பாயசம்  செய்வதற்கு இன்னும் பற்பல வழிகள்...

ஏதோ - நாமும் நமது வித்தையை இங்கு காட்டினோம் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி..

கீழுள்ள காணொளியில் சொல்லப்படுவதைப் போல அப்பளத்துடன் தான்  தினைப் பாயசத்தைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை..

இன்றைய அப்பளங்கள் இரசாயனக் கலவைகள் என்பதை மனதில் கொண்டால் சரி..
**

காணொளிக்கு நன்றி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

இயற்கையே இறைவன்  
இறைவனே இயற்கை
***

15 கருத்துகள்:

  1. நல்ல குறிப்பு. நான் தினைப் பாயசம் சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவது செய்வதுண்டு...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு இனிப்புக்குத் தடா. செய்முறை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தச்ன் இருக்க வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு
      நன்றி ..

      நீக்கு
  3. சூப்பர் குறிப்பு துரை அண்ணா. ஆனால் கருப்பட்டி பயன்படுத்திச் செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது ஆனா பாருங்க...

    தினையைப் பயன்படுத்தி நிறைய செய்வதுண்டு இனிப்பு சமீபவருடங்களாகச் செய்வதில்லை. இருந்தாலும் ஒரு முறை கொஞ்சமா செய்துடலாம்.

    பெரும்பாலும் சிறுதானியங்கள்தான் நம்ம வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. தினை அரிசி பாயசம் செய்முறை அருமை.
    கருப்பட்டி போடாமல் வெல்லம் போட்டு செய்து இருக்கிறேன்.
    தேங்காயை பல் பல் லாக பொடி பொடி யாக நறுக்கி நெய்யில் வதக்கி போடுவோம். பல் சரியாக இல்லாதவர்கள் தேங்காய் பூ போடலாம். தேங்காய் சேர்த்தால் தனி ருசிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் செய்முறைக்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. தினை பாயசம் தித்திக்கிறது. அருமை.
    மாவிளக்கு போட்டாலே மிச்சம் இருக்காது இதில் பாயசம் பானை காலிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திணை பாயசம் செய்முறை குறிப்புக்கள் நன்றாக உள்ளது. பயத்தம் பருப்புடன் எந்த வகை தானியமும் சேர்ந்து கொள்ளும். இதில் கருப்பட்டி சேர்த்தது உடல் நலத்திற்கு உகந்ததுதான். காணொளியும் கண்டேன். உண்மையில் எந்த ஒரு பாயசத்துடனும், அப்பளம் நொறுக்கி சேர்த்து சாப்பிடுவது ருசியாகத்தான் இருக்கும். நாங்களும் முன்பு அப்படி சாப்பிட்டுள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  7. பாயசம் மனதையும் கவர்ந்தது. காணொளியும் கண்டேன். வீட்டில் இடப்பட்ட அப்பளத்துடன் இப்படி சாப்பிட்டு ருசித்ததுண்டு. பாயசமும் அப்பளமும் கலந்த சுவை - அது ஒரு தனி சுவை…

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..