புதன், செப்டம்பர் 25, 2024

சோயா 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 9 
புதன் கிழமை


சோயா சக்கை
Meal Maker

புலால் உணவுக்கு மாற்று  என்று சொல்லி விற்கப்படுகின்றது..

சிலர் இதனையும்
வக்கணையாக சமைத்துக் கொடுத்து கல்லா கட்டுகின்றனர்.. 

மக்களும் உமிழ் நீர் ஒழுக Veg Mutton  என்றும் Veg Chicken என்றும் சோயா சக்கையை உண்டு மகிழ்கின்றனர்..

சரி.. 

சோயாவின் சக்கை தான் Veg Mutton, Veg Chicken என்றால், 

Veg இரத்தம் எங்கே.
Veg குடல் எங்கே..

Veg எலும்பு எங்கே டா..
Veg எலும்பு எங்கே?..

விரைவில் இப்படி எல்லாம் கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் பிறக்கின்றது..

ஆனால் எந்த உணவும் எதற்கும் ஈடு கிடையாது,

இது இது தான்..
அது அது தான்!..

சோயா சக்கை (Meal Maker) மனிதருக்கு நல்லதா... கெட்டதா?..

நலம் தருமா?.. நலிவைத் தருமா?..

இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.. என்றாலும்,


Meal Maker என்று அறியப்படுகின்ற சோயாவின் சக்கை -
குறிப்பாக புரோட்டீன் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு உகந்தது என்றொரு பொதுவான கருத்து..

Meal Maker ல் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியன ஓரளவுக்கு எச்சமாக உள்ளன. 

இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு  நல்லது தான்.. 

இவை  உடலில் உள்ள
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பினை  அதிகரிக்கின்றன..


(புரதமும் அதன் விளைவாக) புலால்
ருசியும் அதிகமாகக் காணப்படுவதால், தினமும் இதனை  உண்பவர்கள் இருக்கின்றார்கள்.. 

தினமும் Meal Maker உண்பதால் அதாவது அளவுக்கு மிஞ்சியதாக அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலை மாறிவிடும்.

இதனால் இளம் பெண்களுக்கான ஒழுங்கமைவு சீர் கெடுகின்றது.. ஆண்களுக்கு ஹார்மோன்  தடுமாற்றம்
 ஏற்படுகின்றது... 

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்ற அபாயமும் ஏற்படலாம்..

Meal Maker ல் புரதம் மட்டுமே அதிக அளவில் காணப்படுவதால்  உடலில் மற்ற ஊட்டச் சத்துகளின் குறைபாடு நிச்சயம் ஏற்படும்
என்றும் சொல்லப்படுகின்றது

எந்த வகையான உணவு ஆனாலும் அளவுடன் உண்பதே   சிறப்பு.  

நாக்கு ருசியின் 
காரணமாக ஒரே வகையான உணவை  நாள்தோறும் அதிக அளவில் தின்று தீர்ப்பது நல்லதல்ல ... 

ஒரு நாளில் 25 முதல் 50 கிராம் மட்டுமே Meal Maker உண்ணலாம் என்கின்றனர் ஊட்டச் சத்து வல்லுநர்கள்... 

தொகுப்பில் துணை -
இணையம்.. நன்றி..


இந்த அளவில் -  
ஏதோ ஒரு நினைப்புடன்
வாரத்தில் இரண்டு நாட்கள் ...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..

சொல்றது எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. 

ஆனா, மனக் குரங்கு கேட்கணுமே!..

கேட்கவா போகின்றது?..

நான் ஆரோக்கியமாக இருந்த நாளிலேயே இதிலிருந்து ஒதுங்கி விட்டேன்.. ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது..  

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்..

 படங்களுக்கு  நன்றி
கூகிள்

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
***

13 கருத்துகள்:

  1. என் இளையவன் மீல் மேக்கர் ரசிகன்.  அவனே கடைக்குப் போகும்போது கொஞ்சம் வாங்கி வந்து வைத்து விடுவான்.  அவன் மட்டும்தான் அதைச் சாப்பிடுவான் என்பதால் பாஸ் எப்போதாவதுதான் அதைச் செய்வார் என்பது அவன் குறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைத்துக் கொள்ளவும்... அதுதான் நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அது என்ன வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்தாலும் அதன் சவுக் சவுக் தன்மை மாறாது இருக்கும்.  ஒருவித வாடையும் இருக்கும்.  .இந்த இரண்டு காரணங்களால் எனக்கு அது பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... எல்லாம் ஒரு கணக்குத் தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. சோயா சங்க்ஸ் என்கிற பெயரில் வடக்கில் கிடைக்கிறது. அலுவலக உணவகங்களில் வாரத்திற்கு ஒரு முறை இதனைச் சேர்த்து செய்வார்கள். ஒன்றிரண்டு முறை சாப்பிட்டு இருக்கிறேன். அவ்வளவாக பிடிக்காது என்பதால் வீட்டில் வாங்கி செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்யாத வரைக்கும் நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. வாரத்தில் ஒருநாள் எங்கள் வீட்டில் செய்கின்றோம்.

    காளான் உணவும் இடையிடையே .எனக்கு சிப்பிக் காளான் மணம் பிடிப்பதில்லை சாப்பிட மாட்டேன்.மொட்டுக் காளான் சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காளான் உண்டதில்லை...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை எனக்கு இந்த உணவைப்பற்றிய விபரங்கள் இதுவரை தெரியாது. இதை என்றோ ஒருநாள் உறவின் மூலம் அறிந்த போதும் இதன் சுவை எனக்கு பிடிக்காத காரணத்தால், இதை வேண்டாமென தவிர்த்தேன். இதன் கெடுதல்கள் பற்றி இப்போது அறிந்து கொண்டேன். நல்ல பல உணவுகளேயே நாம் அன்றாடம் பயன்படுத்தாமல் இருக்கும் போது இது எவ்விதம் பொதுவாக வீடுகளில் தினசரி இடம் பெறும்..? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோயா பீன்ஸ் , எண்ணெய் நல்லது...

      இது வேண்டாம்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  6. எந்த உணவு ஆனாலும் அளவோடு உண்பது நல்லதுதான்.
    எனக்கு பிடிப்பது இல்லை அதனால் நான் வாங்குவது இல்லை.
    நன்மை, தீமை பற்றி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  7. வாங்காத வரைக்கும் நல்லது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா, உணவு என்ன உணவாக இருந்தாலும் அளவோடுதான் உண்ண வேண்டும். புரதம் உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் கூட அளவு உண்டு. புரதம் கூடினாலும் நல்லதல்ல. நம் வீட்டில் மீல் மேக்கர் வாங்குவதில்லை. அதற்குப் பதில் இருக்கவே இருக்கு ராஜ்மா பீன்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..